சனி, பிப்ரவரி 28, 2015
அமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது 6 பெண்கள் கற்பழிப்பு புகார்
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய யோகா குரு மீது 6 பெண்கள் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய யோகா கல்லூரி என்ற பெயரில் யோகா கல்லூரி நடத்தி வருபவர், யோகா குரு பிக்ரம் சவுத்ரி (வயது 69). இந்திய அமெரிக்கரான இவரது பூர்வீகம் கொல்கத்தா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
வியாழன், பிப்ரவரி 26, 2015
ஏமாற்றம் அளிக்கும் ரயில்வே பட்ஜெட்: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து
ரயில்வே பட்ஜெட்டில் புதிய திட்டங்களோ, ரயில்களோ அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் 2015 - 16 ஆம் ஆண்டிற்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்திருக்கிறார். சுரேஷ்பிரபு மிகச்சிறந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய ஏமாற்றத்தையே பரிசாகத் தந்திருக்கிறார்.
புதன், பிப்ரவரி 25, 2015
செவ்வாய், பிப்ரவரி 24, 2015
மார்க்சிஸ்ட் மாநில குழுவில் இருந்து அச்சுதானந்தன் திடீர் நீக்கம் : கேரள அரசியலில் பரபரப்பு..
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுவில் இருந்து அச்சுதானந்தன் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு கடந்த 20ம் தேதி ஆலப்புழாவில் தொடங்கியது. இதில், கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனுக்கும், மாநில செயலாளர் பினராய் விஜயனுக்கும் இடையேயான மோதல் பூதாகரமாக வெடித்தது.
திங்கள், பிப்ரவரி 23, 2015
தேன்நிலவுக்கு சென்ற போது விபரீதம்: 4,000 அடி உயர மலையில் இருந்து விழுந்து உயிர் தப்பிய கணவன்
தேன்நிலவுக்கு சென்ற ஒருவர் மனைவியை புகைப்படம் எடுக்கும்போது கால் தவறி 4 ஆயிரம் அடி உயரமுள்ள மலையில் இருந்து கீழே விழுந்து உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மத்திய மாகாணம் பகுதியில் ஹர்டான் பீடபூமி பகுதி உள்ளது. இங்குள்ள மிக உயர்ந்த மலைகள் அந்நாட்டின் அதிமுக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருவதால், ஆண்டுதோறும் பல நாடுகளில் இருந்து இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
ஞாயிறு, பிப்ரவரி 22, 2015
உலககோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வரலாற்றை மாற்றியது இந்தியா
உலக கோப்பை போட்டிகளில் மெல்போர்னில் நடைபெற்று வரும் 13வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 137 ரன்களும், ரகானே 79 ரன்களும், கோலி 46 ரன்களும் எடுத்தனர்.
பெட்ரோலிய அமைச்சக ஆவண திருட்டில் ரூ.10,000 கோடி இமாலய ஊழல் நடந்துள்ளது.
பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருடப்பட்ட விவகாரத்தில், ரூ.10,000 கோடி ஊழல் நடந்துள்ளது என கைதான நிருபர் சாந்தனு சைக்கா பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார். மத்தியில் பாஜ அரசு பதவி ஏற்ற பிறகு எழுந்துள்ள மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு இது. மேலும், திருட்டு ஆவணங்களை வாங்கியதாக சில கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
சனி, பிப்ரவரி 21, 2015
படகு தகர்ப்பு நாடகம் என்பது இந்திய அதிகாரியின் அறிக்கையில் தெளிவாகிவிட்டது - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை
பாகிஸ்தான் படகு தான் உத்தரவிட்டதாலேயே குண்டுவீசி அழிக்கப்பட்டது என்று கூறிய பிரச்சினைக்குரிய கடலோர காவல்படை அதிகாரி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே இந்திய கடல் எல்லையில் நடமாடிய ஒரு பாகிஸ்தான் படகு டிசம்பர் 31-ந் தேதி தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் பலியானார்கள். இந்த படகை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்து அதில் இருந்தவர்களை சரண் அடையும்படி கூறியதாகவும், ஆனால் அவர்கள் தாங்களாகவே குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
வெள்ளி, பிப்ரவரி 20, 2015
கோட்சே சிலை விவகாரம்: தமிழக அரசு கூர்ந்து கவனிப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
'தமிழகத்தில் நாதுராம் கோட்சேவின் சிலைகள் எந்த ஓர் இடத்திலும் நிறுவப்படவில்லை. நிலைமை கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது' என சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த விளக்கம்:
"அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் நாதுராம் கோட்சேயின் சிலைகளை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தன்று நாடு முழுவதும் நிறுவப்போவதாக அறிவிப்பு செய்து ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சிலைகளை நாடு முழுவதும் அனுப்ப ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
சவுதியின் புதிய மன்னர் அறிவித்த 2 மாத சம்பளம் போனஸ்: மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்
சவுதி அரேபியா நாட்டின் மன்னரான அப்துல்லா கடந்த மாதம் 23-ம் தேதி மரணம் அடைந்ததையடுத்து அவரது மகன் சல்மான் புதிய மன்னராக பதவியேற்றுக்கொண்டார்.
அந்நாட்டு வழக்கப்படி புதிதாக பொறுப்பேற்றுக்கொள்ளும் மன்னர்கள் மக்களுக்கு எதிர்பாராத சலுகைகளை அளித்து மகிழ்விப்பதுண்டு. அவ்வகையில், புதிய மன்னர் சல்மானும் ஒரு இனிய அறிவிப்பை வெளியிட்டார். அரசு பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெற்று படிக்கும் மாணவ-மாணவியருக்கு 2 மாத போனஸ் வழங்குமாறு அவர் பிறப்பித்த உத்தரவு பலரை ஆனந்தத்தில் திக்குமுக்காட வைத்தது.
வியாழன், பிப்ரவரி 19, 2015
தீஸ்தா செதல்வாட்டை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?: குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
கடந்த 2002-ம் குஜராத் கலவரத்தின்போது, ஆமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டிக்கு கலவரக்காரர்கள் தீ வைத்ததில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எசான் ஜாப்ரி உள்பட 69 பேர் பலியானார்கள். அந்த இடத்தை அருங்காட்சியகமாக மாற்றுவதற்காக, சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்டும், அவருடைய கணவர் ஜாவீது ஆனந்தும் நிதி திரட்டினர்.
புதன், பிப்ரவரி 18, 2015
ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் முஸ்லிம் பிரதிநிதிகள் 6 கேள்விகள் !!!!
ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் தொடர்பாக அந்த அமைப்பின் சிறுபான்மையினர் துறை பொறுப்பாளர் இந்திரேஷ் குமாரை சந்தித்த இஸ்லாமிய மத பிரதிநிதிகள் குழு முக்கியமான 6 கேள்விகளை எழுப்பியது.
சன்னி உலீமா இஸ்லாமிய அமைப்பின் பொதுச் செயலாளர் ஹஜி முகமது சலீஸ் தலைமையிலான இஸ்லாமிய மதத்தின் பிரதிநிதிகள் குழு திங்கள்கிழமை இரவு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமாரை சந்தித்தனர்.
செவ்வாய், பிப்ரவரி 17, 2015
பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டதிற்கு அனுமதி மறுப்பு : நீதிக்கான போராட்டம் தொடரும் !!!
பிப்ரவரி 1 7 - பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டதிற்கு அனுமதி மறுப்பு இது குறித்து கருத்து தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் M. முகம்மது ஷேக் அன்சாரி அவர்கள்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றோம்.
4 மாநிலங்களில் இடைத்தேர்தல் தொகுதியை தக்க வைத்த கட்சிகள்
ஆந்திர மாநிலம் திருப்பதி சட்டப் பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டது. திருப்பதி உள்ளிட்ட சில மாநில சட்டப் பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 13ம் தேதி நடந்தது. தேர்தல் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்த இடைத் தேர்தல் முடிவுகள் விவரம்
திங்கள், பிப்ரவரி 16, 2015
சனி, பிப்ரவரி 14, 2015
பா.ஜ.க கட்சி அலுவலகத்திற்குள் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது
பா.ஜ.க கட்சி அலுவலகத்திற்குள் வைத்து 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கொல்கத்தாவின் பெகலா பகுதியில் விளையாட சென்ற தன் குழந்தை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதட்டமடைந்து குழந்தையை தேடிய தாய் தகவல் கேட்பதற்காக அப்பகுதியிலுள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தின் கதவை தட்டினார். அப்போது கதவை திறந்த வாலிபனை தொடர்ந்து அந்த சிறுமி வேகமாக தாயிடம் ஓடி வந்தாள்.
டெல்லி முதல்–மந்திரியாக கெஜ்ரிவால் பதவி ஏற்றார்
டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி 67 இடங்களை பிடித்தது. கடந்த தேர்தலில் 31 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த தடவை வெறும் 3 இடங்களே கிடைத்தன.எதிர்க்கட்சியே இல்லை என்ற அளவுக்கு டெல்லி மக்கள் ஆம்ஆத்மிக்கு ஏகோ பித்த ஆதரவை தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் 8–வது முதல்–மந்திரியாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
வியாழன், பிப்ரவரி 12, 2015
டெல்லி இமாம் சையத் அகமது புகாரி பிறப்பித்த கட்டளையால் தோற்றேன்: கிரண் பேடி சொல்கிறார்
டெல்லி சட்டசபை தேர்தலில், பாரதீய ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதி, பாரதீய ஜனதா சார்பில் தற்போதைய மத்திய மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று வந்த தொகுதி ஆகும். பாதுகாப்பான தொகுதி என்பதால் இந்த தொகுதியில் கிரண் பேடி நிறுத்தப்பட்டார்.
புதன், பிப்ரவரி 11, 2015
செவ்வாய், பிப்ரவரி 10, 2015
குத்துச்சண்டை வீரர் முகமது அலி பயன்படுத்திய கையுறைகள் 21ஆம் தேதி ஏலத்தில் வருகின்றன.
உலகின் மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்றான, ரோமில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் குத்துச்சண்டை வீரர் முகமது அலி பயன்படுத்திய கையுறைகள் ஏலத்திற்கு வருகின்றன விளையாட்டு உலகில் ’தி கிரேட்’ என்றழைக்கப்படும் குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி, உலகின் மிகவும் ஆபத்தான குத்துச்சண்டை வீரராக அறியப்பட்ட சோனி லிஸ்டன் ஆகியோர் மோதிய போட்டியில் அவர்கள் இருவரும் பயன்படுத்திய கையுறைகள் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ஏலத்தில் வருகின்றன.
டெல்லி தேர்தல்: ஆம்ஆத்மி 67 இடங்களில் அமோக வெற்றி : பா.ஜ.க, காங். படுதோல்வி!!
டெல்லி சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடந்தது.
மொத்தம் உள்ள 1.33 கோடி வாக்காளர்களில் 67.14 சதவீதம் பேர் வாக்குகளை பதிவு செய்தனர். டெல்லி தேர்தலில் பா.ஜனதா, ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் 673 பேர் போட்டியிட்டனர். 70 தொகுதி ஓட்டுக்களும் டெல்லியில் 14 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கப்பட்டன.
மொத்தம் உள்ள 1.33 கோடி வாக்காளர்களில் 67.14 சதவீதம் பேர் வாக்குகளை பதிவு செய்தனர். டெல்லி தேர்தலில் பா.ஜனதா, ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் 673 பேர் போட்டியிட்டனர். 70 தொகுதி ஓட்டுக்களும் டெல்லியில் 14 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கப்பட்டன.
ஞாயிறு, பிப்ரவரி 08, 2015
சனி, பிப்ரவரி 07, 2015
புதன், பிப்ரவரி 04, 2015
பிரவீண் தொகாடியா ஒரு வாரத்திற்கு பெங்களூருக்குள் நுழைய தடை
விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா பெங்களூரில் நுழைய பெங்களூர் போலீஸ் ஒரு வாரம் தடை விதித்துள்ளது.
பெங்களூர் பசவனகுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நேஷனல் கல்லூரி மைதானத்தில் இந்து அமைப்புகள் சார்பில் வருகிற 8-ந்தேதி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பஜ்ரங்தள், ஸ்ரீராம்சேனை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கலந்து கொள்ள உள்ளன.
செவ்வாய், பிப்ரவரி 03, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)