இஸ்லாமாபாத், : ஆளில்லா போர் விமானம் மூலம் குண்டு வீச பயன்படுத்தும்ராணுவ தளத்தை உடனே காலி செய்ய அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேட்டோ படை தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 28 பேர் பலியான விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது.
வடமேற்கு பாகிஸ்தானில் ஆப்கன் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் முகாம் என நினைத்து, பாகிஸ்தான் ராணுவ சோதனை சாவடி மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை குண்டு வீசியது. அதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 28 பலியாகினர். இதனால், இரு நாடுகள் உறவில் பதற்றம் நீடிக்கிறது. பாகிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.இந்த தாக்குதல் பற்றி கேள்விப்பட்டதும்

நேட்டோ படைக்கு டீசல் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அனுப்புவதை பாகிஸ்தான் அரசு நிறுத்தியது. ஆப்கனுக்கு செல்லும் வழிகளும் தடுக்கப்பட்டன.
இந்த நிலையில், பாகிஸ்தானின் மலைப் பகுதிகள் மீது அமெரிக்க படைகள் ஆளில்லா விமான தாக்குதல் (ட்ரோன்) நடத்த பயன்படுத்தும் ஷாம்சி ராணுவ தளத்தை உடனடியாக காலி செய்யுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.இதை உறுதி செய்த வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர், ‘‘பாகிஸ்தான் மக்கள் கொதித்துள்ளனர். கூட்டாளி படையால் எங்கள் வீரர்கள் கொல்லப்படுவதை சகிக்க முடியாது. இதுவரை 72 வீரர்களை இழந்தோம். அதற்கு மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. எனவே, மன்னிப்புக்கு மேல் ஏதாவது நடந்தாக வேண்டும்’’ என்றார்.இதற்கிடையே, ஆப்கனில் 5ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்குமாறு அமெரிக்கா, ஆப்கன் அரசுகள் விடுத்த வேண்டுகோளை பாகிஸ்தான் பிரதமர் கிலானி நிராகரித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு அழைப்பு
அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கொதித்துள்ள நிலையில், இந்த சிக்கலில் இருந்து மீள அமெரிக்காவுடன் சமரசத்துக்கு இங்கிலாந்து உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுள்ளது. இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக்குடன், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா, போனில் பேசி உதவி கேட்டதாக லண்டனில் உள்ள பாக். தூதர் வாஜித் சம்ஷுல் ஹசன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக