திங்கள், டிசம்பர் 05, 2011

ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு ஈராக் மண்ணை அனுமதிக்கமாட்டோம் – நூரி அல் மாலிகி


பாக்தாத்:ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதலுக்கு ஈராக் மண்ணை எவருக்கும் அனுமதிக்கமாட்டோம் என ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி தெரிவித்துள்ளார். ஈரான் ஈராக்கின் எதிரி நாடல்ல. ஆதலால் ஈரானுடன் பகை கொண்ட நாடுகள் இருந்தால் அவர்களின் பகையை தீர்க்க எங்களுடைய மண்ணை அனுமதிக்கமாட்டோம் என மாலிகி கூறுகிறார். அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடனின் அறிக்கைக்கு பதிலளித்துள்ளார் நூரி அல் மாலிகி. ராணுவத்தை வாபஸ் பெற்றாலும் ஈராக்கில்
ஈரானின் தலையீட்டை உறுதிப்படுத்துவதை தடுக்க அமெரிக்கா தலையிடும் என ஜோ பைடன் கூறியிருந்தார்.
இதற்கிடையே பாக்தாதின் மிக பாதுகாப்பு நிறைந்த க்ரீன் சோனில் நடந்த குண்டுவெடிப்பு தன்னை குறிவைத்து நடத்தப்பட்டது என மாலிகி கூறினார். கடந்த திங்கள்கிழமை பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக