எகிப்தில் கடந்த ஆண்டு மக்கள் புரட்சியின் மூலம் அதிபர் முபாரக்கின் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி வீழ்ந்தது. அதை தொடர்ந்து சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை சேர்ந்த முகமது முர்சி வெற்றி பெற்றார்.எகிப்தில் இவர்தான் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமையை பெறுகிறார்.அவர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய அதிபராக பதவி ஏற்கிறார். அதற்குமுன் நேற்று அவர் பொதுமக்கள்
சனி, ஜூன் 30, 2012
அமெரிக்கா எதிரி நாடுதான் 74% பாகிஸ்தானியர் கருத்து: கருத்து கணிப்பில் தகவல்
பாகிஸ்தானில் உள்ள 74 சதவீதம் பேர், அமெரிக்காவை எதிரியாகத்தான் பார்க்கின்றனர் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து அல் கய்தா தலைவர் ஒசாமாவை சுட்டுக் கொன்றது, ஆளில்லா உளவு விமானம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தும் போது ராணுவ வீரர்கள் பலியானது உள்பட பல்வேறு விஷயங்களில் அமெரிக்கா மீது பாகிஸ்தான் அதிருப்தியில்
டைவர்ஸ் கேட்ட மனைவியை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் சராமரியாக வெட்டிய கணவன் !
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பரசட் நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்ட மனைவியை வழக்கறிஞர்கள் முன்னிலையில் அரிவாளால் கணவனே கொடூரமாக வெட்டிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.பரசட்டை சேர்ந்த பிரசாந்த்ஜித் மாஜிக்கும் ஜெயந்தி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமண வாழ்க்கை நீண்டகாலம் நீடிக்கவில்லை. இருவரும் விவகாரத்து கோரி பரசட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
பெட்ரோல் விலையில் ரூ 30 குறையுங்கள் : மம்தா !
கொல்கத்தா: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 30 வரை குறையுங்கள், என மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் குறைத்துள்ளன. சென்னையில் லிட்டருக்கு ரூ.3.13 குறைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா
வெள்ளி, ஜூன் 29, 2012
எகிப்தின் தலைவர் மக்களது பணியாளராகவே இருப்பார் : முர்ஸியின் மனைவி நஜ்லா அலி மஹ்மூத் !
எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சார்பாகப் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்ற கலாநிதி முஹம்மத் முர்ஸியின் மனைவியே நஜ்லா. இவர் 1962 ஆம் ஆண்டு கெய்ரோவின் கிழக்குப் பகுதியான ஐனுஸ் ஷம்ஸ் எனும் இடத்தில் பிறந்தார். இவருடைய முழுப் பெயர் நஜ்லா அலி மஹ்மூத்.கலாநிதி முர்ஸி தனது கலாநிதிப் பட்டப் படிப்பை பூர்த்தி செய்வதற்காக ஐக்கிய அமெரிக்கா சென்றபோது அவருடன் அங்கே சென்று வாழ்ந்தார். முபாரக்கின் ஆட்சியில் பல்வேறு சோதனைகளை கலாநிதி அவர்கள் சந்தித்தபோதும் மனம் தளராமல் அவருக்கு ஆறுதலாக இருந்தவர் நஜ்லா அவர்கள். அவரோடு இஹ்வான் ஒன்லைன் மேற்கொண்ட நேர்காணலின் முக்கிய பகுதிகளை வாசகர்களுக்காகத் தருகிறோம்
வியாழன், ஜூன் 28, 2012
பள்ளி கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை: புரட்சிகர மாணவர்கள் 100 பேர் கைது- போலீசாருடன் மோதல்-கைகலப்பு !
அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசுடமையாக்க வலியுறுத்தியும் இலவச கட்டாய கல்வி வழங்க கோரியும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.
செல்போனில் பேசியதால்தான் அண்ணா மேம்பால விபத்து-பஸ் டிரைவர் கைது !
சென்னை: செல்போனில் பேசியபடி மாநகரப் போக்குவரத்துக் கழக டிரைவர் பஸ்ஸை ஓட்டியதால்தான் விபத்து நேரிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அண்ணா மேம்பாலத்தில் பஸ்சை விபத்துக்குள்ளாக்கியதாக பஸ் டிரைவர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளன. சென்னை பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி 17எம் பஸ் நேற்று பிற்பகல்
ஆமா...நான் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கத்தான் போனேன்: விடுதலையான சுர்ஜித்சிங் பேட்டி !
அட்டாரி: பாகிஸ்தானுக்கு தாம் உளவு பார்க்கவே சென்றதாக 30ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின் நாடு திரும்பிய சுர்ஜித்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டு இன்று இந்தியா வந்து சேர்ந்த சுர்ஜித்சிங் அட்டாரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:30 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எனது குடும்பத்தினரையும் குழந்தைகளையும் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாகிஸ்தான் சிறைகளில் இந்திய கைதிகள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். சரப்ஜித்சிங்கும் கூட
பிரணாப்பை விரும்பவில்லை சோனியா...பிரதீபாவையே மீண்டும் குடியரசுத் தலைவராக்கியிருப்பார் !
டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும், வாய்ப்புகளும் கிடைத்திருந்தால், நிச்சயம் பிரதீபா பாட்டீலைத்தான் மீண்டும் தேர்வு செய்திருப்பார் சோனியா காந்தி என்று கூறியுள்ளார் தொலைக்காட்சி செய்தி ஆய்வாளரும், இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் சீனியர் அசோசியேட் எடிட்டருமான சேகர் ஐயர். இதுகுறித்து அவர் ஒரு இணையதள வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்
கே.ஜி புத்தகத்தில் இறைத்தூதர் அவர்களை சித்தரித்து வரைபடம் – மணிப்பூர் முஸ்லிம்கள் போராட்டம்
இம்பால்:இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை சித்தரித்து கே.ஜி புத்தகத்தில் பதியப்பட்டுள்ள கார்ட்டூன் மணிப்பூரில் முஸ்லிம் மக்களிடையே போராட்டத்தை தூண்டக் காரணமாக அமைந்தது.பண்கால் ஸ்டூடன்ஸ் ஆர்கனைசேசன்(PSO) அமைப்பு மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் பிரிவு இணைந்து போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் அந்த KG புத்தகத்தின் பிரதிகள் எரிக்கப்பட்டன.
விருத்த சேதனம் சட்டவிரோதம்: ஜெர்மன் நீதிமன்றம் !
பெர்லின்:சிறுவர்களுக்கு மத சட்டத்தின் படி நடத்தப்படும் விருத்த சேதனம் சட்டவிரோதம் என்று ஜெர்மனியில் உள்ள நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. இதற்கு முஸ்லிம்களும், யூதர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேற்கு ஜெர்மனியில் கோலோங் உள்ளூர் நீதிமன்றம் இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை அளித்துள்ளது. ஒருவருக்கு தனது உடலின் பூரணத்துவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை உண்டு. விருத்த சேதனம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை அவர் முதிர்ச்சி அடைந்த பின் தீர்மானிக்கட்டும்
சிரியாவை தாக்கமாட்டோம்: எர்துகான்
இஸ்தான்புல்:துருக்கி விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவத்தில் சிரியா மீது தாக்குதல் நடத்த உத்தேசிக்கவில்லை என்று அந்நாட்டின் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார். துருக்கியை தாக்குவதற்கு அரசோ, பொதுமக்களோ விரும்பவில்லை. எந்தவொரு நாட்டின் மீதும் எவ்வித பகைமையும் துருக்கி சமூகத்திற்கு இல்லை.சிரியா வான் எல்லையில்
மராத்வாடா பாகிஸ்தானாக மாறி வருகிறது: பால்தாக்கரே புலம்பல் !
மும்பை:வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி சும்மா கிடந்த பால்தாக்கரேக்கு அபூஜிண்டாலின் கைது பெரிய பிரச்சார ஆயுதமாக மாறிவிட்டது. தனது சாம்னா இதழில் எழுதியுள்ள தலையங்கத்தில் “மகாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியம் ‘புதிய பாகிஸ்தான்’ ஆக மாறி வருகிறது” என்று புலம்பியுள்ளார்.மும்பையில் 1993-ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில் முக்கிய குற்றவாளி என்று கிருஷ்ணா கமிஷனால்
ஆட்டோ ரிக்ஷா டிரைவர் முதல் டீ கரைக்காரர் வரை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டி !
புதுடெல்லி:குடியரசு தலைவர் தேர்தலில் 26 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆட்டோ ரிக்ஷா டிரைவரும், டீ கடைக்காரரும் அடங்குவர்.நேற்று மாலை வரை 36 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் எட்டு மனுக்கள் தள்ளுபடிச் செய்யப்பட்டன. இரண்டு பேர் இரண்டு மனுக்கள் வீதம் தாக்கல் செய்துள்ளனர்.வட இந்தியாவின்
எனது மகன் தீவிரவாதி அல்ல: அபூ ஜிண்டாலின் தாயார் பேட்டி !
புதுடெல்லி:’எனது மகன் தீவிரவாதி இல்லை’ என்று மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அபூ ஜிண்டாலின் தாயார் கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அபூ ஜிண்டாலின் தாயார் ரிஹானா பேகம் கூறியது: ‘எனது மகன் தீவிரவாதி அல்ல. பாதுகாப்பு ஏஜன்சிகள் அவன் மீது பொய்வழக்கை சுமத்தியுள்ளனர். ஜிண்டாலை டி.என்.ஏ சோதனை உட்படுத்தவில்லை. எவ்வித டி.என்.ஏ
முர்ஸியின் பதவிப் பிரமாணம்:நிச்சயமற்ற நிலை தொடர்கிறது !
கெய்ரோ:அரசு உருவாக்கத்திற்கான தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியின் பதவிப் பிரமாணம் குறித்து மாறுபட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.அடுத்த சனிக்கிழமை முர்ஸி அதிபராக பதவியேற்பார் என அல் அரேபியா சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இறுதி முடிவு ஏற்படவில்லை என்று ராணுவ அரசை மேற்கோள்காட்டி அல் மிஸ்ரி
விமானம் சுட்டு வீழ்த்திய சம்பவம்:பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் – சிரியாவுக்கு எர்துகான் எச்சரிக்கை !
அங்காரா:துருக்கியின் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியாவின் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடிக் கொடுப்போம் என்று துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா ராணுவத்தினரின் புறத்திலிருந்து எதிர்காலத்தில் எல்லையை மீறும் நடவடிக்கை தொடர்ந்தால் கடுமையான பதிலடி உருவாகும் என துருக்கியின் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் கடும்
புற்று நோயிலிருந்து மீண்டார் வெனிசுலா அதிபர்: மீண்டும் தேர்தலில் போட்டி !
வெனிசுலா நாட்டின் அதிபர் ஹூகோ சவேஸ் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் உடல் நிலை பற்றி வெளிப்படையாக எதுவும் கூறாமல் அமைதி காத்து வந்தார்.தற்போது அவர் பூரண சுகம் பெற்று, வரும் அக்டோபர் மாதம் 7-ந் தேதி நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தயாராகி விட்டார். இதை அவரே
மியான்மர் தலைவர் அவுங் சாங் சூச்சிக்கு பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடிமகன் விருது !
மியான்மர் நாட்டின், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் அவுங் சாங் சூச்சி. கடந்த, 1990ம் ஆண்டு நடந்த ஜனநாயக தேர்தலில், இவர் அமோக வெற்றி பெற்றும், ஆட்சியில் அமர விடாமல், வீட்டுச் சிறையில் அடைத்தது, ராணுவ அரசு. பல ஆண்டு காலம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூச்சி, தற்போது விடுதலையாகி, பார்லிமென்ட் எம்.பி.,யாகியுள்ளார்.
மியான்மர் நாட்டில், ஜனநாயக
கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண்ணின் கணவர் அவமானத்தால் தலைமறைவு !
இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள, அபராதம் செலுத்தாத காரணத்தால், ஏழாவது மாதத்தில், சீன அதிகாரிகளால் கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்ட இளம் பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளார்.
சீனாவில், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை உள்ளது. மீறி, பெற்றுக் கொண்டால், கடும் அபராதம் அல்லது சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இதன் மூலம், சீனாவில் ஜனத்தொகை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் ஷான்சி மாகாணத்தை சேர்ந்தவர், பெங் ஜியாமி, 23.
யாமர் சமூக வலைத்தளத்தை ரூ. 6,000 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் !
வாஷிங்டன்: சமூக வலைத்தளமான யாமர் (Yammer) நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 6,000 கோடிக்கு (1.2 பில்லியன் டாலர்) வாங்கவுள்ளது. இதன்மூலம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள சேவையை மைக்ரோசாப்ட் வழங்க முடியும்.வெளியுலகில் மட்டுமின்றி நிறுவனங்களுக்குள்ளான சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமானது யாமர். ஒரு நிறுவனம் தனது பணியாளர்களை மட்டும் கொண்ட
அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது-38 பேர் படுகாயம் !
அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர போக்குவரத்துக்கழக பஸ் இன்று பிற்பகல் தலை குப்புறக் கவிழ்ந்து விழுந்தது. இதில் 38 பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அண்ணா சாலையில் ஜெமினி அருகே உள்ளது அண்ணா மேம்பாலம். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் இந்த மேம்பாலமும் ஒன்று. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி
புதன், ஜூன் 27, 2012
இராமநாதபுரம் காவல்துறையின் சூழ்ச்சி முறியடிப்பு – கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் விடுதலை !
பெரியப்பட்டிணம்:இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் சுய ஒழுக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை தீவிரவாத கும்பலை பிடிப்பது போல அதிரடியாக கைது செய்து பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையின் சூழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் முறியடித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் காலித் முஹம்மது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது
மலேசியாவில் மொட்டை அடித்து கொண்ட "டிவி' பெண் வர்ணனையாளர் சஸ்பெண்ட் !
கோலாலம்பூர்:மலேசிய நாட்டு "டிவி' பெண் வர்ணனையாளர் மொட்டை அடித்து கொண்டதால், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவின் பிரபல "என்டிவி7' சேனலில் வர்ணனையாளராக, ராஸ் அடிபா முகமது ரட்சி என்பவர் பணிபுரிந்தார். மலேசியாவில் நடந்த புற்றுநோய் ஒழிப்பு பிரசாரத்திற்காக, இவர் தலைமை மொட்டையடித்து கொண்டார். மறுநாள் பணிக்கு மொட்டை தலையுடன் வந்த ராஸ் அடிபாவை,பணி செய்ய
சவுதி பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதி !
லண்டன் - சவுதி அரேபியாவைச் சார்ந்த பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அந்த அரசு அனுமதி அளித்துள்ளது.
லண்டனில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி ஒலிம்பிக் கமிட்டி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான பெண் தடகள வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தல்மா மல்ஹாஸ் என்ற பெண் மட்டும் தற்போது ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இவர்
தரையில் படுத்த மதுரை ஆதீனம்... தலையேயே காட்டாத நித்தியானந்தா !
மதுரை: மதுரை ஆதீன மடத்தில் இன்று போலீஸார் சோதனை நடத்தியபோது தனது அறையை விட்டு நித்தியானந்தா வெளியே வரவே இல்லையாம். அதேபோல மதுரை ஆதீனத்தை போலீஸார் அணுகியபோது தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி தரையில் படுத்துக் கொண்டாராம். இருப்பினும் விடாத போலீஸார் அவரை கூப்பிட்டு விசாரணை நடத்தினராம்.மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில்
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதவியை ராஜினாமா செய்தார் !
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி தமது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள நிதி அமைச்சக அலுவலகத்துக்கு மாலையில் சென்ற பிரணாப் முகர்ஜி அதன் பினன்ர் மாலை 4.30 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக்
பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கியே...பெண் கவுன்சிலரிடம் சீறிய ஜெ !
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு நடத்திய கூட்டத்தில் என்ன நடந்தது என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு பெண் கவுன்சிலரிடம், பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்களே, உலகிலேயே இதை விட பெரிய அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்று முதல்வர் கடுமையாக சாடியதால் அந்தப் பெண் கவுன்சிலர் வெலவெலத்துப் போய்
செவ்வாய், ஜூன் 26, 2012
டாக்டர்.முஹம்மது முர்ஸி எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்வு! – மகிழ்ச்சி வெள்ளத்தில் எகிப்து !
கெய்ரோ:எகிப்திய குடியரசின் அதிபர் தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளரான டாக்டர்.முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக எகிப்து தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நான்கு தினங்களாக நிலவிய சந்தேகங்களுக்கும், புதிருக்கும் இறுதியில் இன்று மதியம் 3.30 மணிக்கு(எகிப்திய நேரம்) தேர்தல்
எகிப்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முர்சிக்கு இந்தியா வாழ்த்து
எகிப்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது முர்சிக்கு இந்தியா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்து மக்கள் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாகவும் ,இருதரப்பு உறவை மேம்படுத்த தயாராக இருப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன், ‘எகிப்து தனது ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. எகிப்து மக்களின் தீர்ப்பை நாங்கள்
40 ஆண்டுகளாக கட்சியில் இருந்த பிரணாப், ஜனாதிபதி தேர்தலுக்காக காங்கிரஸில் இருந்து பிரியாவிடை
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டிருந்த, காங்கிரஸ் கட்சியின் உறவை, பிரணாப் முகர்ஜி துறந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, அடிப்படை உறுப்பினர் உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும், ராஜினாமா செய்துள்ள அவருக்கு, காங்கிரஸ் கட்சி பிரியாவிடை அளித்தது. இன்று, பிரதமரை சந்தித்து, நிதியமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதோடு, நாளை மறுநாள்
வரம்பு மீறினால் புரட்சி தொடரும்’- முர்ஸியின் மகன் தந்தைக்கு அறிவுரை !
கெய்ரோ:எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது முர்ஸிக்கு அவரது மகன் அப்துல்லாஹ் முர்ஸி எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘வரம்பு மீறினால் புரட்சி தொடரும்’ என அறிவுறுத்தியுள்ளார். முஹம்மது முர்ஸியின் மகன் அப்துல்லாஹ் முர்ஸி தனது தந்தைக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது: “அல்லாஹ்விற்கு கட்டுபடும் தோறும் நாங்கள் உங்களுடன் இருப்போம். நீங்கள் வரம்பு மீறினால் புரட்சி தொடரும். புரட்சிக்கு மாற்றமான
ஈரானை தாக்கினால் இஸ்ரேல் அழிந்துபோகும் – ஈரான் தூதர் !
மாட்ரிட்:சுயமாக தன்னை அழித்துக்கொள்ள தயாரானால் மட்டுமே இஸ்ரேல் ஈரானை தாக்கும் என்று ஸ்பெயினில் ஈரானின் தூதர் முர்தஸா ஸஃபரி தெரிவித்துள்ளார்.ஈரானை தாக்குவோம் என்ற இஸ்ரேலின் தொடர்ச்சியான வாய்சவடாலை முற்றிலும் நிராகரித்த முர்தஸா இவ்வாறு தெரிவித்தார்.ஸ்பெயின் தொலைக்காட்சி சேனலான டி.வி3 க்கு பேட்டி அளித்தார் முர்தஸா. இஸ்ரேலோ,
உ.பி. - மதக்கலவரத்தால் வீடிழந்த முஸ்லிம்களுக்கு ரூ 50,000
பிரதாப்கார் - உத்திரபிரதேசத்தில் நவாப்கஞ்ச் பகுதியில் உள்ள அஸ்தான் கிராமத்தில் தீவிரவாதக்கும்பலால் வீடுகள் எரிக்கப்பட்டு உடைமைகளை இழந்துள்ள முஸ்லிம்களுக்கு தலா ரூ 50,000 உதவித் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெ, சசிகலா மீதான ஊழல் வழக்கு விசாரணை தொடரும்- சுப்ரீம் கோர்ட்
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான ஊழல் வழக்கில் விசாரணை தொடரும். அதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது.பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முதல் முறையாக கடந்த ஆண்டு 2 முறை கோர்ட்டில் நேரில் ஆஜராகி நான்கு நாட்கள் வாக்குமூலம் அளித்தார்
நீதிபதி மலிக்கார்ஜூனய்யாவை நியமித்ததே சட்டவிரோதமானது: ஜெயலலிதா அதிரடி மனு !
பெங்களூர்: தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவின் நியமனமே சட்டவிரோதமானது திடீரென ஜெயலலிதா தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1991-96- ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. பல்லாண்டுகால இழுத்தடிப்புகளுக்குப்
வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படும் முஸ்லிம்கள் – பீகார் அமைச்சர் ஷாஹித் அலிகான் குற்றச்சாட்டு !
போபால்:தேர்தலின்போது வாக்குகளைப் பெறுவதற்காக முஸ்லிம் மக்களை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்கிறது என்றும், இதற்காகவே அக்கட்சி மதசார்பின்மை வேடம் புனைவதாகவும் பீகார் மாநில அமைச்சர் ஷாஹித் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அகில இந்திய வக்பு வாரிய கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பீகார் மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவருமான ஷாஹித் அலி கான் வந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம்
முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் அமைப்பினர்(NWF) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
சென்னை: 7 வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் பெண்கள் அமைப்பினர் சென்னை, மதுரை, கோவை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் நேற்று(ஜுன் 24) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.கடந்த ஆட்சியில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் அரசு அதிகாரிகளின் ஒருசார்பு தன்மை, உளவுத்துறை அதிகாரிகளின் முஸ்லிம் விரோதப்போக்கு, கருணையில் கூட
திங்கள், ஜூன் 25, 2012
டாக்டர்.முஹம்மது முர்ஸி எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்வு !
கெய்ரோ:எகிப்திய குடியரசின் அதிபர் தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளரான டாக்டர்.முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக எகிப்து தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நான்கு தினங்களாக நிலவிய சந்தேகங்களுக்கும், புதிருக்கும் இறுதியில் இன்று மதியம் 3.30 மணிக்கு(எகிப்திய நேரம்) தேர்தல் கமிஷனின் தலைமையகத்தில் எகிப்து
கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்கு சென்று சீனர்கள் சாதனை !
கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று, சீனர்கள் சாதனை படைத்துள்ளனர்.கடலுக்கு அடியில் ஏராளமான கனிமங்களும், இன்னும் சில அற்புதங்களும் புதைந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கடலின் மிக அதிக ஆழம் வரை செல்லும் வீரர்களின் துணையோடு, சில ஆராய்ச்சிகள்
அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்து விண்வெளியில் ஆய்வுக் கூடம்: சீனாவின் முயற்சி வெற்றி !
விண்வெளியின் ஆய்வு மையம் அமைக்கும் முயற்சியில் முக்கிய வெற்றியை எட்டியுள்ளது சீனா. அந்நாட்டு விண்வெளி வீரர்கள் தங்கள் விண்கலத்தை சோதனைமுறையில் அமைக்கப்பட்ட ஆய்வு கூடத்துடன் தங்கள் சொந்த முயற்சியில் வெற்றிகரமாக இணைத்தனர்.
செத்துப் போன தூக்குத் தண்டனை கைதிக்கு கருணை காட்டிய பிரதீபா பாட்டீல் !
பெங்களூர்: பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற கைதி இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கருணை காட்டியுள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.இவரால் கருணை காட்டப்பட்டவர், பிரதீபா பாட்டீல் சார்ந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டு பாபுராவ் திட்கே. அவர் கடந்த 2002ம்
எகிப்தை பாகிஸ்தானைப் போல மாற்ற திட்டம் – கார்டியன் !
கெய்ரோ:புதிய அதிபரை நியமித்த பிறகு அதிகாரத்தை தங்கள் வசம் வைத்திருக்க எகிப்தின் ராணுவ தலைமை திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் பத்திரிகையான கார்டியன் கூறுகிறது.அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இரு கட்சிகளின் நடவடிக்கைகளை ராணுவ தலைமை நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சித்த நடவடிக்கை இதனை சூசகமாக உணர்த்துவதாக கார்டியன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)