வெள்ளி, டிசம்பர் 09, 2011

மருத்துவமனை தீவிபத்து - 56 சடலங்கள் மீட்பு!

கொல்கத்தாவில் தீ விபத்து ஏற்பட்ட அம்ரி மருத்துவமனையிலிருந்து 56 சடலங்கள் மீட்கப்பட்டதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

அம்ரி மருத்துவமனையில் மருந்துப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கீழ்ப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்து அக்கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவி பெரும் விபத்தாக மாறியது.



விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, இதுவரை 56 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக் கூறினார்.

தீவிபத்து ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிக்கிக் கொண்ட நோயாளிகளை மீட்க ஏஎம்ஆர்ஐ மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என மேற்குவங்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாகவே நோயாளிகளில் பலர் உயிரிழக்க நேரிட்டது என அரசு கூறியுள்ளது.

நோயாளிகளை மீட்க மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கொடுமையானது என மருத்துவமனையை நேரில் பார்வையிட்ட பொதுசுகாதார அமைச்சர் சுப்ரதா முகர்ஜி தெரிவித்தார். தீவிபத்து ஏற்பட்டதும் மருத்துவமனை உயர் அதிகாரிகள் ஓடிவிட்டனர் என அவர் கூறினார்.

மீட்புப் பணிகள் முடிந்ததும் ஏராளமான நோயாளிகள் உயிரிழக்கக் காரணமாக ஏஎம்ஆர்ஐ குழுமத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக