திங்கள், மே 09, 2011

அமெரிக்காவின் அடாவடித்தனம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது: பாப்புலர் ஃப்ரண்ட்

08-மே-2011 உசாமா பின் லேடன் படுகொலையின் மீதுள்ள மர்மம் இன்னும் அகலவில்லை. அமெரிக்க ஊடகங்கள் மட்டுமே செய்திகளை கொடுக்கும் ஒரே வழியாக இருக்கும் வரை இந்த மர்மம் தொடரும். பலகீனமான நாடுகளின் மீது தனது மேலாதீக்கத்தை செலுத்தவும், வெட்கமேயில்லாமல் சர்வதேச சட்டங்களை மீறுவதிலும் பொதுவான நாகரீகமான நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பதிலும் முதலிடத்திலிருப்பதை மீண்டும் அமெரிக்கா நிரூபித்துள்ளது.

தாலிபான்களுக்கெதிரான தொய்வில்லாத பிரச்சாரத்தினூடே நமக்கு தெரிந்த உண்மை என்னவென்றால் 2001 ஆம் ஆண்டிலேயே உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் தாக்கப்பட்டதின் மூளையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட உசாமா பின் லேடனை சர்வதேச நீதிமன்றம் அல்லது சௌதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்க தாலிபன்கள் முன்வந்துள்ளனர் என்பதும் அதனை அமெரிக்கா மறுத்ததோடு மட்டுமில்லாமல் முதலில் ஆப்கானிஸ்தானையும் பின்னர் இராக் ஆகிய நாடுகளின் மீதும் படையெடுத்து லட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்தது என்றும் தீவிரவாத்த்திற்கெதிரான போர் என்ற ஒரு விசித்திரமான பெயரில் பல அப்பாவி பச்சிளங்குழந்தைகளை ஆதரவற்ற அனாதைகளாக்கியுள்ளது என்றும் தெரிகிறது.

அமெரிக்கா பிற நாடுகளின் இறையாண்மையை துச்சமென மதித்து வருகிறது. வெளிப்படையாகவும் இரகசியமாகவும் சட்டத்திற்கு புறம்பான பல சிறைச்சாலைகளை (கான்சன்டிரேசன் கேம்ப்) சர்வதேச விதிமுறைகளயும், சிவில் மற்றும் மனிதஉரிமைகளை மீறி பல இடங்களில்  நடத்திவருகிறது. குவான்டனாமோவில் மட்டும் சுமார் 200 பேர் விசாரணையில்லாமல் பல வருடங்களாக மிருகங்கள் அடைத்து வைக்கப்படும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிஐஏவின் நட்பு நாடுகளில் இரகசிய சிறைக்கொட்டடிகளை (டிட்டேன்சன் கேம்ப்) நிர்மாணித்து பல கொடூரமான சித்திரவதைகளை செய்துவருவதும் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இறந்த உடலை கடலில் எறிவதென்பது நாகரீகமானதல்ல மட்டுமல்லாது அது ஒரு மத ஒழுங்கு வரம்புகளை மீறிய செயலாகும். அனைத்து மதங்களையும் மதித்து வருவதாக பராக் ஒபாமா கூறிக்கொண்டாலும் தற்போதைய செயலின் மூலம் முஸ்லிம்களை சீண்டுபவர்களின் கைக்கூலியாகவே செயல்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது.
எதுவாயினும் ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் ஆக்கிரமிப்பை செய்ய இவர்களுக்கு இருந்த கடைசி காரணமான உசாமாவை தேடுகிறோம் என்று கூறிக்கொண்டு இருக்க வழியில்லை. ஆதீக்க சக்திகளின் ஆக்கிரமிப்பு படையெடுப்பிற்கு எதிரான மக்கள் போராட்டங்களை, ஒரு சதாம் ஹுஸைன் அல்லது ஒரு உசாமாவை கொல்வதன் மூலம் முடிவுக்கு கொண்டுவரலாம் என்று இந்த நவீன காலனியாதீக்க சக்திகள் நினைத்தால் அது முட்டாள்தனமானது.
வரலாற்றை நாம் உற்று நோக்கினால் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக தங்கள் வீட்டுக்கு ஓடி செல்லும் வரை, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் எதிர்ப்பு ஓயாது என்று தெரியவருகிறது.
தீவிரவாத்தின் அனைத்து முகங்களையும் கண்டிப்பதோடு, அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் வல்லரசு நாடுகளின் மேலாதீக்கம் தோற்கடிக்கப்பட்டு, இதன் மூலம் அனைத்து நாடுகளின் இறையாண்மையும் சுதந்திரமும் சமமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதனைத் தொடர்ந்து உலகம் அமைதியான சகாப்த்ததை நோக்கி செல்லவேண்டும் என்பதே மனிதகுலத்தின் சார்பாக எமது ஆழ்ந்த நம்பிக்கை என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம் அப்துல் ரஹிமான் பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக