பொகோட்டா : தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. வடக்கு பகுதியில் உள்ள லா குரூஸ் நகரில் மழை காரணமாக நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூன்று வீடுகள் புதைந்தன. அங்கு வசித்த 18 பேர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிலச்சரிவு காரணமாக ரோடுகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடும் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் இருக்கும் இடங்களில் வீடுகளை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் அங்கு ஓடும் மயோ ஆற்றில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் நீடித்து வரும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது. 125 பேர் காயமடைந்துள்ளனர். பலரை காணவில்லை. 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக