வியாழன், டிசம்பர் 08, 2011

குவைத்தில் பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியதை அடுத்து, தற்போது நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள குவைத் மன்னர் Sheikh Sabah al-Ahmad, பொதுத் தேர்தல் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் தேர்தல் தேதியை அவர் குறிப்பிடவில்லை. எனினும் குவைத் அரசியல் சட்டப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எண்ணெய் வளமிக்க குவைத் நாட்டின் பிரதமரான Sheikh Nasser al-Mohammad மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவர் கடந்த மாதம் பதவி விலகினார். இதனால் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலை நடத்தவுள்ளதாக குவைத் மன்னர் விளக்கமளித்ததுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக