புதன், மார்ச் 21, 2012

குஜராத் சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக படுதோல்வி !

 அகமதாபாத்: குஜராத்தில் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தனது தொகுதியை காங்கிரஸ் வசம் இழந்து பாஜக தோல்வியடைந்துள்ளது.
1995ம் ஆண்டு முதல் பாஜக வசம் மன்சா தொகுதியை முதன் முறையாக காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. குஜராத் தலைநகரான காந்திநகர் மாவட்டத்தில் இந்தத் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த மங்கல்தாஸ் படேல் மறைவையடுத்து இங்கு இடைத் தேர்தல் நடந்தது.

இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பாபுஜி தாகூர் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் தசரத் படேலை தோற்கடித்தார்.

இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக