ஞாயிறு, மே 15, 2011

“IMF சீஃப்” அமெரிக்காவில் கைது; பணிப்பெண்ணுக்கு செக்ஸ் ‌தொல்லை

நியூயார்க்: சர்வதேச நிதியக்குழு தலைவர் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டார். ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது பணிப்பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செய்தார் என்பது குற்றச்சாட்டு . இந்த கைது காரணமாக உயர்ந்த பதவியில் இருப்போருக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள சோசலிஸ்ட் பார்ட்டியின் தலைவராக இருப்பவர் டோமினிக் ஸ்ட்ராஸ்கான் (வயது 62) . இவர் இந்த கட்சியின் அதிபர் வேட்பாளரும் கூட. வருங்காலத்தில் ( 2012 ல் ) பிரான்ஸ் நாட்டின் அதிபராக கூட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இவர் நியூயார்க்கில் ஒரு பிரபல மேன்ஹாட்டன் டைம்ஸ் ஸ்கொயர் என்ற ஸ்டார் ஓட்டலில் தங்கி இருந்தார். இந்நேரத்தில் இவரது அறைக்கு வந்த பணிப்பெண்ணிடம் வலுக்கட்டாயமாக இழுத்து செக்ஸ் தொந்தரவு புரிந்துள்ளார்.



இது தொடர்பாக புகார் செய்யப்பட்டதும் , இவர் தப்பித்து செல்ல ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாரீஸ் புறப்பட தயாரானார். இதனையடுத்து சுற்றி வளைத்த போலீசார் இவரை வெளியே இழுத்து கைது செய்தனர். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக