வெள்ளி, மே 30, 2014
வியாழன், மே 29, 2014
கறுப்பினப் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ காலமானார்
லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங் களில் நின்றொளிரும் ஒளியாய் எழுந்த கறுப்பினப் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ அமெரிக்காவில் உள்ள தனது இல்லத் தில் புதன்கிழமை மரணமடைந்தார். சில நாட்களாகவே அவர் உடல்நலம் குன்றியிருந்தார். அவருக்கு 86 வயது. புதன்கிழமை காலை 8 மணியளவில் அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.
புதன், மே 28, 2014
திங்கள், மே 26, 2014
பாஜக அரசு மீதான அணுகுமுறை: மே 29-ல் மதிமுக ஆலோசனை
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம் 29.05.2014 வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் காலை 11.00 மணிக்கும், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில், சென்னை, தாயகத்தில் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கிறது.
ஞாயிறு, மே 25, 2014
சனி, மே 24, 2014
வெள்ளி, மே 23, 2014
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 19 பேர் 499 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தனர்
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கடந்த மார்ச் 26–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 9–ந்தேதி வரை நடை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வை பள்ளிகள் மூலம் 10.38 லட்சம் மாணவர்களும் தனித் தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவ–மாணவிகளும் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
வியாழன், மே 22, 2014
புதன், மே 21, 2014
பீகார் புதிய முதல்-மந்திரியாக ஜிதன்ராம் மஞ்சி பதவி ஏற்றார்
பீகார் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று நிதிஷ்குமார், தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ.க்கள் கூடி அவரை மீண்டும் முதல்-மந்திரியாக தேர்வு செய்ததை நிதிஷ்குமார் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நிதிஷ்குமார், பீகார் மாநில புதிய முதல்-மந்திரியாக, தனது ஆதரவாளரான ஜிதன்ராம் மஞ்சியை தேர்வு செய்தார்.
செவ்வாய், மே 20, 2014
தோமஸ் மற்றும் உபர் கிண்ண பூப்பந்து போட்டி முடிவுகள்
புதுடில்லியில் நடைபெற்று வரும் தோமஸ் உபர் கிண்ண காற்பந்து போட்டி முடிவுகள்:
தோமஸ் கிண்ண முடிவுகள்
B குழு
டென்மார்க் ஹாங்காங்கை 4-1 என்ற புள்ளிகளில் வென்றது
ஜப்பான் இங்கிலாந்தை 4-1 என்ற புள்ளிகளில் வென்றது
C குழு
மலேசியா இந்தியாவை 4-1 என்ற புள்ளிகளில் வென்றது
தென்கொரியா ஜெர்மனியை 3-2 என்ற புள்ளிகளில் வென்றது
D குழு
சீனா பிரான்ஸ் நாட்டை 5-0 என்ற புள்ளிகளில் வென்றது
உபர் கிண்ண முடிவுகள்
X குழு
இந்தோனேசியா ஆஸ்திரேலியாவை 5-0 என்ற புள்ளிகளில் வென்றது
தென்கொரியா சிங்கப்பூரை 5-0 என்ற புள்ளிகளில் வென்றது
W குழு
சீனா ரஷ்யாவை 5-0 என்ற புள்ளிகளில் வென்றது
இங்கிலாந்து தைவானை 3-2 என்ற புள்ளிகளில் வென்றது
Y குழு
இந்தியா கனடாவை 5-0 என்ற புள்ளிகளில் வென்றது
திங்கள், மே 19, 2014
ஞாயிறு, மே 18, 2014
சனி, மே 17, 2014
ஆம் ஆத்மி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி
மராட்டியத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தோல்வி கண்டது.
ஆம் ஆத்மி
நாட்டில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராடிய காந்தியவாதி அன்னா ஹசாரே விதைத்த விதையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முளைத்த கட்சி ஆம் ஆத்மி. அந்த கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்று அனைவரது புருவத்தையும் உயர்த்தியது.
இதனால் பாராளுமன்ற தேர்தலிலும் அந்த கட்சி பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகளுக்கு சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல அந்த கட்சி நாடு முழுவதும் பெரும்பான்மையான தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. குறிப்பாக மராட்டியத்தில் 33 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்த கட்சி சார்பில் பிரபல சமூக சேவகர் மேதா பட்கர் (வடகிழக்கு மும்பை) அஞ்சலி தமானியா (நாக்பூர்) ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர்.
தோல்வி
ஆரம்பத்தில் பெரிய கட்சிகளுக்கு சவாலாக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் தோற்றம் அளித்தனர். ஆனால் தேர்தல் தேதி நெருங்கியதையொட்டி அவர்களின் செல்வாக்கு பலவீனம் அடைய தொடங்கியது.
நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது ஆம் ஆத்மி மராட்டியத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
வியாழன், மே 15, 2014
புதன், மே 14, 2014
செவ்வாய், மே 13, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)