புதன், டிசம்பர் 14, 2011

மலேசிய விமான நிலைய அறிவிப்புகளில் தமிழை சேர்க்க கோரிக்கை

மலேசியாவிலுள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய அறிவிப்புகளில் தமிழும் இடம்பெற வேண்டும் என்று மலேசிய முன்னாள் இணை அமைச்சர் முருகையா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவிலிருந்து சுற்றுலாவரும் பயணிகளுக்கு பயனாக இருப்பதோடு அங்குள்ள 1.8 மில்லியன் மலேசிய இந்தியர்களையும் அங்கீகரித்த மாதிரி இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய அறிவுப்புகளை தமிழில் அறிவிக்கும் திட்டம் எதுவுமில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி முன்னாள் இணை-அமைச்சர் முத்தையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலேசிய விமானநிலையங்களில் மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிவிப்புகள் சொல்லப்படுகின்றன. சீசன் காலங்களில் அரபு, சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் அறிவிப்புகள் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக