வியாழன், டிசம்பர் 01, 2011

வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது!!!


தங்கத்தின் விலை இன்று பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.2728-க்கும், ஒரு பவுன் ரூ.21,824-க்கும் விற்பனையானது. இன்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து வரலாறு காணாத வகையில் பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது.
 
இன்று பவுனுக்கு ஒரே நாளில் ரூ.280 அதிகரித்து ரூ.22,104 ஆக உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.2,763 ஆக விற்கப்பட்டது. கடந்த 25-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2683-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.21,464-க்கும் விற்கப்பட்டது. 5 நாளில் ரூ.780 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏழைகளுக்கு அரிதான பொருளாக மாறிவிட்டது. இதனால் பெண்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதாலும் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
 
மேலும் உள் நாட்டில் தங்கத்தின் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை உயரும்போது ரூ.300, ரூ.400 என உயர்த்துகிறார்கள், குறையும்போது ரூ.20, ரூ.30 என குறைக்கிறார்கள் என்று நகை வாங்க வந்த பெண்கள் குமுறலுடன் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக