வெள்ளி, டிசம்பர் 02, 2011

சிரியா: போராளிகளை விடுதலை ஆசாத் அரசு முடிவு ! ! !


கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர சிரியாவில், கைதிகள் விடுதலைசிரியாவில் அதிபர் பஷார் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் கலவரமாக மாறியது. எனவே கலவரத்தை அடக்க ராணுவம் சுட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர அரபு யூனியன் நாடுகள் சிரியா அதிபர் அசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது, அவர் தான் பதவி விலக ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.  
 
அதை தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளும் சிரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. அரபு நாடுகளும், துருக்கியும் பொருளாதார தடை விதிக்க போவதாக மிரட்டியுள்ளன.
 
இதற்கிடையே, ஆசாத் பதவி விலக கோரி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. எனவே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சிறை கைதிகளை சிரியா அரசு விடுதலை செய்து வருகிறது.
 
போராட்டத்தில் ஈடுபட்ட 1700 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் டமாஸ்கஸ் நகர சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக