ஞாயிறு, டிசம்பர் 11, 2011

ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லையில் அத்து மீறி உள்ளே நுழைந்தால் சுட்டு தள்ள கேரளா அரசு அதிரடி உத்தரவு


அத்துமீறி நுழையும் ஆர்ப்பாட்டக்காரர்களை கண்டதும் சுட கேரள போலீசார் உத்தரவுதேனி மாவட்டம், கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் பல்வேறு கிராம மக்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நேற்று குமுளி பகுதிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர்.
தமிழக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியும் அவர்கள் தடையை மீறி செல்ல முயன்றனர்.
 
குமுளி பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சுமார் 4 ஆயிரம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது கல் வீசியதாக தெரிகிறது.
 
இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையின் உள்ளே நுழைந்தவர்களில் 10 பேர் மலைப்பாதை வழியாக கேரளாவுக்குள் உள்ள ரோசாப்பூ கண்டம் பகுதியில் புகுந்து விட்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்த ஒரு மலையாளி வீட்டை தாக்கியதாக கூறப்படுகிறது.
 
இதைப் பார்த்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு 10 பேரையும் பிடிக்க வந்தனர். உடனே அவர்களில் 6 பேர் தப்பி ஓடி தமிழக பகுதிக்கு வந்து விட்டனர். 4 பேர் கேரள பகுதி மக்களிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களை பொதுமக்கள் கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
 
இதன் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டது. தப்பி வந்த 6 பேர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருந்தது. அவரை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கேரளாவில் உள்ள குமுளி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்தால் அவர்களை கண்டதும் சுட இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக