புதுடெல்லி : வீட்டின் அருகில் உள்ள வேறு வங்கி ஏடிஎம்மில் 5 முறை பணம் எடுத்தாச்சு. மாத கடைசியில் ரூ.20 சேமிக்க, கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம் தேடி போகிறீர்கள்... இனி, அது அவசியமில்லை. ஏனெனில், எந்த ஏடிஎம்மில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் இனி கட்டணம் செலுத்த நேரிடும். இதற்கான பரிந்துரை யை மத்திய நிதி
அமைச்சகத்தின் நிதி சேவை பிரிவு செயலர் மிட்டல் தலைமையிலான பேமென்ட் சிஸ்டம் ஆலோசனை குழு அளித்துள்ளது.
அதுபற்றி நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. கணக்கு வைத்துள்ள வங்கி இப்போது ஆண்டுக்கு ரூ.99 வரை ஏடிஎம் சேவைக்கு கட்டணம் வசூலிக்கிறது. எனவே, அதன் ஏடிஎம்கள் முற்றிலும் இலவசம். மற்ற வங்கி ஏடிஎம்களை மாதத்துக்கு 5 முறை மட்டும் இலவசமாக பயன்படுத்தலாம். கூடுதலானால் ரூ.20 கட்டணம் என்பது நடைமுறையில் இருக்கிறது.
இந்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அமல்படுத்தினால், கணக்கு வைத்துள்ள வங்கி உட்பட எல்லா ஏடிஎம்களிலும் பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்படும். எனினும், அது ஆன்லைன் தொகை பரிமாற்றத்துக்கு பெறப்படுவதுபோல குறைவான கட்டணமாக இருக்கும். ஆன்லைன் தொகை பரிமாற்றத்தில் வங்கிகள் ரூ.1 லட்சம் வரை ரூ.6 கட்டணம் வசூலிக்கின்றன. அதுபோல ஒவ்வொரு முறை ஏடிஎம் பயன்படுத்தவும் சிறிய கட்டணம் பிடித்தம் செய்யப்படும். எனவே, ஆண்டு கட்டணத்தை வங்கிகள் கைவிடும் என்று தெரிகிறது.
இதனால், ஏடிஎம் பயன்பாடு கட்டுப்படுத்தப்படுவது மட்டுமின்றி வங்கிகள் கூடுதல் ஏடிஎம்களை திறக்க நிதி ஆதாரம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை குழுவின் பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகம் ஏற்பதை பொருத்தே இது நடைமுறைக்கு வரக்கூடும்.
u ஏடிஎம் பண பரிமாற்றத்தில் வங்கிகள் இடையேயான கட்டணத்தை (இன்டர்-பாங்க் சார்ஜ்) கைவிட குழு வலியுறுத்தியுள்ளது. வழக்கமான வங்கி பெயருடன் ஏடிஎம் வழங்குவதை தவிர்த்து அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான வெள்ளை ஏடிஎம் வெளியிட பரிந்துரைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக