வெள்ளி, டிசம்பர் 16, 2011

முல்லை பெரியார் விவகாரம் : 3ஆயிரம் அடி மலை உச்சியில் 200 பேர் நின்று தற்கொலை மிரட்டல்

கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன், 3 ஆயிரம் அடி உயரமுள்ள மலை உச்சிக்கு சென்ற மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர், இன்னமும் கீழே இறங்கவில்லை. மலை உச்சிக்கு காவல்துறையினர் வந்தால், உடனடியாக அங்கிருந்து குதித்து விடுவோம் என போராட்டக்காரர்கள் ஏற்கனவே எச்சரித்து இருந்தனர். இதனால், மலை உச்சியில் இருப்பவர்களின் உறவினர்களோடு, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கேரளப் பகுதியில் உள்ள தமிழர்கள் தாக்குப்படுவது, நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே, போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கை. இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்றும், அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, தேனி மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுமார் 200 பேர் நேற்று காலையில், சக்கனகுண்டு மலை உச்சிக்கு சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக