வெள்ளி, மார்ச் 03, 2017

கொட்டும் மழையிலும் போராட்டத்தை தீவிரபடுத்திய நெடுவாசல் மக்கள் !!! வீடு வாசல் செல்வார்களா?


புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 16வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.கோட்டைக்காடு கிராமத்திலும் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது 6வது நாளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். மழை வெள்ளம் வந்தாலும் எழுந்து செல்லமாட்டோம் என்று கூறியுள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் நிறுத்தும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். உயிரோ போனாலும்
போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று பொதுமக்கள் கூறிவருகின்றனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 16வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
கோட்டைக்காடு கிராமத்திலும் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது 6வது நாளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். மழை வெள்ளம் வந்தாலும் எழுந்து செல்லமாட்டோம் என்று கூறியுள்ளனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் நிறுத்தும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். உயிரோ போனாலும் போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று பொதுமக்கள் கூறிவருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்ததற்கு நெடுவாசல் கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுவாசல் கிராம மக்களின் போராட்டத்திற்கு தமிழகம் முழுக்க பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நெடுவாசல் போராட்ட குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சில தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதியளிக்காது என முதல்வர் உறுதியளித்தார். எனினும் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று கூறியுள்ளனர்.

காலை முதலே நெடுவாசல், கோட்டைக்காடு பகுதியில் மழை பெய்து வருகிறது. மழையிலும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். மழையோ, வெயிலோ எதுவும் எங்களை செய்யாது என்று கூறி போராடி வருகின்றனர். கிராம மக்கள், மாணவர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

lநெடுவாசலில் 16வது நாளாக உறுதியுடன் போராடி வரும் மக்கள், எங்களின் உயிரைக் கொடுத்தாவது இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் கிராம நிர்வாகிகளின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும் கூறியுள்ளனர்.

கோட்டைக்காடு கிராமத்திலும் காலை முதலே மழை பெய்து வருகிறது. மழையைப் பொருட்படுத்தாமல் மாணவர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோட்டைக்காடு கிராமத்தில் 6வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. அடாது மழை பெய்தாலும் விடாது போராடுவோம் என்று கூறி குடையை பிடித்துக்கொண்டு மக்கள் போராடி வருகின்றனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக