வெள்ளி, டிசம்பர் 14, 2012

கௌசியா பள்ளிவாசலை இடித்தது தவறு! : ஒப்புக்கொண்டு "முட்டி போட்டது" "DDA !

டெல்லி "மெஹர்வலி"யில் "கௌசியா பள்ளிவாசலை" இடித்தது தவறு, என ஒப்புக்கொண்ட "DDA" நிர்வாகம், அதை உடனடியாக கட்டிக்கொடுக்கும் வேலையை இன்று துவக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட பள்ளிவாசலின் இடிபாடுகளை பொருட்படுத்தாமல், தொடர்ந்து 5 வேலை தொழுகையும் வழக்கம்போல் நடந்து வருகிறது. DDA (Delhi Development Authority) அலுவலகத்தை முற்றுகையிட்டு, முஸ்லிம் தலைவர்கள் போராடியதன் விளைவாக ஆவணங்களை சரிபார்த்த "DDA" அதிகாரிகள், இது "வக்ப் வாரியத்துக்கு சொந்தமான நிலம்" என்பதை
ஒப்புக்கொண்டதுடன் "போர்க்கால அடிப்படையில்" பள்ளிவாசலை கட்டி கொடுக்கவும் "உத்தரவாதம்" அளித்தனர். எனினும், 23 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நிலத்தை "DDA" கையகப்படுத்த உத்தேசித்து "நோட்டிபிகேஷன்" வெளியிட்டபோதே "வக்ப் வாரியம்" ஆட்சேபனை செய்திருந்தால், நிலைமை இந்தளவிற்கு சென்றிருக்காது, என வக்ப் வாரியத்தின் மீது குற்றம் சொல்கின்றனர், மாநகராட்சி அதிகாரிகள்.
பள்ளிவாசலை கட்டிக்கொடுப்பதுடன் நில்லாமல், இடிக்கப்பட்ட வீடுகளையும் கட்டிக்கொடுக்க வேண்டும் எனக்கூறுகின்றனர், முஸ்லிம் தலைவர்கள்.
"கரீப் நவாஸ் பௌண்டேஷன்" தலைவர் மவுலானா அன்சார் ரசா, உள்ளிட்ட முஸ்லிம் பிரமுகர்கள், உள்ளூர் எம்.எல்.ஏ. யோகானந்த சாஸ்திரியை சந்தித்து-பிரச்சினையை எடுத்துக்கூறி, அவரது ஏற்பாட்டின் பேரில்" முதலமைச்சர் ஷீலா தீட்சித்"தையும் சந்தித்தனர்.
டெல்லி சிறுபான்மை ஆணையத்தலைவர், சப்தர் அலி கான் கூறும்போது:
DDAவின் இந்த அராஜகத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று சொன்னதுடன், இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் விரைந்து கட்டிக்கொடுக்க துணை நிற்பதாக வாக்களித்தார்.

சமாஜ்வாடி கட்சியின் கமால் பாரூக்கி:
பள்ளிவாசல் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள குடியிருப்புக்கள் அனைத்தும் சட்ட பூர்வாமானவை என்பதுடன், ஆண்டாண்டு காலமாக குடிநீர் வரி உள்ளிட்ட வரி வகையறாக்களை செலுத்திவரும் மக்களை அப்புறப்படுத்த முடியாது,என்றார்.
இதற்கிடையில், இன்று காலை 11 மணிக்கு  முஸ்லிம் தலைவர்கள் "பத்திரிக்கையாளர்" சந்திப்பை நடத்தி விவரங்களை எடுத்துக்கூறி, அரசின் கவனத்தை ஈர்க்கவுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக