வெள்ளி, டிசம்பர் 16, 2011

பாப்வா நியூகினியா:ஒரு நாடு இரு பிரதமர்கள் !


ஆஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள சிறிய தீவு நாடான பாப்வா நியூகினியாவில் இரண்டு பிரதமர்கள் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது அங்கு சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.
சர் மைக்கேல் சொமாரே பல முறை அந்நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். கடைசியாக 2002 ஆம் ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக இந்த ஆண்டு பல மாதங்கள் அவர் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் ஓய்வெடுத்து வந்தார்.
ஐ நா மன்றத்தில் பீட்டர் ஓ நீல்
அவர் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வராமல் இருந்த காரணத்தால் அவரது நாடாளுமன்ற இடம் வெற்றிடமாக அறிவிக்கப்பட்டு, நாட்டின் பிரதமராக பீட்டர் ஓ நீல் நியமிக்கப்பட்டார்.
தற்போது சர் மைக்கேல் சொமாரேயின் உடல் நலம் முன்னேறியுள்ள நிலையில், பாப்வா நியூகினியா நாட்டின் உச்சநீதிமன்றம் அவர் மீண்டும் பிரதமராக பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால் பீட்டர் ஓ நீலோ பதவி விலக மறுக்கிறார். இதனால் நாட்டில் ஒரே சமயத்தில் இரண்டு பிரதமர்கள் என்கிற நிலை தோன்றியுள்ளது.
நாட்டின் தலைநகர் போர்ட் மோஸ்பையில் போலீசார் சில துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதை அடுத்து, அனைவரையும் அமைதி காக்கும்படி ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் கெவின் ரட் வேண்டியுள்ளார்.
பீட்டர் ஓ நீல் அவர்களுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் வேறு சில அரசியல்வாதிகளின் ஆதரவு உள்ளது.
இராணும மரியாதையுடன் மைக்கேல் சொமாரே
ஆனால் சர் மைக்கேல் சொமாரே அவர்களோ நாட்டின் பிரதமர் பதவி காலியாக இல்லை என்று கூறுகிறார்.
பாப்வா நியூகினியாவின் அரசியலை ஒரு குழப்பமான, அதே நேரத்தில் ஆர்வத்தை தூண்டும் ஒன்றாக வர்ணிக்கலாம்.
ஊழல்களும் மோசடிகளும் அங்கு சர்வ சாதாரணம்.
ஆனால் இயற்கை வளங்கள் மிகுந்த ஒரு நாடு. சர் மைக்கேல் சொமாரே பல தசாப்தங்கள் நாட்டில் ஆளுமை செலுத்தி வந்தார்.
இப்படியான சூழலில், நீதிமன்றங்கள் சொமாரே அவர்களுக்கு ஆதரவாக தீர்பபளித்துள்ள நிலையில், இரு பிரதமர்களுக்கு இடையே பதற்றத்துடன் கூடிய ஒரு மோதல் என்று கூறப்படும் ஒரு நிலையே தொடருகிறது.
இதன் முடிவு எப்படி இருக்கும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக