அழகு....அழகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகு....அழகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், ஜூலை 23, 2014
ஞாயிறு, மார்ச் 23, 2014
சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள செர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...
இயற்கையான முறையில் தோலை பராமரிக்க பல்வேறு வழிமுறைகளை நித்தம் நித்தம் பயன்படுத்துபவர்கள் ஏராளம். அந்த வகையில் செர்ரி பழங்கள் தோலை வெளிர் நிறத்திற்கு கொண்டு வரவும் மற்றும் கருமையான இடங்களை சுத்தம் செய்யவும் உதவுகின்றன என்பதை நம்ப முடிகிறதா? இந்த பழங்களில் உள்ள எரிச்சலுக்கு எதிரான குணங்கள், அரிப்பு மற்றும் ரோசாசியா போன்றவற்றையும் கூட குணப்படுத்துகின்றன. மேலும், தோலுக்கு ஈரப்பதமூட்டி, தோலை மென்மையாக்கும் பணியையும் செர்ரிப் பழம் செய்கிறது.
பல்வேறு வகையான தோல் மற்றும் சுகாதார பலன்களை தரக் கூடிய இந்த சுவைமிக்க பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, தாமிரம், மாங்கனீசு மற்றும் பல தாதுக்கள் நிரம்பியுள்ளன. இவை மட்டுமல்லாமல் செர்ரிப் பழங்களை சாப்பிடுவதன் மூலம் தலைவலியை குணப்படுத்தவும் மற்றும் தூக்கமின்மையை சரி செய்யவும் முடியும். இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும் மற்றும் ஆக்ஸிடேட்டிப் சேதாரமடையும் நியூரான்களால் ஏற்படும் நினைவாற்றல் இழப்பையும் தவிர்க்கவும் முடியும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

