திங்கள், டிசம்பர் 19, 2011

இந்திய உணவுக் கழக கிடங்குகளில் 1 இலட்சம் டன் உணவுப் பொருள் வீண்: அமைச்சர் ஒப்புதல்

FCI godownஇந்திய உணவுக் கழகத்தின் (Food Corporation of India )கிடங்குகளில் மட்டும் இந்த நிதியாண்டில் இதுவரை 87,000 டன் அளவிற்கு உணவுப் பொருட்கள் ஈரத்தாலும், எலி, பறவைகள் தின்றதாலும், பொதுவான அழிவுகளினாலும் வீணாகியுள்ளது என்று உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியுள்ளார்.மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளிக்கையில் இத்தகவலைத் தெரிவித்த அமைச்சர் தாமஸ், 2008-09ஆம் நிதியாண்டில் 0.58 இலட்சம் டன்னாக
இருந்த உணவுப் பொருள் வீணாதல் அளவு, 2009-10இல் 1.31 இலட்சம் டன்னாகவும், 2010-11இல் 1.56 இலட்சம் டன்னாகவும் இருந்ததென்றும், இந்த நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரை இந்த வீணாகியுள்ள உணவுப் பொருட்களின் அளவு 87,000 டன் என்றும் கூறியுள்ளார். 

“உணவுப் பொருட்கள் ஈரத்தால் பாழாவதும், நீண்ட காலம் வைத்திருப்பதால் எலிகள் தின்பதாலும், பல முறை தொழிலாளர்களால் கையாளப்படுவதால் ஏற்படும் சிதறலும்தான் இதற்குக் காரணம்” என்று அமைச்சர் தாமஸ் கூறியுள்ளார்.

ஆண்டுக்கு ஆண்டு இப்படி உணவுப் பொருட்கள் வீணாகிவருவது அதிகரித்து வரும் நிலையில், “அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக” அமைச்சர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக