அமெரிக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 04, 2015

இஸ்லாமிய பெண் பயணியிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க விமான நிறுவனம்

இஸ்லாமிய பெண் பயணி ஒருவர் விமானப் பயணத்தின் போது மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. 

அமெரிக்காவில் வசித்து வரும் இஸ்லாமிய பெண் தஹேரா அகமத், கடந்த வாரம் சிகாகோவிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்தார்.

புதன், ஏப்ரல் 15, 2015

அமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை

அமெரிக்காவில் பொதுமக்களின் கடவுள் நம்பிக்கையை தனது சுய லாபத்திற்காகப் பயன்படுத்தி, வங்கி மற்றும் வரி மோசடி உட்பட பல்வேறு நிதி மோசடிக் குற்றங்களில் ஈடுபட்ட, இந்திய சாமியாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளி, மார்ச் 27, 2015

அமெரிக்காவில் 5 மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

அமெரிக்காவின் மன்ஹேட்டன் நகரில் ஐந்து அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர சத்தத்துடன் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அதற்கு அருகே உள்ள மற்றொரு அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

சனி, மார்ச் 07, 2015

நியூ யார்க்கில் கடுமையான பனிப்பொழிவு: ஓடுபாதையில் இருந்து விலகி பனிக்குவியலில் பாய்ந்து புதைந்த விமானம்

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரிலிருந்து நியூ இங்கிலாந்து வரையில் கடந்த பல மணி நேரமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனையடுத்து, பல மாகாணங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அட்லாண்டா நகரில் இருந்து வடக்கு நியூ யார்க் நகரில் உள்ள ல குவார்டியா விமான நிலையத்துக்கு உள்ளூர் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் டெல்டா நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்.டி.-88’ ரக விமானம் தரையிறங்க அனுமதி கேட்டு வானத்தில் வட்டமிட்டு சுற்றி வந்தது.

சனி, பிப்ரவரி 28, 2015

அமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது 6 பெண்கள் கற்பழிப்பு புகார்

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய யோகா குரு மீது 6 பெண்கள் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்துள்ளனர். 

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய யோகா கல்லூரி என்ற பெயரில் யோகா கல்லூரி நடத்தி வருபவர், யோகா குரு பிக்ரம் சவுத்ரி (வயது 69). இந்திய அமெரிக்கரான இவரது பூர்வீகம் கொல்கத்தா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். 

புதன், ஜனவரி 28, 2015

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 6500 விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவில் நியூயார்க் நகரம், வடகிழக்கு அமெரிக்க நகரங்களில் பனிப்புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நியூஜெர்சி, மைனே, நியூஹம்ப்ஷயர் மாகாண நகரங்கள் குளிர்புயலின் பிடியில் சிக்கித்தவிக்கின்றன. வடகிழக்கு பகுதியில் பனிப்புயல், இதுவரை வரலாறு கண்டிராத அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. பல இடங்களில் பனிப்புயல் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இருக்கும்.

வியாழன், ஜூலை 31, 2014

வியாழன், ஜூலை 24, 2014

மலேசிய விமானம் தகர்ப்பு : சர்வதேச விசாரணை நடத்த பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விசாரணை  தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், நியூயார்க்கில் உள்ள ஐநா  தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. 15 உறுப்பு நாடுகளும் கலந்து  கொண்டன.

சனி, ஜூலை 12, 2014

அப்பாவி முஸ்லிம்களை கண்காணிப்பதை அமெரிக்கா நிறுத்தவேண்டும்!-என்.சி.எஸ்.ஓ கோரிக்கை

அப்பாவி முஸ்லிம்களை கண்காணிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்காசிய அமைப்புகளின் தேசிய கூட்டணி (என்.சி.எஸ்.ஓ.) வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதன், மே 21, 2014

கொலம்பியாவின் பேருந்து தீ விபத்தில் 31 பிஞ்சுகள் பலி

தென் அமெரிக்காவில் திங்கட்கிழமை ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. கொலம்பியாவில் குழந்தைகளை ஏற்றி சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்ததில் 31 இளம் பிஞ்சுகள் பரிதாபமாய் பலியாகியுள்ளன.

வெள்ளி, ஏப்ரல் 04, 2014

தீவிரவாதம் என்ற பெயரில் அந்நிய நாட்டில் அத்துமீறும் அமெரிக்க:சொந்த நாட்டில் தீவிரவாதத்தை கட்டுபடுத்தாதது ஏன்?

அமெரிக்க ராணுவ தளத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 4 பேர் உயிர் இழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு
ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தில் 2011–ம் ஆண்டு பணியாற்றியவர் இவான் லோபஸ் (வயது 34). பின்னர் அவர் அங்கிருந்து நாடு திரும்பி விட்டார். டெக்சாஸில் வேறொரு ராணுவ தளத்தில் பணியாற்றி விட்டு, ‘போர்ட் ஹூட்’ ராணுவ தளத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர், ‘போர்ட் ஹூட்’ ராணுவ தளத்துக்கு ராணுவ சீருடை அணிந்து கொண்டு காரில் சென்றார்.

நேராக மருத்துவப் பணியாளர்கள் தங்கியுள்ள நிர்வாகக் கட்டிடத்துக்கு சென்றார். அங்கு அவர் தனது ‘45 காலிப்ரே செமி ஆட்டோமேட்டிக்’ ரக கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். உடனே காரில் ஏறினார். அடுத்து போக்குவரத்து படைப்பிரிவினர் இருந்த கட்டிடத்துக்கு சென்றார். அங்கும் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவரை ராணுவ போலீஸ் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தினார். அப்போது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடந்தது என்ன?
நடந்தது என்ன என்பது பற்றி ராணுவ தளத்தின் தளபதி மார்க் மில்லே நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்தத் துப்பாக்கிச்சூட்டினை நடத்திய வீரர் இவான் லோபஸ், ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தில் 2011–ம் ஆண்டு பணியாற்றியவர் ஆவார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகள் பெற்றுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில்  உள்நோக்கம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. 

இது தீவிரவாதம் தொடர்பான சம்பவமும் அல்ல.  ராணுவ போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்திய போது அவருடனும் லோபஸ் மோதி உள்ளார். பின்னர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர் இழந்து இருக்கிறார்.2009–ம் ஆண்டு இதே ராணுவ தளத்தில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர். 

ஒபாமா கண்டனம்
‘போர்ட் ஹூட்’ ராணுவ தள துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிகாகோ நகரில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடந்திருக்கிறது என அறிந்தபோது, நமது இதயம் உடைந்து போனது. என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்ற வாக்குறுதியை வழங்குகிறேன். சுதந்திரத்துக்காக ‘போர்ட் ஹூட்’ ராணுவ தளம் நிறைய தியாகங்களை செய்திருக்கிறது. அந்தக் குடும்பங்களை நான் அறிவேன். அவர்களது வியக்கத்தக்க சேவையை அறிவோம். சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களோடு நமது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இருக்கும்’’ என கூறினார்.


சிகோகோவில் இருந்து வாஷிங்டன் திரும்பியதும் ஒபாமா, ராணுவ மந்திரி சக் ஹேகல், உயர் ராணுவ அதிகாரிகள், உளவுப்படை (எப்.பி.ஐ.) அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதில் ‘போர்ட் ஹூட்’ ராணுவ தள துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு அவர் உத்தரவிட்டார்.