வியாழன், டிசம்பர் 08, 2011

பாகிஸ்தான் அதிபருக்கு மாரடைப்பு - துபையில் சிகிச்சை

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஸர்தாரி தனது அதிபர் பதவியில் இருந்து விலக இருப்பதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்று அவருடைய கட்சியைச் சார்ந்த மூத்த உறுப்பினர் பௌசியா வஹாப் தெரிவித்துள்ளார். 

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. பாகிஸ்தானில் அமைதியின்மையை ஏற்படுத்த இவ்வாறு செய்திகள்

பரப்பப்படுவதாக பௌசியா குறிப்பிட்டார். சிகிச்சைக்காக நேற்று (06.12.2011)பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஸர்தாரி துபை சென்றுள்ளார். துபையில் இருக்கும் அவருடைய குழந்தைகளின் வற்புறுத்தலின் காரணமாக அவர் துபையில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. 

லேசான மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸர்தாரியின் ஆலோசகர் முஸ்தபா கோகர் தெரிவித்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பும் அவருக்கு இவ்வாறு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஸர்தாரியின் உடல் நிலை சீராக உள்ளதாக அவருடைய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக