வெள்ளி, மே 27, 2011

Rafah எல்லையை மீண்டும் நிரந்தரமாக திறந்தது எகிப்து - காஸா மக்கள் மகிழ்ச்சி

காஸா வுக்குள் நுழைவதற்கான Rafah எல்லை நுழைவாயிலை மீண்டும் திறந்துவிடப்போவதாக எகிப்து அறிவித்துள்ளது. வரும் சனிக்கிழமை முதல் நிரந்தரமாக இந்த எல்லையை திறந்துவிடப்போவதாக தெரிவித்துள்ள எகிப்தின் புதிய இராணுவ அரசு இது பாலஸ்தீன ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களுடன் மீண்டும் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்க உதவும் என க்கூறியுள்ளது.

இதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை, விடுமுறை தினங்களை தவிர, ஏனைய அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை இந்நுழைவாயில் திறந்திருக்கவுள்ளது.

துன்பத்திலிருக்கும் காஸாமக்களின் விடிவுக்காகவும், அவர்களது வாழ்க்கைநடைமுறையை இலகுவாக்கவும் இந்த பாதை திறந்துவிடப்பட்டுள்ளதாக எகிப்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் மின்ஹா பாக்ஹும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் நேரடித்தலையீடின்றி, காஸாவுக்குள் சென்றுவருவதற்காக ஒரே ஒரு நுழைவாயிலாக இருந்த Rafah எல்லை, நான்கு வருடங்களாக மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹெட்லியுடன் சிவசேனாவின் ராஜாராமுக்குத் தொடர்பு

மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள டேவிட் கோல்மென் ஹெட்லியும் அவனது பாகிஸ்தான் கூட்டாளிகளும் சிவசேனாவைச் சேர்ந்த ராஜராம் ரேகே என்பவருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவசேனாவின் மக்கள் தொடர்பு அலுவலராகக் கருதப்படும் ராஜாராம் ரேகே மூலம் ஹெட்லி சிவசேனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ரேகே இதனை மறுத்துள்ளார். தான் சிவசேனாவில் உறுப்பினர் இல்லை என்றும் கணினிப் பொறியாளரான தாம் அவ்வப்போது சமூக நலப் பணிகளும் செய்து வருவதாகக் கூறியுள்ளார். ஆனால் ஹெட்லிக்கு ரேகே அனுப்பியுள்ள மின்னஞ்சல் மூலம் ரேகே அரசியல் பின்னணி உள்ளவர் என்பது தெரிய வருகிறது.

ரேகே ஹெட்லிக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், அமெரிக்காவைச் சேர்ந்த எவருமோ அல்லது வேறு எந்த நாட்டடைச் சார்ந்தவரோ இந்தியாவில் கூட்டுவணிகம் செய்யவோ முதலீடுகள் செய்யவோ விரும்பினால், அவர்களுக்கு நான் உதவுவேன். சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசுத் திட்டங்கள் என்னிடம் உள்ளன. நான் சொல்வது உங்களுக்குப் புரிந்ததா? என்று குறிப்பிட்டுள்ளார். ரேகே இந்த மின்னஞ்சலை 2008 மே 19ஆம் தேதி அனுப்பியுள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

கலைஞர் தொலைகாட்சி சேனல் முடக்கப்படுமா?

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் கலைஞர் தொலைகாட்சிக்கு தொடர்பு இருப்பதால் அந்த தொலைகாட்சி சேனல் முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் மத்திய அமலாக்கத் துறையினர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டது. அலைவரிசை ஊழல் குறித்து சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவு வருமான வரித்துறை ஆகியவற்றை சேர்ந்த உயர் அதிகாரிகள் புலனாய்வு நடத்தி வருகிறார்கள்.
இந்த புலனாய்வை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருகிறது. அலைவரிசை ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஆ. ராசா, கனிமொழி, கலைஞர் தொலைகாட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாருக்கும் ஜாமீன் அளிக்கப்படவில்லை.
அலைவரிசை ஒதுக்கீடு காரணமாக பல நிறுவனங்கள் பலனடைந்துள்ளன. குறிப்பாக யுனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் சுருட்டி உள்ளன. யுனிடெக் நிறுவனத்துக்கு 22 கோட்டங்களில் இயங்க அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புதன், மே 25, 2011

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தை யூதமயப்படுத்தும் இஸ்ரேலியத் திட்டம்!

கடந்த செவ்வாய்க்கிழமை (24.05.2011) காலையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை ஊழியர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரத்தின் பாபுல் அமூத் எனப்படும் டமஸ்கஸ் நுழைவாயிலை அடுத்துள்ள பூங்காவில் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அனுசரணையுடன் அதிரடியாக நுழைந்து அங்கே நெடிதுயர்ந்து வளர்ந்திருந்த ஒலிவ் மரங்களை புல்டோஸர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
பழம் பெருமை வாய்ந்த ஜெரூசல நகரெங்கிலும் உள்ள பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்களைப் பராமரித்தல் எனும் போர்வையிலேயே இந்த அழிப்பு நடவடிக்கையை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை மேற்கொண்டுள்ளது.
அதுமட்டுமன்றி, "பழம்பெரும் ஜெரூசல நகரம் தல்மூதிய பாரம்பரியத்துக்கு ஏற்றவகையில் சீர்திருத்தப்படவுள்ளதால், வெகுவில் மேற்படி பூங்கா தல்மூதிய பாணியில் மறுசீரமைக்கப்படும்" என ஸியோனிஸ மாநகர சபை அறிவிப்பு விடுத்துள்ளது.

ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பின் தாக்கம் : மூடப்படும் பிரிட்டிஷ், ஜேர்மனிய விமான நிலையங்கள்!

ஐஸ்லாந்தில் Grimsvotn எரிமலை வெடிப்பில் எழுந்த சாம்பல் புகை,  அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து உட்பட ஐரோப்பாவின் வடபகுதி வான் பரப்பை ஆக்ரமித்துள்ளதால், தமது விமான நிலையங்கள் பலவற்றை தொடர்ந்து மூடிவருவதாக ஜேர்மனியும், இங்கிலாந்தும் அறிவித்துள்ளன.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், ஐஸ்லாந்தின் இஜப்ஜாலாஜோகுல் எரிமலை வெடித்து புகையை கக்கியதால், ஐரோப்பிய வான்பரப்பு விமான சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தன.

இப்புதிய எரிமலை வெடிப்பும், அதே போன்றதொரு தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற அச்சம் அதிகரித்துள்ளது. ஜேர்மனியின் Bremen விமானநிலையம் இன்று காலை 5.00 மணி முதலும், Hamburg விமான நிலையத்தில் இன்று காலை 6.00 மணி முதலும் மூடப்பட்டுள்ளன.

செவ்வாய், மே 24, 2011

ஆங்கில நாளேடான இந்து மன்னிப்பு கேட்கவேண்டும்- அமைச்சர் தயாநிதி மாறன்

திமுக பற்றி அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தான் கூறியதாக தெரிவிக்கப்படும் விக்கிலீக்ஸ் செய்திகளை பிரசுரித்தமைக்கு ஆங்கில நாளேடான இந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
தயாநிதி மாறன்
இல்லையெனில் 5 கோடி ரூபாய் கேட்டு தான் மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி இந்தியா தலையிடாவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக நேரிடும் என்று கூறும் 2008 அனைத்துக் கட்சித் தீர்மானம் அன்றைய முதல்வர் கருணாநிதி அரங்கேற்றிய நாடகம், மற்றும் திமுகவில் ஊழல் மலிந்துவிட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றெல்லாம் தயாநிதி மாறன் 2008 நவம்பரில் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் இந்து நாளேடு இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஈரான்:சி.ஐ.ஏவின் உளவு நெட்வர்க் முறியடிப்பு-30 பேர் கைது

டெஹ்ரான்:சி.ஐ.ஏவின் சிக்கலான உளவு நெட்வர்க்கை முறியடித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை மெஹர் நியூஸ் ஏஜன்சி தெரிவிக்கிறது. யு.ஏ.இ, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகளின் அமெரிக்க தூதரகத்தை மையமாக கொண்டு செயல்பட்ட உளவு நெட்வர்க் முறியடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 3 நாடுகளில் செயல்படும் 42 அமெரிக்க உளவு அதிகாரிகளை அடையாளம் கண்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டம்,வான்வழி பாதுகாப்பு முறைகள்,பயோடெக்னாலஜி துறை ஆகியன தொடர்பான தகவல்களை சேகரிப்பதுதான் சி.ஐ.ஏ உளவாளிகளின் திட்டமாகும். தொழிலாளர்களை தேர்வுச்செய்யும் ஏஜன்சியின் திரை மறைவில் உளவு வேலை நடந்துள்ளது.

குழந்தைகளைத் தாக்கிய ஸியோனிஸத் தீவிரவாதிகள்


கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.05.2011) ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ஷெய்க் ஜர்ராஹ் பலஸ்தீன் குடியிருப்பைச் சுற்றிவளைத்த ஸியோனிஸ தீவிரவாதிகள் குழுவொன்று பலஸ்தீன் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்படும் பலஸ்தீன் சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாக்குமுகமாக மேற்படி குடியிருப்பைச் சேர்ந்த பலஸ்தீனர்கள் ஸியோனிஸத் தீவிரவாதிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டதையடுத்து அப்பிரதேசமெங்கும் பெரும் பதட்டநிலை ஏற்பட்டது. 
இந்நிலையில் அதிரடியாக அங்கு வந்திறங்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் மேற்படி குடியிருப்புப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்நடத்தியது.
சம்பவத்தை நேரில் கண்ட அல் ஜர்ராஹ் குடியிருப்புவாசியும் ஊடகவியலாளருமான ரஸீம் அப்துல் வாஹித் விபரிக்கையில், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் தமது குழந்தைகள் தாறுமாறாகத் தாக்கப்படுவது பொறுக்க முடியாமலேயே பலஸ்தீனர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.

ஞாயிறு, மே 22, 2011

மலேசியாவில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு

கோலாலம்பூர்: மலேசியாவில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு 20.05.2011 வெள்ளிக்கிழமை மாலை புத்ரா உலக வர்த்தக மையத்தில் கோலாலகலமாகத் துவங்கியது.

மாயின் அபூபக்கர் – பரக்கத் அரங்கில் நடைபெற்ற அறிமுக விழாவின் துவக்கமாக இறைமறை வசனங்களை மஸ்ஜித் இந்தியா இமாம் மௌலவி ஹாபிஸ் எஸ்.எஸ். அஹ்மது பாஜில் பாக்கவி ஓதினார். கவிஞர் மைதீ. சுல்தான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நாணயமாற்று வியாபாரிகள் சங்க தலைவர் முனைவர் ஹாஜி முஹம்மது சுஐபு தலைமை தாங்கினார். பெர்மிம் தலைவர் டாக்டர் ஹாஜி சையது இபுராகிம் வாழ்த்துரை வழங்கினார்.

காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் அவர்கள் தனது வாழ்த்துரையில் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தவர் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப். அழகு தமிழை மிகவும் இனிமையாக பேசக்கூடிய தலைவராக விளங்கி வந்தவர் சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள். அவர்களைப் போல் பேசக்கூடிய தலைவர் எவரும் காணப்பெறவில்லை என்றார்.

மலேசியாவில் இதுபோன்றதொரு சிறப்பு மிகு மாநாட்டை நடத்தும் ஏற்பாட்டளர்களைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து டி.எம்.ரீ. ஹஸன் அலி எம்.பி., முனைவர் அய்யூப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சனி, மே 21, 2011

தேடப்படும் குற்றவாளிகள்:மரணித்தவர்களும் பட்டியலில் இடம் பிடித்த அதிசயம்

criminal records,புதுடெல்லி:பாகிஸ்தானிடம் ஒப்படைத்த தேடப்படும் பிரபல தீவிரவாதிகளின் பட்டியலில் இந்தியாவில் வசிப்பவரும், சிறையில் அடைக்கப்பட்டவர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது ஏற்கனவே நாம் அறிந்த செய்தி. ஆனால், தற்போது அதில் இறந்து போன நபர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியைத்தொடர்ந்து நேற்று சி.பி.ஐ தனது இணைய தளத்தில் இருந்து அப்பட்டியலை நீக்கிவிட்டது.
இந்தியா பாகிஸ்தானிடம் ஒப்படைத்த தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் இரண்டு பேர் சிறையில் உள்ளனர். மூன்று பேர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டனர். ஒருவர் மும்பையில் சேலை வியாபாரம் செய்துவருகிறார். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன் இந்தியாவிற்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பட்டியலை மறு பரிசீலனை செய்யப்படும் என உள்துறை அறிவித்தது. சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ எஸ்.பி மற்றும் துணை எஸ்.பி ஆகியோர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிறுபான்மையினருக்கு நலத்திட்டங்களை தயார் செய்ய நீதிபதி சச்சாரிடம் ஆலோசனை-மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

mamta, கொல்கத்தா:மேற்கு வங்காள மாநிலத்தில் 34 ஆண்டுகளாக நீடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிச கட்சியின் ஆட்சியை அகற்றிவிட்டு முதல்வராக பதவியேற்றுள்ள மம்தா பானர்ஜி பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார். முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளைக் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர்.
அப்பொழுது அவர் கூறியதாவது:விருப்பம் இல்லாத விவசாயிகளிடம் இருந்து சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட 400 ஏக்கர் நிலம் திரும்ப அளிக்கப்படும். இது தான் மேற்கு வங்க அமைச்சரவையின் முதல் முடிவு மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஜங்கல் மஹால் பகுதிக்கு சிறப்புத் பொருளாதாரத் திட்டத்தை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும்.
டெல்லியில் பிரதமர் அலுவலகம் இருப்பது போன்று கொல்கத்தாவில் விரைவில் முதல்வர் அலுவலகம் அமைக்கப்படும்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்கமட்டேன்-மாலேகான் இளைஞர் அப்தாப்

Aftab Aalam on hunger strike, மாலேகான்:மாலேகானை சேர்ந்த இளைஞர் அப்தாப் ஆலம் என்பவர் கடந்த மே 16 ஆம் தேதியிலிருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவினாஷ் குமார் மாலேகானிலிருந்து இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், அமைதியான முறையில் போராடும் மக்கள் மீது பொய்யாக போடப்பட்டு இருக்கும் அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறவேண்டும் எனவும்,  வேறு எந்த வழக்கும் அவர்கள் மீது சம்மந்தமில்லாமல் தொடரக் கூடாது எனவும் பல வேண்டுகோள்களை முன் வைத்து, உண்ணாவிரதம் இருந்ததால் அவரது உடல் நிலை மோசமான நிலையை அடைந்துள்ளது.
இதனால் 2 நாட்களுக்கு முன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட அவர், அவருக்கு தரப்படும் சிகிச்சைகளை ஏற்க மறுத்து அங்கிருந்து தப்பி உள்ளார். மீண்டும் நேற்று மாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைகளை தொடர்ந்து ஏற்க மறுக்கிறார்.

வெள்ளி, மே 20, 2011

ஃபலஸ்தீன் நாடு:ஒபாமாவின் கருத்தை நிராகரித்தது இஸ்ரேல்

obama eith nethan yau
வாஷிங்டன்:1967-ஆம் ஆண்டு அரபு போருக்கு முந்தைய இஸ்ரேல்-ஃபலஸ்தீன் எல்லைகளை உள்ளடக்கிய ஃபலஸ்தீன் நாட்டை உருவாக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் கருத்தை இஸ்ரேல் நிராகரித்துவிட்டது. தேவையான ஒரு ஃபலஸ்தீன் நாடு உருவாகவும், பாதுகாப்பாக இஸ்ரேல் நிலைபெறவும் 67-ஆம் ஆண்டைய அரபு போரின் முந்தைய எல்லைகளை பாதுகாக்க வேண்டுமென ஒபாமா கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால், ஒபாமாவின் முடிவை நடைமுறைப்படுத்த இயலாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். சமாதானத்திற்கான ஒபாமாவின் உள்ளார்ந்த நேர்மையை அங்கீகரிக்கிறோம். அதே வேளையில், ஃபலஸ்தீன் நாடு யூத நாட்டின் செலவில் உருவாக வேண்டாம் என நெதன்யாகு தெரிவித்துள்ளார். 2004-ஆம் ஆண்டு ஒபாமா அளித்த வாக்குறுதியில் உறுதியாக இருக்கவேண்டும்.

ஆயுத மழை விவகாரம்- காலாவதியான வாரண்டுடன் கிம் டேவியை பிடிக்கச்சென்ற சி.பி.ஐ

purulia-arms-drop1-270x170
புதுடெல்லி:மேற்குவங்காள மாநிலம் புரூலியாவில் ஆயுதங்கள் கொட்டப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரிட்டனை சார்ந்த கிம் டேவியை பிடிக்க டென்மார்க்கிற்கு கொண்டு சென்ற வாரண்ட் காலவதியானது என தெரியவந்துள்ளது. இது கிம் டேவியை கைதுச்செய்வதில் சி.பி.ஐக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க்கில் கைதுச் செய்யப்பட்ட கிம்டேவியை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கையின் பகுதியாக சி.பி.ஐ அதிகாரியும், வழக்கறிஞரும் டென்மார்க்கின் கோபன்ஹெகன் நகருக்கு சென்றனர். ஆனால், கிம் டேவிக்கு எதிராக கொல்கத்தா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டின் காலாவதி கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்துவிட்டது.  இதனால் சி.பி.ஐ தொடர்நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலவில்லை.
கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான விசாரணையை டென்மார்க் உயர்நீதிமன்றத்தில் ஐந்து உறுப்பினர்களை கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் நடத்துகிறது. இங்கு விசாரணை நடைபெறும்போது கிம் டேவியின் வழக்கறிஞர் சி.பி.ஐ சமர்ப்பித்த வாரண்ட் காலாவதியாகிவிட்டது என சுட்டிக்காட்டினார்.

தேர்தல் தோல்வி:தமிழக பா.ஜ.க தலைவர்களிடையே லடாய் துவங்கியது

CB11_L_K__ADVANI_GQ_546496e
சென்னை:தமிழகவாக்காளர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பாசிசத்தை தனது கொள்கையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.கவின் தமிழக தலைவர்களிடையே மோதல் துவங்கியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சுப்பிரமணிய சுவாமியின் ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. 209 தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜக மட்டும் 194 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஏற்கனவே தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டபோதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலாவது வெற்றிப்பெறுவோம் என நப்பாசையில் மிதந்தனர் பா.ஜ.கவினர். சுஷ்மா சுவராஜ், குஜராத் முஸ்லிம்களின் நரவேட்டைக்கு தலைமைத்தாங்கிய மோடி உள்ளிட்ட பா.ஜ.கவின் தேசிய தலைவர்களெல்லாம் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தனர்.
தேர்தல் முடிவுகள் குறித்து எங்களுக்கு எந்தப் பதட்டமும், கலக்கமும் இல்லை. ஆனால் அதிமுகவும், திமுகவும்தான் கலக்கத்தில் உள்ளன என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் இல.கணேசன் தம்பட்டம் அடித்திருந்தார்.ஆனால், பெருந்தோல்வியை சந்தித்த தி.மு.க அமைதியாக இருக்கும்பொழுது ஏற்கனவே தோல்வி உறுதியாகிவிட்ட பா.ஜ.க தலைவர்களிடையேதான் மோதல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜாமீன் மனு தள்ளுபடி:கனிமொழி கைது

kanimoli arrested
புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியும், கலைஞர் டி.வி இயக்குநர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டனர். டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அவர்களது ஜாமீன் மனுவை தள்ளுபடிசெய்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஸைனி இந்த உத்தரவை பிறப்பித்தார். கைது செய்யப்பட்ட கனிமொழி திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார். கைது நடவடிக்கை ஏற்கனவே எதிர்பார்த்தது என நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு கனிமொழி தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டும் கலைஞர் தொலைக்காட்சிக்கு டி.பி ரியாலிட்டி நிறுவனம் வழியாக 214 கோடி ஊழல் பணம் வந்தது நிரூபணமானதை தொடர்ந்து குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டது.

அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்?


நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் 15 தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார்.

அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.
அப்படி என்ன வாதத்தை வைத்தார் அவர்? கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி (Zheng He,) அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார் என்ற தகவல் தான் அது.

புதன், மே 18, 2011

பாலஸ்தீனை அங்கீகரிக்க - பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறைகூவல்

இது சம்பந்தமாக அவர் நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகையில் எழுதியதாவது :
 இஸ்ரேல் உருவாக்கப்பட்டு மறு கணமே அதற்கு ஐ.நா.சபை அங்கிகாரம் அளித்தது.பலஸ்தீனில் ஒரு யூத நாடு உருவாக அங்கு வாழ்பவர்களின் மனித உரிமையை பற்றி கவலைப்படாமல் அங்கிகாரம் அழித்த ஐ.நா.வாக்களித்தபடி பாலஸ்தீனை ஒரு நாடாக இது வரையிலும் அங்கீகரிக்கவில்லை.இருபது வருடமாக இஸ்ரேலுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதில் எந்த பலனும் இல்லை.இஸ்ரேல் தனது குடியிருப்புகளை அதிகரித்து கொண்டுதான் போகிறது.எஞ்சியுள்ள 22 % எங்களுடைய பூர்வீக மன்னிலாவது நாங்கள் அமைதியாக வாழ வழி செய்ய வேண்டும்.

திங்கள், மே 16, 2011

May 14 இஃபாலஸ்தீன் ஆக்கிரமிப்பு நாள்- உலக முஸ்லிம்களின் கருப்பு தினம்..

உலகம் முழுவதும் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நாளான மே14 " நக்பா தினம்" அனுசரிக்கப்பட்டது . உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டமும், அணிவகுப்பும் நடந்தது. பாலஸ்தீன எல்லையான சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலஸ்தீனின்  எல்லையில்  அவர்கள்  எதிர்த்து கோஷமிட்டனர். இவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாகிச்சூடு நடத்தியது.இதில் நான்கு பேர் உயிர் இழந்தனர் ,அதிகமானபேர் காயமுற்றனர்.   

இஸ்ரேலின் 63வது பிறந்த நாள்  முஸ்லிம்களின் 63வது  துக்க வருடம்டெல்அவீவில் இஸ்ரேல் தனது  63வது   ஆக்கிரமிப்பு வருடத்தை கோலாகலமாக கொண்டாடியது, அதில் வான வேடிக்கையும் , ராணுவ அணிவகுப்பும் ,விமான அணிவகுப்பும் நடந்தது. நாடு முழுவதும் இலவச இசை நிகழ்சிகள் நடத்தப்பட்டு ,தங்களின் முஸ்லிம் விரோத போக்கை கொண்டாடினர்.

ஞாயிறு, மே 15, 2011

“IMF சீஃப்” அமெரிக்காவில் கைது; பணிப்பெண்ணுக்கு செக்ஸ் ‌தொல்லை

நியூயார்க்: சர்வதேச நிதியக்குழு தலைவர் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டார். ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது பணிப்பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செய்தார் என்பது குற்றச்சாட்டு . இந்த கைது காரணமாக உயர்ந்த பதவியில் இருப்போருக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள சோசலிஸ்ட் பார்ட்டியின் தலைவராக இருப்பவர் டோமினிக் ஸ்ட்ராஸ்கான் (வயது 62) . இவர் இந்த கட்சியின் அதிபர் வேட்பாளரும் கூட. வருங்காலத்தில் ( 2012 ல் ) பிரான்ஸ் நாட்டின் அதிபராக கூட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இவர் நியூயார்க்கில் ஒரு பிரபல மேன்ஹாட்டன் டைம்ஸ் ஸ்கொயர் என்ற ஸ்டார் ஓட்டலில் தங்கி இருந்தார். இந்நேரத்தில் இவரது அறைக்கு வந்த பணிப்பெண்ணிடம் வலுக்கட்டாயமாக இழுத்து செக்ஸ் தொந்தரவு புரிந்துள்ளார்.

சனி, மே 14, 2011

பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள் மேலும் மேலும் வலுக்கிறது ..

ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.



பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக சர்வதேச ஆங்கில ஊடகங்களில் ஒரு புகைப்படமும் வெளியானது. அது வெளியாகும்வரை, ஒபாமா அறிவித்த பின்லேடன் மரணச் செய்தியினை அப்படியே உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப்புகைப்படம் போலியானது என்பதை வெகு எளிதில் கண்டுகொண்டது. அந்நிமிடத்திலிருந்து பின்லேடன் கொலை குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் சர்வதேச சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. அவையாவன:


* அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பின்லேடனின் உடலை அவசரம் அவசரமாக கடலில் வீசி எறியவேண்டிய காரணமென்ன?

அசிமானந்தாவின் அந்தர் பல்டி!

பஞ்சுகுலா (ஹரியானா) : தனக்கும் சம்ஜோதா ரயில் எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கடந்த வியாழக்கிழைமை அன்று நீதிமன்றத்தில் தீடீர் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு சம்ஜோதா ரயிலில் குண்டுவெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 68 அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். இதில் பெரும்பாலும் பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்தவர்கள்.

மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த அசிமானந்தா தான் சிறப்பு புலணாய்வுக்குழுவிடம் தான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக கூறவே இல்லை என்று பல்டி அடித்துள்ளார்.

தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அசிமானந்தா கூறும்போது தன்னை புலணாய்வுக்கு குழு கடுமையான முறையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை நடத்தி தன்னை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாக அவர் கூறினார்.

அசிமானந்தா தொடர்ந்த பெயில் கோரிக்கையை உயர் நிதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு காவலை வருகின்ற மே 26ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
அசிமானந்ததா இந்துத்துவ தீவிரவாத இயக்கமான அபினவ் பாரத்தின் உறுப்பினராவார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டார். இந்த குண்டு வெடிப்பில் 14 அப்பாவி முஸ்லிம்கள் பலியாயினர்.


தேசிய புலணாய்வுக்குழு அசிமானந்தாவிடம் சம்ஜோத்தா குண்டுவெடிப்பு பற்றியும் விசாரணை நடத்தியது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ஆம் தேதி அன்று அசிமானந்தா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்று அரசியலுக்கு இந்த தேர்தல் ஊக்கத்தை தந்துள்ளது- இ. அபூபக்கர்..

May 14, கேரளா தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி முக்கிய காரணியாக பங்காற்றியுள்ளது.

என்று சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தலைவர் இ அபூபக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த மாநிலங்களில், மக்கள் தேர்ந்தெடுக்க ஊழல் பாரம்பர்யமிக்க ஒரே விளைவை ஏற்படுத்தக்கூடிய இரு கூட்டணிகள் மட்டுமே இருக்கிறது.

ஆளுங்கட்சிக்கேதிராக எதிர்கட்சிக்கு மாறி மாறி வாக்களிப்பது என்பது அரசியல் பாரம்பர்யத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இல்லை.

தற்போதுள்ள அரசியல் அமைப்பில் தங்களுடைய உடனடி எதிரியாக அவர்கள் கருதும் ஆளுங்கட்சியை வீழ்த்த தகுதியான கூட்டணிக்கே வாக்களித்து அதிருப்தியை தெரிவிப்பதை தவிர இந்த குடிமக்களுக்கு வேறு வழியில்லை .

துரதிர்ஷ்டவசமாக இதுவே தமிழகத்திலும் கேரளாவிலும் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி ஏற்படுகிறது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கோ அல்லது கம்யூனிஸ்ட் கூட்டணிக்கோ மக்கள் அருதிப்பெரும்பான்மையாக வாக்களித்து வெற்றி பெற வைக்காமல் இருப்பதே மாற்று அணி உருவாக்க வழிவகுக்கிறது.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது- சங்கராச்சாரியார்.

May 14, சேலம்: சேலத்தில் உள்ள சங்கரமடத்திற்கு பக்தர்களுக்கு ஆசி(?) வழங்கவந்தார்  சங்கரராமன் கொலை புகழ் சங்கராச்சாரியார்.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது என நிருபர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியதால் வண்டவாளங்கள் எல்லாம் வெளியாகி சீரழிந்தவர் தாம் சங்கராச்சாரி.

ஆன்மீகப் போர்வையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு சேவை செய்வது வரும் சங்கராச்சாரி பாலியல் தொடர்பான அசிங்கங்களிலும் பெரும் கில்லாடியாவார்.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முன்பே சமாதானப் பேச்சு என்ற பெயரில் நாடகமாடி தலையிட்டுவருகிறார்.

சில புறம் போக்குகளை கையில் பிடித்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஏஜண்டாக மாறி முஸ்லிம்கள் பாப்ரி மஸ்ஜிதை விட்டுக் கொடுக்க தயாராகி விட்டதாக கதையளந்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி..

May 14, இராமநாதபுரம் சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலியை விட 15,849 ஓட்டுக்கள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்றார்.

மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் வேட்பாளர் ஏ.அஸ்லம் பாஷா 5,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆம்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.அஸ்லம் பாஷா பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

மனித உரிமைகளில் மிகுந்த நாட்டம் கொண்ட அஸ்லம் பாஷா அப்பகுதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருகிறார். தமிழ், உருது மற்றும் ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர். பி.ஏ(சி.எஸ்) பட்ட படிப்பு படித்தவர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் வெளியிட்ட அறிக்கையாவது:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு தமுமுக சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க இருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

செவ்வாய், மே 10, 2011

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடை!!!


புதுடெல்லி: May 10, பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடம் கொடுக்கவேண்டும்.

இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகரா என்ற அமைப்பிடம் கொடுக்க வேண்டும்.

இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம்.

என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சின் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பிற்குத் தான் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறுகையில், நிலத்தைப் பிரிக்குமாறு மனுதாரர்கள் யாருமே கோரவில்லை.

ஆனால், யாருமே கேட்காத நிவாரணத்தைக் கொடுத்துள்ளது அலகாபாத் உயர் நீதிமன்றம். எவரும் கோராத வகையில், நிலத்தைப் பிரிக்குமாறு தீர்ப்பளித்திருப்பது வினோதமாகவும் உள்ளது, விந்தையாகவும் உள்ளது.

பாபரி மஸ்ஜித் வழக்கில், இந்திய முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு..


"பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தமானது?" எனும் ஒற்றைவரிக் கேள்விக்கு, 22.12.1949 முதல் இன்றுவரை சரியான பதிலை எவரிடமிருந்தும் இந்திய முஸ்லிம்கள் பெறமுடியவில்லை!

பாபரி மஸ்ஜிதுக்குள் சிலைகள் வைக்கப்பட்ட அயோக்கிய நாளான 22.12.1949க்கு அடுத்த நாள், அயோத்தி நகரின் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் ராம் துபே பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை:

"எனக்குக் கிடைத்த தகவலின்படி, பாபரி மஸ்ஜித் வளாகச் சுவரின் பூட்டை உடைத்தோ ஏணியை உபயோகித்துச் சுவரேறிக் குதித்தோ ராம்தாஸ், ராம் சக்திதாஸ் உட்பட இன்னும் அடையாளம் தெரியாத 50-60 பேர், மஸ்ஜிதுக்குள் நுழைந்து ஸ்ரீபகவானின் சிலையை அங்கு வைத்திருக்கின்றனர். மேலும் பாபர் மஸ்ஜிதின் வெளி-உள் சுவரில் சீதை, ராம் ஆகியோரின் படங்களை வரைந்துள்ளனர். இதன் மூலம் மஸ்ஜிதின் புனிதம் பாழ்படுத்தப்பட்டுள்ளது. பணியிலிருந்த அரசு ஊழியர்களும் வேறு பலரும் இதைக் கண்ட சாட்சிகளாவர். எனவே, இந்நிகழ்வு எழுதிப் பதிக்கப்படுகிறது" (அத்தியாயம் 5, ஆவணம் 2, தேதி 23.12.1949).
இந்த முதல் தகவல் அறிக்கையின்படி, "பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தமானது?" எனும் ஒற்றைவரி கேள்விக்கு ஒரேநாளில் தீர்வு கண்டிருக்க முடியும்.

அயோக்கிய நாளுக்கு நான்கு மாதங்கள் கழித்து, உத்தரப் பிரதேச அரசின் சார்பில் ஃபைஸாபாத்தின் காவல் துறை இணை ஆணையர் ஜே.என். உக்ரா, ஃபைஸாபாத் நீதிமன்றத்துக்கு எழுத்துப் பூர்வமாகச் சமர்ப்பித்த கடிதத்தின் 12-13ஆவது வரிகள்:

திங்கள், மே 09, 2011

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் சிறார்கள் படிப்பை கை விடுகின்றனர்

இலங்கை சிறார்கள்
இலங்கை சிறார்கள்
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் சிறார்கள் பள்ளிக்கூட படிப்பை கைவிடுவதாக இலங்கை சிறார் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கையின் மகளிர் மற்றும் சிறார் நலத்துறை இணை அமைச்சரான ஹிஸ்புல்லா, இந்த பாதிப்பு வடக்கு,கிழக்கு, மலையகம் மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகம் காணப்படுவதாகவும், யுத்தம், வறுமை மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் இது ஏற்படுகிறது என்றும் கூறினார்.

இந்த நிலையை நீக்க யூனிசெப் அமைப்போடு இணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் அடாவடித்தனம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது: பாப்புலர் ஃப்ரண்ட்

08-மே-2011 உசாமா பின் லேடன் படுகொலையின் மீதுள்ள மர்மம் இன்னும் அகலவில்லை. அமெரிக்க ஊடகங்கள் மட்டுமே செய்திகளை கொடுக்கும் ஒரே வழியாக இருக்கும் வரை இந்த மர்மம் தொடரும். பலகீனமான நாடுகளின் மீது தனது மேலாதீக்கத்தை செலுத்தவும், வெட்கமேயில்லாமல் சர்வதேச சட்டங்களை மீறுவதிலும் பொதுவான நாகரீகமான நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பதிலும் முதலிடத்திலிருப்பதை மீண்டும் அமெரிக்கா நிரூபித்துள்ளது.

தாலிபான்களுக்கெதிரான தொய்வில்லாத பிரச்சாரத்தினூடே நமக்கு தெரிந்த உண்மை என்னவென்றால் 2001 ஆம் ஆண்டிலேயே உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் தாக்கப்பட்டதின் மூளையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட உசாமா பின் லேடனை சர்வதேச நீதிமன்றம் அல்லது சௌதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்க தாலிபன்கள் முன்வந்துள்ளனர் என்பதும் அதனை அமெரிக்கா மறுத்ததோடு மட்டுமில்லாமல் முதலில் ஆப்கானிஸ்தானையும் பின்னர் இராக் ஆகிய நாடுகளின் மீதும் படையெடுத்து லட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்தது என்றும் தீவிரவாத்த்திற்கெதிரான போர் என்ற ஒரு விசித்திரமான பெயரில் பல அப்பாவி பச்சிளங்குழந்தைகளை ஆதரவற்ற அனாதைகளாக்கியுள்ளது என்றும் தெரிகிறது.

ஞாயிறு, மே 08, 2011

இராமநாதபுரம் பாஸ்போர்ட் அலுவுலகமா!! சிறைக்கூடமா!!

May 8, ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க வருவோரை கொத்தடிமைகள் போல உட்கார வைத்து கொடுமைபடுத்துவது தொடர்கிறது.

மண்டல அளவில் திருச்சியில் மட்டுமே பாஸ்போர்ட் தொடர்பான பரிவர்த்தனைகள் இருந்தன. இதனால் பலரும் அலைக்கழிப்புக்கு ஆளாகினர்.

இந்நிலையில் மதுரையை மையமாக வைத்து பாஸ்போர்ட்டு தொடர்பான பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்னும் இதை எளிதாக்க மாவட்ட தலைநகரங்களில் தனிப்பிரிவு ஏற்படுத்தினர். ராமநாத புரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான பிரிவு செயல்படுகிறது.

தமிழக அளவில் பெரும்பான்மையாக வெளிநாடுகளுக்கு செல்வோர் ராமநாதபுரத்தில் தான் உள்ளனர்.

பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல், கோளாறுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தினமும் குவிந்து வருகின்றனர்.

வெள்ளி, மே 06, 2011

பாதுகாப்பு படையா? அல்லது பயங்கரவாத படையா?

May , இந்திய‌ பாதுகாப்பு ப‌டை தாண்டேவாடா மாவ‌ட்ட‌த்தின் வனப்பகுதியின் உள்ளே உள்ள‌ மூன்று கிராம‌ங்க‌ளை முற்றிலுமாக‌ தீவைத்து கொளுத்தியுள்ள‌து. இதில் மொத்த‌ம் முன்னூறு குடிசைக‌ள் எறிந்து சாம்ப‌லாயின‌.

நூற்றுக்க‌ண‌க்கான‌ ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ள் வீடிழ‌ந்தார்க‌ள். மூன்று பெண்க‌ள் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். மூன்று ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள்.

ப‌ழ‌ங்குடிக‌ளின் தானிய‌ சேமிப்புக‌ள் எல்லாம் தீக்கிறைக்கப்பட்டுள்ள‌ன‌. ப‌ழ‌ங்குடிக‌ள் சேமித்து வைத்திருந்த‌ த‌ங்க‌ ந‌கைக‌ள், ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ள் கொள்ளைய‌டிக்க‌ப் பட்டுள்ள‌‌ன‌.

கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ரின் உட‌ல் ஒரு ம‌ர‌த்தில் தொங்க‌விட‌ப்ப‌ட்டும், ம‌ற்ற‌ ஒருவ‌ரின் உட‌ல் கோடாரியால் இர‌ண்டாக‌ பிள‌க்க‌ப்ப‌ட்டும் கிட‌ந்த‌து. அவ‌ர்க‌ளின் வாழ்வாதார‌மான‌ கோழி, ஆடு, உண‌வுப் பொருட்களும் கொள்ளைய‌டிக்க‌ப்பட்டுள்ள‌‌ன‌.
இந்தியாவில் அனைத்து சிறுவர், சிறுமிகளும் பள்ளிச்சென்று பயில  வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கம் சார்பாக நாடு முழுவதும் ‘ஸ்கூல் சலோ’ (பள்ளி செல்வோம்) என்ற நிகழ்ச்சி மே மாதம் முதல் தேதி துவங்கியது.

மே, ஜூன் மாதங்களில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிக்கூட அட்மிஷன் நடைபெறும் வேளையாகும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளிலுள்ள குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கான களப்பணிகளில் ஈடுபடுவர்.

’ஸ்கூல் சலோ’ பிரச்சார நிகழ்ச்சியில் சுவரொட்டி மூலம் பிரச்சாரம், வீடுகளிலுள்ள மாணவர்கள் குறித்த ஆய்வு, மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க உதவுதல், படிப்பை பாதியில் கைவிட்டவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்தல், பள்ளிக்கூடம் செல்லத் தேவையான பொருட்களை வழங்குதல்.

ஞாயிறு, மே 01, 2011

துளசிராம் என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐ ஏற்றுக்கொண்டது.

அஹ்மதாபாத்: துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ ஏற்றுக்கொண்டது.

சி.பி.ஐயின் மும்பை அலுவலகம் இது தொடர்பான புதிய வழக்கை பதிவுச்செய்துள்ளது. பிரஜாபதி போலி என்கவுண்டர் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்துள்ளதாக சி.பி.ஐ, ஐ.ஜி கந்தசாமி கூறினார்.

சொஹ்ரபுத்தீன் ஷேக் அவரது மனைவி கவ்ஸர்பீ ஆகியோரின் கொலை வழக்குகளில் முக்கிய சாட்சியாக இருந்த பிரஜாபதியின் போலி என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இம்மாதம் எட்டாம் தேதி உத்தரவிட்டது.

பிரஜாபதியைன் தயார் நர்மதாபாய் தொடுத்த வழக்கை தொடர்ந்து இந்த உத்தரவை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். இரட்டைப் படுகொலைக்கு சாட்சியாக மாறியதால் தனது மகனை குஜராத் போலீஸ் சுட்டுக்கொன்றதாக நர்மதாபாய் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

'ஸ்பெக்டரம்' - பொதுக் கணக்குக் குழு அறிக்கை சமர்ப்பிக்கபட்டது

இந்திய மக்களவை
இந்திய மக்களவை
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்த பொதுக் கணக்குக்குழுவின் அறிக்கை சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி அந்த அறிக்கையை மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.
பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக முரளி மனோகர் ஜோஷியின் பணிக்காலம் சனிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.
அந்தக் குழு தயாரித்த வரைவு அறிக்கையில், பிரதமர் அலுவலகம் மீதும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டுக்களைக் கூறியிருந்தது. கசியவிடப்பட்ட அறிக்கையின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாயின.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய பிரதிநிதிகள் மாநாடு,,

May 01, கோழிக்கோடு: கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் இயக்கத்தின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

ஹைதராபாத் நாரோ ஆடிட்டோரியத்தில் நடைபெறும் மாநாட்டில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வுச் செய்யப்படுவர்.

கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்னால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து டெல்லியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பு உருவானது.

நாட்டின் கல்வி வளாகங்களில் நன்மையின் பிரச்சாரகர்களாக மாற முன்மாதிரிகளை மாணவர்கள் தேடுகிறார்கள்.

எண்டோ ஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தைதடைச் செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ தர்ணா..

April , புதுடெல்லி: எண்டோ ஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடைச் செய்யக்கோரி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் டெல்லி பிரிவு சார்பாக ஜந்தமந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கேரளாவிலும்,கர்நாடகா மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை செய்வதற்கு பதிலாக தடை எதிர்க்கும் நிலைப்பாட்டை அரசு மேற்கொள்வதாக போராட்டத்தில் கலந்து கொண்டோர் குற்றஞ்சாட்டினர்.

எண்டோஸல்ஃபான் குறித்து மேலும் ஆய்வறிக்கைகளை காத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக மத்திய அரசு தடைச்செய்ய வேண்டுமென அவர்கள் கோரினர். 74 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் என்ற கொடூரமான பூச்சிக்கொல்லி மருந்தினால் இந்தியாவில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் அதனை தடைச்செய்ய மத்திய அரசு தயங்குகிறது.