வெள்ளி, டிசம்பர் 09, 2011

எகிப்தில் பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை

எகிப்து: எகிப்தில், பிரதமர் கமல்  அல் கன்சோரி தலைமையிலான புதிய அமைச்சரவை, பதவி ஏற்றுக் கொண்டுள்ளது. கெய்ரோவில் நடைபெற்ற விழாவில், புதிய அமைச்சர்களுக்கு ராணுவ நிர்வாகக் குழுவின் தலைவர் முஹமத் ஹுஷேன் , பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எகிப்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் வரை,
இந்தப் புதிய அரசு, தற்காலிகமாக ஆட்சிப் பொறுப்பை கவனிக்கும். பொருளாதாரம், உள்நாட்டு பாதுகாப்பு ஆகிய இரு பிரச்னைகளை தற்காலிக அரசு சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

இந்நிலையில், கமல்  அல்  கன்சோரி  ராணுவ ஆதரவாளர் என்பதாலும், முந்தைய முபாரக் ஆட்சிக் காலத்தில், 1990-களில், பிரதமராக இருந்தவர் என்பதாலும், இவருக்கு போராட்டக்காரர்களிடையே எதிர்ப்பு காணப்படுகிறது. எகிப்து அதிபராக இருந்த முபாரக், கடந்த பிப்ரவரி மாதம், ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், முஹமத்  ஹுஷேன்  தான், அரசு நிர்வாகத்தை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக