டெஹ்ரான்:இஸ்லாமிய குடியரசான ஈரானை தாக்க முற்பட்டால் இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சரும் பிரிகேடியருமான ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார்.வாஹிதி கடந்த ஞாயிறு அன்று ஈரானுக்கு எதிராக போர் தொடுத்தால் இஸ்ரேல் பிழைக்க குறைந்த வாய்ப்பே இருக்கும் என்றும் ஈரான் ஆயிரக்கணக்கான
ஏவுகணைகளை இஸ்ரேலின் மீது ஏவும் என்றும் கூறியுள்ளதாக பார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் இஸ்ரேல் எத்தனை போர் கப்பல்களை மற்றும் போர் தளவாடங்களை இழக்க தயார்செய்து வைத்துள்ளது என்ற கேள்விக்கு முதலில் அவர்கள் பதில் கூறட்டும். எதற்காக இந்த ஜியோனிச நாடு எங்களை பயமுறுத்திப் பார்க்க நினைக்கின்றது. எங்கள் நாட்டின் மீது போடா எத்தனை ஏவுகணைகளை தயார் செய்து வைத்துள்ளது 10,000? 20,000? 50,000? 100,000? அல்லது 150,000 ? என்று அவர் கேட்டுள்ளார்.
போர் தொடுப்பதற்கு முன்னர் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் எங்கள் பலத்தை முதல் தெரிந்துக் கொள்ளட்டும். மேலும் அவர் போர் தொடுத்தால் நாங்கள் அமெரிக்காவிற்கு உண்மையான போர் எப்படி இருக்கும் என்றும் ராணுவ வீரர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றும் பாடம் புகட்ட தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வாஹிதி கூறியதாவது; ‘ஈரானின் ராணுவம் எங்கள் நாட்டினுடைய இறையாண்மையை காக்க ஒருபோதும் தயங்காது என்றும் இந்த ஜியோனிச நாடு மீண்டும் மீண்டும் ஈரானை பயமுறுத்த முற்பட்டால் ஈரானின் “பாசிஜ் ராணுவம்” அதற்கு பழி தீர்க்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டி டெஹ்ரான் மீது போர் தொடுக்கப் போவதாக கூறிவருகிறது. ஆனால் ஈரானோ இந்த குற்றக் சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து வருவதுடன் தாங்கள் அணு ஆயுத தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்து இட்டுள்ளதால் அது போன்று எந்த அணுஆயுதமும் தயார் செய்யவில்லை என்றும் மேலும் சர்வதேச அணு சக்தி நிறுவனத்தில் உறுப்பினராக இருப்பதாகவும் எனவே ஆக்கப் பூர்வமான காரியங்களுக்காக அணு தொழிநுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள தங்களுக்கு அனுமதி உண்டு என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல்தான் அணு ஆயுத தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்து போட மறுத்து வருவதாகவும் சர்வதேச அணு சக்தி நிறுவனம் இஸ்ரேலில் சென்று சோதனை மேற்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் சமீபத்தில் அணுஆயுதத்தை சுமந்து சென்று தொலை தூரத்தை தாக்கும் ஏவுகணையை தயாரித்து சோதனை செய்துள்ளதாகவும் அது 10,000 கிலோ மீட்டர்கள் வரை சென்று தாக்கக்கூடிய தன்மையுடையதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற அனுஆயதம் ஏற்றிசெல்லும் ஏவுகணைச் சோதனைகள் ஏன் மேற்குலகிற்கு ஆபத்தானதாக தெரியவில்லை? என்றும் ஈரான் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக