வெள்ளி, மே 31, 2013

UAPA:கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் எதிர்ப்பு பேரணி மற்றும் மாநாடு!

திருவனந்தபுரம்:நேற்று(30/05/2013) கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்குஎதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும் நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும் வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது. 

கோடிகள் கொட்டும் ஐ.பி.எல்: அணிகளின் சராசரி லாபம் ரூ.108 கோடி!

ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்ற அந்தஸ்தோடு இருந்த கிரிக்கெட் விளையாட்டை, வியாபாரிகளின் பணம் கொழிக்கும் சந்தையாக மாற்றிய பெருமை ஐ.பி.எல்லுக்கு உண்டு. ஐ.பி.எல் என்ற 50 நாள் கிரிக்கெட் திருவிழா மூலம், விளையாட்டை சினிமாவோடு கலந்து ஒரு பொழுதுபோக்குக் கலவையாக்கி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1200 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சம்பாதிக்கிறது. கிரிக்கெட்டை விட பணத்தின் விளையாட்டும் ஐ.பி.எல்லில் அதிகம்.

கழிவறையில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய் மீது நடவடிக்கை இல்லை!-சீன அதிகாரிகள்!

சீனாவில் கழிவறைக் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாயாருக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படாது என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவர்களை உபசரித்த பள்ளிவாசல்!

தமக்கு எதிராகப் போராட்டம் நடத்த வந்த கடும்போக்காளர்களுக்கு டீ மற்றும் பிஸ்கட் கொடுத்து ஒரு பள்ளிவாசல் உபசரித்திருக்கிறது. பிரிட்டனில் நடந்த இந்தச் சம்பவத்தை பல தரப்பினரும் பாராட்டியிருக்கிறார்கள்.

யுனெஸ்கோவின் இளம் விஞ்ஞானி விருது பெரும்! - இந்தியாவின் பிலால் ஹபீப்!

உலகில் கல்வி, கலச்சாரம், அறிவியல்களின் மேம்பாட்டிற்காக செயல்படும் ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவின் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது. இங்கு 27-30 தேதி வரை யுனெஸ்கோ அமைப்பின் நிகழ்ச்சிகள் நடந்தன.  

தமிழகத்தில் குட்கா-பான் மசாலாவுக்கு தடை! : அரசாணை வெளியீடு!

இந்தியா முழுவதும் குட்கா, பான்மசாலா போன்ற மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி கேட்டிருந்தது. அதனை கவனத்தில் கொண்ட தமிழக அரசு, புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் அவற்றுக்கு மீண்டும் தடை விதிக்க முடிவு செய்தது. 

வியாழன், மே 30, 2013

திருமணம் ஆகாமலேயே தாயான பெண்ணுக்கு பிறந்தது கழிவுநீர் குழாயில் மீட்கப்பட்ட குழந்தை பற்றி உருக்கமான தகவல்கள்!

சீனாவில் கழிவுநீர் குழாயில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணம், ஜின்ஹுவா நகரில் நடந்த இந்த சம்பவம் நேரடியாக டெலிவிஷனில் ஒளிபரப்பானதால், அதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிக்குமா?

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் ரொஸ்தம் கசேமி (Rostam Qasemi), ஈரானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியான கச்சா எண்ணெய் அளவை மீண்டும் அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பிசிசிஐ மீது மோசடி வழக்கு! : மும்பை நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் பொதுமக்களை ஏமாற்றியதாக மோசடி வழக்கு பதிய வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஒன்றாக படித்த தாய்-மகனுக்கு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஒரே மேடையில் பட்டம்!

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உலகப்புகழ் பெற்ற கன்சாஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சவுதி அரேபியாவை சேர்ந்த தாயும். மகனும் ஒரே விழா மேடையில் பட்டம் பெற்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்து பின்லேடன் இறந்தாரா?

அல் கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. இந்நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ஒசாமாவின் மெய்காப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்க 'சீல்' படையினர் சுற்றி வளைத்தபோது தனது இடுப்பில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்து தான் ஒசாமா பின்லேடன் தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மெய்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தா 'கல்ப் நியூஸ்' என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நாய்களின் உடம்பில் ஏற்பட்ட காயங்களுக்கும் இஸ்லாமியர்களை பயங்கரவாதியாக சித்தரிக்க முயன்ற ஊடக விபச்சாரம்!

இந்தியாவைப் பிடித்த சாபக்கேடுகளில் முதல் இடம் பிடிப்பது ஊடகங்கள்...! ஊடக விபச்சாரம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் கீழ்கண்ட உண்மை நிகழ்வைக் கண்டு தெளிவு கொள்ளலாம்..!!!

புதன், மே 29, 2013

அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்வதை நிறுத்துங்கள்.. சீமான் கோரிக்கை !

  • தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவை, நெல்லையில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, விசாரணைக்கு உட்படத்துவது ஏற்கத்தக்கதல்ல, இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிக எம்.எல்.ஏ சந்தித்தார் !

  • தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிக எம்.எல்.ஏ(சேர்ந்தமங்கலம்) சாந்தி என்பவர் இன்று காலை சந்தித்து பேசினார். தமது தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் அவர் அளித்தார்.

ராஜிவ் காந்தி படுகொலை : மறுவிசாரணை கோரி புதிய வழக்கு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், புதியதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாஜக அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது! - ராம் ஜெத்மலானி!

புது டெல்லி: "முட்டாள்தனமான நடவடிக்கை எடுத்துள்ள பாஜக பல லட்சம் வாக்குகளை இழக்கப்போகிறது" என கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக 6 ஆண்டுகாலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பாஜகவின் தலைமையை விமர்சித்ததற்காக மூத்த வழக்கறிஞரும், பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி ஆசாத் படைக்கும் போராளிகள் குழுவுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதில் சிரிய அரச படைக்கு ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

மியான்மர்:முஸ்லிம்கள் 2 குழந்தைகள் மட்டும் போதும் என்ற அரசின்கொள்கைக்கு சூகி கண்டனம்!

யங்கூன்: மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு 2 குழந்தைகள் மட்டும் போதும் என்ற உள்ளூர் நிர்வாகத்தின் முடிவுக்குஎதிர்கட்சி தலைவர் ஆங்சாங் சூகி கண்டனம் தெரிவித்துள்ளார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முதன் முதலாக சூகி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் கலவரம்!

லாஷியோ: பர்மாவின் வடகிழக்கு பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பர்மாவின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோ. இங்கு, புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம் ஒருவர் எரித்து கொன்றுவிட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

செவ்வாய், மே 28, 2013

மலேசிய நண்பன் தினசரியில் வெளிவந்த SDPI-யின் சமுக நீதி மாநாட்டு செய்தி!


அப்ஸா : உமர் அப்துல்லாஹ்வுக்கு காங்கிரஸ் ஆதரவு!

ஸ்ரீநகர்:ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை(அப்ஸா) கஷ்மீரின் சில பகுதிகளில் இருந்து வாபஸ் பெறவேண்டும் என்ற ஜம்மு-கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தேவையுடைய பகுதிகளில் மட்டும் அமல்படுத்தவேண்டிய தற்காலிக சட்டமே அப்ஸா. தேவையற்ற பகுதிகளில் இருந்து இச்சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று ஜம்மு-கஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சைபுத்தீன் சோஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.அதேவேளையில் திறந்த மனதுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு பதிலாக இப்பிரச்சனையை அரசியல் ஆக்குகிறார் முதல்வர் உமர் அப்துல்லாஹ் என்று சோஸ் குற்றம் சாட்டினார்.

காலித் முஜாஹிதின் மரணம்:பாரபட்சமற்ற விசாரணை-முஸ்லிம் தலைவர்களிடம் அகிலேஷ் யாதவ் உறுதி!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் தீவிரவாத வழக்கில் சிக்கவைத்து போலீஸ் காவலில் மர்மமான முறையில் காலித் முஜாஹித் மரணமடைந்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று உ.பி மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளார்.

மௌலான காலித் முஜாஹிதீன் அடித்து படுகொலை! : SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

உத்தர பிரதேசத்தில் 2007ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காலித் முஜாஹித் விசாரணைக்காக நீதி மன்றம் அழைத்து வரும் வழியில் போலிசாரால் அடித்தே கொலை செய்யப்பட்டுளார்.

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை!

பெங்களூரு : பெங்களூரூ பாஜக அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் உண்மையை வெளிக்கொணர இவ்வழக்கை சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.

பேஃஸ் புக் நட்பால் வந்த விபரீதம்! : ரூ.5 கோடிக்காக கடத்தப்பட்ட சிறுவன்!


பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் முஸ்தபா(13) என்ற சிறுவன் 24 மணி நேரமும் இணையதளத்தில் மூழ்கியிருந்ததால் தனது பேஃஸ் புக் மூலம் பல முகம் தெரியாத புதிய நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தான். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவனுக்கு பேஃஸ் புக்கில் அறிமுகமான சிலர் முஸ்தபாவை சந்திக்க விரும்புவதாக கூறினர்.

ஜெர்மனியில் பிள்ளையை ஒழுங்காக வளர்க்காத தாய்க்குத் தண்டனை!

ஜெர்மனியில் கடந்த 2009ம் ஆண்டில் ஒரு பள்ளிக்கூடத்தில் டிம் கிரட்ஷ்மர்(Tim Kretschmer) என்ற 17 வயது நிரம்பிய மாணவன் ஒருவன் அங்கிருந்த 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். மேலும் இவனது துப்பாக்கிச் சூட்டால் 14 பேர் படுகாயமுற்றனர். இறுதியில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்து போனான். இந்தச் சிறுவனின் தாயே இந்தக் கொலைகளுக்கும், பள்ளிக்கூடத்திற்கு மில்லியன் கணக்கில் ஏற்பட்ட சேதங்களுக்கும் பொறுப்பு என்று சட்டதரனிகள் கூறினர்.

திங்கள், மே 27, 2013

எழுச்சியுடன் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுர மாவட்ட சமூக நீதி மாநாடு!

முஸ்லீம்களுக்கு மத்தியில் 10 சதவீத இடஒதுக்கீட்டையும், மாநிலத்தில் 7 சதவீத இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே வலியுறுத்தி எஸ்.டி.பி. கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) மே 26 அன்று பல்லாவரம் ஆடுதொட்டி மைதானத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் திடலில் சமூக நீதி மாநாட்டை நடத்தியது.

மியான்மரில் முஸ்லிம்கள் 2க்கு மேல் குழந்தை பெறக் கூடாது! மியான்மர் அரசின் உத்தரவு!

மியான்மரில் முஸ்லிம்கள் 2-க்கு மேல் குழந்தை பெறக்கூடாது என்று மியான்மர் அரசு உத்தரவிட்டுள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும், ராக்கேன் புத்தர்களுக்கும் இடையே மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்களாம் மியான்மர் அதிகாரிகள்.

காலித் முஜாஹித் மரணம்:போலீஸின் பொய்க்கூற்றுகளும், நீதிமன்றங்களின் அநீதியும்!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் விசாரணை கைதியாக இருந்த காலித் முஜாஹிதின் கஸ்டடி மரணத்தில் போலீஸின் போலி வேடம் குறித்தும், நீதிமன்றங்களின் அநீதங்களும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. முஜாஹிதின் மரணம் குறித்த போலீசின் அதிகாரப்பூர்வ விளக்கம் சரியென்றால், அவர் ஒரு அமானுஷ்ய மனிதராக இருக்கவேண்டும். அதிகாரப்பூர்வ விளக்கத்தின் படி 32 வயதான காலித் முஜாஹித், மதியம் 3.40க்கு உடல் சுகவீனம் ஏற்பட்டு பாரபங்கியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார். அங்கு வைத்து அவர் மரணமடைந்ததாக உறுதிச் செய்யப்படுகிறது. பாராபங்கியில் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் எஸ்.மினிஸாதி மருத்துவமனைக்கு சென்றபோது இதனை உறுதிச் செய்துள்ளார். 

வியாழன், மே 23, 2013

ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புடைய குற்றவாளிகள்! மாலேகான் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை குற்றவாளியாக சேர்த்து 2006-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சி சிறப்பு மோக்கா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி,மனோகர் நர்வாரியா ஆகியோரின் பங்கினை தெளிவுப்படுத்தும் இக்குற்றப்பத்திரிகையில் சுவாமி அஸிமானந்தாவின் பெயர் இடம் பெறவில்லை.

400 கோடி ஊழல்! குஜராத் அமைச்சருக்கு எதிராக விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

400 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான வழக்கில் மோடி அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள புருஷோத்தம் சோலங்கி மீது விசாரணை நடத்த காந்தி நகர் சிறப்பு நீதிமன்றம் ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆறு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற காட்பரிஸ் சொக்லேட்டில் இரும்புஆணி! : நீதிமன்றத்தில் வழக்கு!

பிரிட்டனில் கடந்த 1905ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காட்பரிஸ்(Cadbury) விற்பனை பொருட்கள் அனைத்தும் பாலிலேயே செய்யப்படுவதால் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் உலக பிரசித்தி பெற்றவை ஆகும்.

புதன், மே 22, 2013

சவுதி அரேபியாவில் புதிய இந்திய பாஸ்போர்ட் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது!

புதிய பாஸ்போர்ட்களுடன் இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு வேலை செய்ய வரும் இந்தியர்களை அனுமதிக்க முடியாது என சவுதி அரேபியா அரசு சமீபத்தில் அறிவித்தது. பழைய இந்திய பாஸ்போர்ட்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் புகைப்படம் இரண்டாம் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால், புதிய பாஸ்போர்ட்டில் மூன்றாம் பக்கத்தில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. 

காலித் முஜாஹித் மரணம்: விசாரணை நடத்தக் கோரி உ.பி மாநில சட்டப்பேரவையை நோக்கி எஸ்.டி.பி.ஐ பேரணி!



உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் 2008 டிசம்பரில் எஸ்.டி.எஃப் படையினரால் கைதுச் செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர் காலித் முஜாஹிதின் மர்மமான கஸ்டடி மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்தியது.

யாசின் மாலிக்குடன் இந்திய அரசு பேசினால் மட்டும் சரியா? - நாம் தமிழர் கட்சி கேள்வி!

சென்னை: "ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணி  தலைவர் யாசின் மாலிக்கை அழைத்து இந்திய அரசு பேசினால், அது சரி! நாங்கள் அழைத்து பேச வைத்தால் அது மட்டும் தவறா?" என நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கடலூரில் மே-18 எழுச்சி நாள் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை நாம் தமிழர் கட்சி அழைத்து பேசவைத்தது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுவருகிறது. சீமானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இஷ்ரத் ஜஹான் நிரபராதி : சரத்பவார்!

மும்பை: குஜராத் போலீஸ் போலி என்கவுண்டர் மூலம் கொலைச் செய்த மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் நிரபராதியான கல்லூரி மாணவி என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார்.
தானேயில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய சரத்பவார் கூறியது:தீவிரவாதி என்று முத்திரைக் குத்தி நிரபராதியான இளம்பெண்ணை முதல்வர் நரேந்திரமோடியும், குஜராத் போலீசும் கொலைச் செய்துள்ளனர். தீவிரவாதிகளை துப்பாக்கிக்கு இரையாக்கிய தனது போலீஸ் படையைக் குறித்து பெருமிதம் கொள்வதாக நரேந்திர மோடி கூறியிருந்தார். இஷ்ரத்

செவ்வாய், மே 21, 2013

"போலி என்கவுண்டரில் போலீஸ் என்னை கொலைச் செய்ய முயன்றது – லியாகத் அலி ஷா !

  • போலி என்கவுண்டர் மூலம் டெல்லி போலீஸ் தன்னை கொலைச் செய்ய முயன்றதாக முன்னாள் ஹிஸ்புல் முஜாஹிதீன் உறுப்பினரான லியாகத் அலி ஷா கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்க்கு கௌரவ டாக்டர் பட்டம்!

ஆப்கானிஸ்தானின் அதிபர் ஹமீது கர்சாய் மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லவ்லி ப்ரொபெசனல் பல்கலைக்கழகத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்-அமைச்சர் பிராகாஷ் சிங் பாதல் கலந்து கொண்டார்.

சட்டீஷ்கரில் போலி என்கவுண்டர்: குழந்தைகள் உள்பட எட்டு கிராமவாசிகள் படுகொலை!

புதுடெல்லி: சட்டீஷ்கர் மாவட்டம் பிஜாப்பூரில் இஹாத்ஸமத்தே கிராமத்தில் சி.ஆர்.பி.எஃப் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட எட்டுபேர் அப்பாவி கிராமவாசிகல் கொல்லப்பட்டனர். ஏராளமானோரை காணவில்லை என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். இதனிடையே தங்களின் சிறப்பு படையான கோப்ராவைச் சார்ந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டதாக சி.ஆர்.பி.எஃப் கூறுகிறது.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிராமவாசிகள் என்பதை உறுதிச் செய்த சி.ஆர்.பி.எஃப் ஒரு மாவோயிஸ்ட் முகாமை அழித்துள்ளதாக கூறுகிறது. இச்சம்பவம் குறித்து சட்டீஷ்கர் போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளது. கிராமவாசிகள் வருடாந்திர

எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் எல்லையை மூடியது எகிப்து!

கெய்ரோ: ஏழு சக ஊழியர்களை ஆயுதக் குழு ஒன்று கடத்திச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் எல்லையை எகிப்திய போலீஸ் மூடியுள்ளது. எகிப்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே சரக்குகளை பரிமாறிக்கொள்ளும் அல் அவ்ஜா பாதை மூடப்பட்டுள்ளது.சரக்குகளுடன் வந்த இரு நாட்டு ட்ரக்குகளும் இரு புறங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

திங்கள், மே 20, 2013

காலித் முஜாஹித் படுகொலை! - 42 போலீசார் மீது வழக்கு பதிவு!

தீவிரவாத குற்றச்சாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த காலித் முஜாஹித் மர்மமான முறையில் இறந்து விட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும்போது போலீஸ் வேனில் மாரடைப்பால் மரணம் என போலீஸ் கூறுகிறது, ஜெயிலை விட்டு செல்லும்போது பூரண உடல் நலத்துடன் சென்றதாக ஜெயில் கண்காணிப்பாளர் கூறுகிறார். 

குஜராத் இன அழிப்பு குற்றவாளி அமித்ஷாவுக்குப் பதவி!

புது டெல்லி: குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இன அழிப்பு வழக்கில் குற்றவாளியான குஜராத் உள்துறை முன்னாள் அமைச்சரும் மோடிக்கு நெருக்கமானவருமான அமித்ஷாவுக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரமுகர்! Vs. பயங்கரவாதி!!

கடந்த மாதம் 17 ஆம் தேதி பெங்களூருவில் பா.ஜ.க அலுவலகம் அருகே குண்டு வெடித்ததைத் தொடர்ந்து 16பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பாவிகள் என்பதால் தமிழக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டங்களையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார் முதல் சவூதி அரேபியா பெண்!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். இச்சாதனை குறித்து அவரது தந்தை ஹசன் முஹாரக் கூறுகையில், நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். சனிக்கிழமை மாலை முஹாரக் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.

சிரியா பொதுமக்கள் மீது ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 40 பேர் பலி!

சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராளிக் குழுக்களும் தற்பொழுது ஆயுதம் எந்தி போரிட்டு வருகின்றனர். இந்தப் போரில் இது வரை 80 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதுடன் 15 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சோதனை வடகொரியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் நேற்று நடத்தப்பட்டது.

ஞாயிறு, மே 19, 2013

நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட "காலித் முஜாஹித்" நீதிமன்றக் காவலில் படுகொலை!

தீவிரவாத குற்றச்சாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த காலித் முஜாஹித் நேற்று (18/05) மாலை மர்மமான முறையில் இறந்து விட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும்போது போலீஸ் வேனில் மாரடைப்பால் மரணம் என போலீஸ் கூறுகிறது, ஜெயிலை விட்டு செல்லும்போது பூரண உடல் நலத்துடன் சென்றதாக ஜெயில் கண்காணிப்பாளர் கூறுகிறார். இது திட்டமிட்ட கொலை என்கிறார், காலிதின் வழக்கறிஞர் ரந்தேர் சிங்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு 6 ஆண்டுகள் நிறைவு! - கைது செய்யப்படாத குற்றவாளிகள்!

9 பேர் கொல்லப்பட்டு, 58 பேர் காயமடைய காரணமான ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 6 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. ஆனால், இக்குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய சூத்திரதாரிகளான சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா, சுரேஷ் நாயர் ஆகிய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை இன்னமும் தலைமறைவாகவே உள்ளனர். அவர்களை கைது செய்ய புலனாய்வு ஏஜன்சிகளால் இதுவரை முடியவில்லை.

யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்கள் ஜனநாயகத்தை கேலிச் செய்கின்றன!-பிரசாந்த் பூஷண்!

கோழிக்கோடு: யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்கள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாக பிரபல மனித உரிமை ஆர்வலரும், உச்சநீதிமன்றத்தில்மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் கூறினார்.

நீதி கேட்டு குடியரசு தலைவருக்கு அப்துல் நாஸர் மஃதனி கடிதம்!

கொச்சி: நிரபராதியான தனக்கு நீதி வேண்டும் என்று கோரி கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கைதுச்செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநிலபி.டி.பி கட்சியின் தலைவரான அப்துல் நாஸர் மஃதனி இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தனக்கு நீதி வேண்டும் என்று கோரி 35 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.சிறை சூப்பிரண்டு வழியாக கடந்த வெள்ளிக்கிழமை இக்கடிதம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளத்.இக்கடிதத்தின் நகல் ஊடகங்களுக்கு பி.டி.பி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது ரஜீப் மூலம் அளிக்கப்பட்டது.