வெள்ளி, டிசம்பர் 02, 2011

அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான்: அந்தமான் அருகே நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 5 .8 ஆக, பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், பெரியளவில் எந்த பாதிப்புகளும்
இல்லை என்றும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறினர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்நிலநடுக்கத்தினால் உயிர்ச் சேதங்களோ, பொருட் சேதங்களோ, ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்காள விரிகுடாவின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நிகோபரில், மொத்தம் 22 தீவுகள் உள்ளன.

ஆனால், 12 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள். இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிற, நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக