இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீனர்களில் 1,027 பேரை விடுவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிலாட் விடுதலை செய்யப்பட்டார். ஹமாஸ் அமைப்பிடம் பிடிபட்டு இஸ்ரேலுக்கு உயிருடன் திரும்பிய ஒரே இராணுவ கமாண்டர் கிலாட் மட்டும்தான். இந்நிலையில் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் இறுதிக் கட்டமாக 550 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. எனினும் விடுவிக்கப்படும் கைதிகளில் ஒருவர் கூட ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாதி அமைப்பினர் இல்லை, யாரையெல்லாம் விடுவிப்பது என்பதை இஸ்ரேல் அரசுதான் தீர்மானித்தது என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா எல்லைப் பகுதியில் வைத்து கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். இப்போது விடுவிக்கப்படுவோரில் சாலா ஹமூரி குறிப்பிட்டத்தக்கவர். இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பலமுறை அமைதிப் பேச்சு நடத்தியும், இதுவரை நிரந்தரமாக அமைதி திரும்பவில்லை. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக