திங்கள், ஆகஸ்ட் 26, 2013

மியான்மரில் மீண்டும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்!

மியான்மரில் மீண்டும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதும், அவர்களின் வீடுகள், கடைகள் மீதும் புத்த வன்முறைக் குழுக்கள் தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த ஓராண்டாக நடந்துவரும் இனக்கலவரத்தில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சுமார் 1 1/2 லட்சம் பேர் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி அகதிகள் முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

தடையை மீறி அயோத்திக்கு பேரணி செல்ல முயற்சி! தொகாடியா உட்பட 350 பேர் கைது!

உ.பி., அரசின் தடையை மீறி அயோத்திக்கு யாத்திரை செல்ல விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. சரயு நதிக்கரையில் பூஜை செய்ய முயன்ற தொகாடியா கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 30 – “எகிப்து ஆதரவு தினம்” : பாப்புலர் ப்ரண்ட் அறிவிப்பு!

புதுடெல்லி: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா எதிர்வரும் ஆகஸ்ட் 30ம் தேதியை “எகிப்து ஆதரவு தினமாக” அனுசரிக்கும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து அதன் தேசியத் தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி வருமாறு:

சனி, ஆகஸ்ட் 24, 2013

அஸ்மா பல்தாஜிக்கு தந்தை எழுதிய கடிதமும்! துருக்கி பிரதமர் ஏர்துகானின் கண்ணீரும்!

எகிப்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரி நடந்த போராட்டத்தின் போது, ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் முர்ஸியின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முஹம்மது பெல்தாகியின் மகள் அஸ்மா கொல்லப்பட்டார்.

மோடியை அரசு அழைக்கவில்லை! -பிரிட்டன் தூதர்!

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி பிரிட்டனுக்கு அரசு விருந்தினராக அழைக்கப்படவில்லை என பிரிட்டனுக்கான இந்திய தூதர் ஜேம்ஸ் பெவன் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

பயங்கரவாத அமைப்பான அபினவ் பாரத்தை தடைச் செய்யும் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு!

இந்தியாவில் பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டுள்ள ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தை தடைச் செய்ய மஹராஷ்ட்ரா அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

சிரியாவில் இரசாயன தாக்குதலில் 1300 பேர் பலி: ஐ.நா விசாரணை!

டமாஸ்கஸ்: அரசுக்கு எதிரான புரட்சிப் படையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் ரசாயன ஆயுதத் தாக்குதலை அரசு ஆதரவுப் படையினர் நடத்தவில்லை. அந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று சிரியா அரசு மறுத்துள்ளது. எனினும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டுப் போரில் ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரசாயன ஆயுத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்த ஐநா வல்லுநர் குழுவை அனுப்பி வைக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

எகிப்தில் ராணுவத்தில் பணியாற்றுவது இஸ்லாத்திற்கு எதிரானது: யூசுஃப் அல் கர்ழாவி!

தோஹா: அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோரை கொலைச் செய்வதை இஸ்லாம் தடைச் செய்துள்ளது என்று உலக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரான டாக்டர் யூசுஃப் அல் கர்ழாவி மார்க்க தீர்ப்பை (ஃபத்வா) வெளியிட்டுள்ளார்.

கொடைக்கானல் மலையில் ஆதிவாசிகள் போல் தீவிரவாதிகள் ஊடுருவல்!

கொடைக்கானல் மலையில் ஆதிவாசிகள் போல் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலையொட்டி தேடும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி, பெரும்பள்ளம் இடையே பொய்யாவழி வனப்பகுதியில் கடந்த 19.4.2008– ம் ஆண்டு தீவிரவாதிகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

சிறையிலிருந்து 365 இந்தியர்கள் விடுதலை செய்யும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 365 இந்தியக்கைதிகளை சனிக்கிழமை விடுதலை செய்யப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. கராச்சி மிலிர் மாவட்ட சிறையிலிருந்து 340 மீனவர்களும், பலூசிஸ்தான் கட்டானி சிறையிலிருந்து 25 படகுப்பணியாளர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. 

ஹிட்லரின் தந்திரத்தை பின்பற்றும் மோடி! -திக்விஜய் சிங் தாக்கு!

ஆட்சியின் அதிகாரத்தை பிடிக்க மோடி சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின் தந்திரத்தை பின்பற்றுகிறார். இதற்கான நிறைய ஒற்றைமைகள் அவரது நடவடிக்கையில் இருப்பதை நான் காண்கிறேன். 

“முஸ்லிம்களுக்கு சட்ட உதவி மட்டும் போதாது!”: பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து!

புதுடெல்லி: தீவிரவாத வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு சட்ட உதவி மட்டும் போதாது, சிறப்பு விசாரணை கமிஷன்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

வியாழன், ஆகஸ்ட் 22, 2013

எகிப்தில் ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக உலகெங்கிலும் மக்கள் கொந்தளிப்பு!

எகிப்தில் இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புகெதிராக ஜனநாயக ரீதியில் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது, இராணுவம் மற்றும் காவல்துறையின் கொடூரத் தாக்குதல்களினால் குழந்தைகள், பெண்கள்,இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

ஃபேஸ்புக் நிர்வாகத்தையே அலறவைத்த பலஸ்தீனியருக்கு பரிசளிக்க முடிவு!

உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. இதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் என்பவரிடம் தொடர்பு கொண்ட பலஸ்தீனியரான கலீல் ஷ்ரியதெ என்பவர் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு அம்சத்திலுள்ள குறையொன்றைச் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், கலீலின் வேண்டுகோளுக்கு எவ்வித மறுமொழியும் ஃபேஸ்புக் நிறுவனம் அளிக்கவில்லை.

எகிப்து இராணுவத்தை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

மதுரை: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது முர்ஸியின் அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவத்தின் துணையுடன் ஆட்சியில் உள்ள சட்டவிரோத இடைக்கால அரசு,தன்னுடைய அரசை காப்பாற்றிக் கொள்ள அனைத்து வரம்புகளையும் மீறியுள்ளது.

தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்குடன் செயல்பட்டு வரும் காரைக்கால் S.P.வெங்கடசாமி மீது புதுவை அரசே உடனே நடவடிக்கை எடு! : பாப்புலர் ஃப்ரண்ட்

சுதந்திர உணர்வையும், சுதந்திர போராட்டத் தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் மற்றும் தேசத்திற்கான நமது கடமையை உணர்த்தும் விதமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தன்று "வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாவோம்" என்ற முழக்கத்தை முன்வைத்து "ஃப்ரீடம் மீட்" என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது. 

ஹிந்துத்துவ குண்டர்களால் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்ட துன்டா! : யார் இந்த துன்டா?

புதுடெல்லி: டெல்லி நீதிமன்ற வளாகத்தில் செய்யத் அப்துல் கரீம் என்ற துன்டா (வயது 70) சரமாரியாக தாக்கப்பட்டார். அவரது வழக்கில் இரகசிய விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.

புதன், ஆகஸ்ட் 21, 2013

முர்ஸிக்கு உடனடியாக அதிபர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும்!-வெனிசூலா அதிபர்

சவூதி அரேபியா, யு.ஏ.இ, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் ராணுவத்தின் நடவடிக்கையை ஆதரிக்கும் வேளையில் வெனிசூலா அதிபர் நிகோலஸ் மத்யூரா முர்ஸிக்கு உடனடியாக அதிபர் பதவியை மீண்டும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு எகிப்தில் உள்ள வெனிசூலா நாட்டு தூதரும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் யாத்திரைக்குத் தடை!- உ.பி அரசு

அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மேற்கொள்ளவிருந்த யாத்திரைக்கு உ.பி அரசு தடை விதித்துள்ளது.

தன்னோடு விவாதம் புரிய தயாரா?-மோடிக்கு உவைஸி சவால்!

ஹைதரபாத் :  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வயதான பிரதமரை விவாதத்துக்கு அழைப்பதற்கு பதில் தன்னோடு விவாதம் புரிய தயாரா என்று அஸதுத்தீன் உவைஸி கேள்வி எழுப்பியுள்ளார்.

காலித் முஜாஹித் படுகொலை : 3 மாதம் முடிந்தும் நீதி கிடைக்காத தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

லக்னோ : உ.பி. சட்டசபைக்கு வெளியே நடத்தப்படும் காலவரையற்ற தர்ணா போராட்டத்திற்கும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் இன்றோடு (ஆகஸ்ட் 19) மூன்று மாதங்கள் பூர்த்தியாகிவிட்டன.

திங்கள், ஆகஸ்ட் 19, 2013

"தீவிரவாதி என்று நிரூபிக்க முடியுமா?" - இந்தியாவுக்கு ஹஃபீஸ் சையத் சவால்!

தன்னை தீவிரவாதி என்று குறிப்பிடும் இந்திய அரசால் அதை நிரூபிக்க முடியுமா? என்று ஜமாஅத்துத் தாவா என்னும் அமைப்பின் தலைவரான ஹஃபீஸ் சையத் சவால் விடுத்துள்ளார்.

தேசியகொடிக்கு அவமதிப்பு: ஹஸாரே மீது வழக்கு!

ஜான்பூர்: தேசியக்கொடியை அவமதித்ததாக அன்னா ஹஸாரே மீது வழக்குப் பதிவுச் செய்ய ஜான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோக்பால் மசோதாவுக்காக உண்ணாவிரதம் நடத்தி பிரசித்திப் பெற்ற அன்னா ஹஸாரே உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் ஜனதந்திர யாத்திரை நடத்தினார். கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி அவர் ஜான்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தேசியக்கொடியை அவமதித்து விட்டதாக வழக்குரைஞர் ஹிமான்சு ஸ்ரீவஸ்தவா என்பவர் ஜான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மோடியை விமர்சித்தால் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் – ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்!

புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ்  நரேந்திர மோடியை விமர்சனம் செய்யும் பாஜக கட்சிக்காரர்களை 6 ஆண்டுகளுக்கு நீக்கலாம் என்று பாஜகவைக் கேட்டுக்கொண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

மலேசியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஈகை திருநாள்!

மலேசியா: மலேசியாவில் இன்று (08/08/13) ஈகை திருநாள் கொண்டாடப்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலும்பூர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் காலை சரியாக 9 மணிக்கு தொழுகை நடத்தப்பட்டது. இதில் மலேசியா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, பர்மா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அரேபிய நாட்டை சேர்ந்த பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி அன்பினை பரிமாறிக்கொண்டனர்.

வெள்ளி, ஆகஸ்ட் 02, 2013

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதார தடை!

அணு உலை பிரச்சினை காரணமாக ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது. இதன்படி ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா, சீனா உள்பட 8 நாடுகள் குறைத்து வருகின்றன. சமீபத்தில் ஈரானில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஹாசன் ரவுஹானி வெற்றி பெற்றார். அவர் வருகிற ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்க இருக்கிறார்.

பழங்குடியின பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்! -அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பழங்குடியின பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வதாக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் காந்திலால் துரியா குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில் தலித் கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அதிகமாக இளம்பெண்களை கடத்திச் செல்வதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பழங்குடியின தலைவருமான துரியா கூறுகிறார்.

தெலுங்கானா உருவாக்கம்: பா.ஜ.கவுக்கு சாதகம்! முஸ்லிம்களுக்கு பாதகம்! -அஸாஸுத்தீன் உவைஸி!

ஹைதராபாத்: ஆந்திர பிரதேச மாநிலத்தை பிரித்து தெலுங்கானா புதிய மாநிலம் உருவாக்கியது பா.ஜ.கவுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்றும், புதிய மாநிலம் முஸ்லிம்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீனின் (எம்.ஐ.எம்) தலைவரும் ஹைதராபாத் எம்.பியுமான அஸாஸுத்தீன் உவைஸி கூறியுள்ளார்.

வியாழன், ஆகஸ்ட் 01, 2013

ம.பி.: பாஜக அரசுக்கு எதிராக அக்கட்சியின் மாணவர் பிரிவு போராட்டம்!

மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக அக்கட்சியின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யா பரிஷத் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது.

அத்வானி சேலம் வருகை! பாதுகாப்பில் 5 ஆயிரம் போலீசார்!

பா.ஜ.கவின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜ.க வின் மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி இன்று சேலம் வருகிறார்.

“பாலைவனத்தின் அதிசயம்” ஓட்டுனரே இல்லாத மெட்ரோ ரயில் திட்டம் சவுதியில் தொடக்கம்!

சவுதி அரேபியாவில், ஓட்டுனரே இல்லாத மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஓட்டுனரே இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், வருகிற 2014ம் ஆண்டில் முதல் காலாண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனா: சாம்சங் S4 மொபைல் வெடித்து சிதறியது! -வீடு முற்றிலும் எரிந்து நாசம்!

சீனாவில் சாம்சங் S4 வெடித்து சிதறி மொத்த வீடும் எரிந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி கைபேசி நிறுவனமான சாம்சங் குறித்த சர்ச்சைகள் தினமும் வந்த வண்ணம் தான் உள்ளது.

திமுக பிரமுகர் கொலையில் எட்டுப்பேர் கைது!

திமுக பிரமுகர் இடிமுரசு இளங்கோ என்பவர் இரு நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட வழக்கில், எட்டுப் பேரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் க. இடிமுரசு இளங்கோ (45). திமுகவில் 45-ஆவது வட்டச் செயலராக இருந்த இளங்கோ கட்டட ஒப்பந்தப் பணியையும் செய்து வந்தார்.

அஸ்ஸாம்: ஒன்றரை இலட்சம் ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கிய ரிஹாப்!

கோக்ரஜார்: அஸ்ஸாம் மாநிலத்தின் கோக்ரஜாரின் பித்யா பிகாஸ் கல்லூரியில் ஜூலை 28,2013 அன்று ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சிறுபான்மையினரை பாதுகாக்கவேண்டியது மதசார்பற்ற பெரும்பான்மையினரின் கடமை! - திக்விஜய் சிங்!

மதசார்பற்ற கொள்கையை நம்பும் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வகுப்புவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி அஸிமானந்தாவை விடுவித்த என்.ஐ.ஏ!

புதுடெல்லி: மாலேகான் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளதை வெளிப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சுவாமி அஸிமானந்தாவை குற்றப்பத்திரத்தில் இருந்து விடுவித்துள்ளது தேசிய புலனாய்வு ஏஜன்சி. மாலேகான் குண்டுவெடிப்பில் அஸிமானந்தாவுக்கு பங்கில்லை என்று என்.ஐ.ஏ கருதுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகே அஸிமானந்தாவுக்கு தெரியவந்தது என்று என்.ஐ.ஏ கூறுகிறது.

சர்வதேச இஸ்லாமிய ஆளுமை விருது! டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு வழங்கப்பட்டது!

துபாய்: எகிப்தில் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக அறிஞர் டாக்டர் அஹ்மத் அல் தய்யிபிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 17-வது துபாய் சர்வதேச இஸ்லாமிய ஆளுமைக்கான விருது வாபஸ் பெறப்பட்டு பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் இந்தியாவைச் சார்ந்த டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு வழங்கப்பட்டது.