திங்கள், ஏப்ரல் 30, 2012

தம்புள்ளை மஸ்ஜிதை அகற்ற முடியாது: அமைச்சர் ரவூஃப் ஹக்கீம்

Dambulla Mosque Cannot Be Relocated – SLMC rauf hakeemகொழும்பு:தம்புள்ளை மஸ்ஜிதை அகற்ற முடியாது என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவரும், இலங்கை அரசு அமைச்சருமான ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.இலங்கை தம்புள்ளை பகுதியில் 60 ஆண்டுகளாக நிலைப்பெற்றிருக்கும் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்திய வெறிப்பிடித்த புத்த பிக்குகள் அதனை இடிக்க கோரி

டெரரிஸ்டுகள் அல்ல மாவோயிஸ்டுகள் !

 சென்னை: பயங்கரவாதம் என்பது தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமானதொன்றாகும். காரணம் பயங்கரவாத தாக்குதல்களினால் எண்ணெற்ற உயிர் சேதங்கள், பொருட்சேதங்களும் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது என கூறலாம். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு சங்கப்பரிவார ஃபாசிஸ்டு

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக நினைக்காதீங்க...: பிரணாப்

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடுவேன் என்று ஊகிக்க வேண்டாமென நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரி அல்லது பிரணாப் முகர்ஜி இருவரும் போட்டியிடக் கூடும் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. பிரணாப் போட்டியிட்டால் அவரை திமுக ஆதரிக்கும் என்று சென்னை வந்திருந்த ஏ.கே. அந்தோணியிடம் கருணாநிதி கூறியதாகவு சொல்லப்பட்டது.

இலங்கை மஸ்ஜித் இடிப்பு: கருணாநிதி கண்டனம்!

சென்னை:இலங்கையில் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது:
இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மஸ்ஜித் ஒன்றினை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்து நாசம் செய்திருக்கின்றனர்.

கூடங்குளம் போராட்டத்தை அடக்கி ஒடுக்க கூடாது: ஆம்னஸ்டி!

சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் நடத்தும் அமைதியான போராட்டத்தை அடக்கி ஒடுக்க கூடாது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளது. சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அமைதியான முறையில் ஒன்று திரளவும், சொந்த உணர்வுகளை வெளிப்படுத்தவும் மக்களுக்கு உரிமை உள்ளது.

அப்துல் நாஸர் மஃதனி:இரு கண்களிலும் பார்வை பறிபோனது- அவசர அறுவை சிகிட்சை!

திருவனந்தபுரம்:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி தனது கண்களின் பார்வை சக்தியை இழந்துள்ளார். வலதுகண்ணில் முற்றிலும் பார்வை பறிபோய் உள்ளது. இடது கண் பாதி அளவில் பார்க்கும் சக்தியை இழந்துள்ளது.

கேரளா:காவியாகும் கம்யூனிசத்தின் செங்கொடி!

கேரள மாநிலம் தலச்சேரியில் என்.டி.எஃப் அமைப்பின் உறுப்பினர் முஹம்மது ஃபஸல் கடந்த 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கம்யூனிச வெறியர்களால் படுகொலைச் செய்யப்பட்டார். தற்பொழுது இவ்வழக்கை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்பிருப்பது சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

பின்லேடன் கொலையை தேர்தலுக்கு பயன்படுத்தும் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 6-ந்தேதி நடக்கிறது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளராக குடியரசு கட்சியைச் சேர்ந்த மிட்ரோம்னி களம் இறங்குகிறார். இவர் அதிபர் ஒபாமாவுக்கு கடும் போட்டியாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறுமி நரபலிக்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்: கைதான தி.மு.க. பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டியை சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கிளி. இந்த தம்பதிக்கு ராஜலட்சுமி (வயது5) என்ற மகள் இருந்தாள். அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.  கடந்த 1.1.2011 அன்று வீட்டு அருகில் விளையாடி கொண்டு இருந்த ராஜலட்சுமி திடீர் என மாயமானாள்.

இந்து முன்னணி தீவிரவாத அமைப்பு பயிற்சி முகாம்

இந்து முன்னணி நடத்தும் இந்த வருடத்திற்கான தீவிரவாத   பயிற்சி முகாம் மே 7 முதல் 13 வரை வேலூரில் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இது சம்பந்தமாக இந்து முன்னணி தீவிரவாத அமைப்பு  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மதமாற்றத்தைத் தடுத்திட பண்பாட்டைப் பாதுகாத்திட பயங்கரவாதத்தை முறியடித்திட, இந்து விரோதிகளை வேரறுத்திட, கிராமங்கள் தோறும் இந்து முன்னணி பேரியக்கத்தின் கிளைகளைத் துவக்கி இந்துக்களை ஒன்றுபடுத்திட ,

மதுரை ஆதீனத்தின் அதிரடி முடிவு... இந்து அமைப்புகள் அவசரமாக கூடுகின்றன!

மதுரை: நித்தியானந்தாவை, 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்தியாவின் மூத்த ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக தற்போதைய ஆதீனம் நியமித்துள்ளது குறித்து பல்வேறு இந்துக் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்துப் பேச அவசரக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாவோயிஸ்டு தீவிரவாத அமைப்புகளுடன் கரம் கோர்க்கும் இந்திய மாவோயிஸ்டு தீவிரவாதிகள்

சென்னை: ஒன்றரை மாதங்களாக மாநில அரசுகளை பதற வைத்துக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் அமைப்பானது துருக்கி மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு மாவோயிஸ அமைப்புகளுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பதாகவும் தெற்காசிய மாவோயிஸ்டு கட்சிகளின் கூட்டமைப்பில் இணைந்திருப்பதாகவும் மத்திய அரசின் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராம்தேவ்-ஹஸாரே உண்ணாவிரதம்: ஹிந்துத்துவா தலைவர்களும் பங்கேற்பர்!

புதுடெல்லி:அன்னா ஹஸாரேவுடன் இணைந்து வருகிற ஜூன் மாதம் ராம்தேவ் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பாப்ரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளில் ஒருவரான ஹிந்து தீவிரவாத பெண் சன்னியாசி சாத்வி ரிதம்பரா உள்ளிட்ட ஹிந்துத்துவா தலைவர்கள் பங்கேற்பார்கள் என செய்தி வெளியாகி உள்ளது. இதனை ராம்தேவ் மறுக்கவில்லை.

பங்காருவை கைவிட்டு தலைதப்ப முயலும் பா.ஜ.க!

புதுடெல்லி:லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி 4 ஆண்டுகள் தண்டனை பெற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் பங்காரு லட்சுமணனை பா.ஜ.க கைவிட்டது. சட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் இத்தண்டனை என்று பா.ஜ.க சமாளிக்கிறது. கட்சிக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று கட்சியின் முக்கிய செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

பங்காரு திகார் சிறையில் அடைப்பு!

டெல்லி:2001-ம் ஆண்டு போலி ஆயுத பேர ஒப்பந்தக்காரர்களிடம் ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் பங்காரு லட்சுமணன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவிலில் பசு மாமிசம்: நான்கு ஹிந்துவாஹினி பயங்கரவாதிகள் கைது!

புதுடெல்லி:ஹைதராபாத்தில் வகுப்புவாத கலவரத்தை உருவாக்க குர்மாகுடவில் உள்ள ஹனுமான் கோவிலில் பசு மாமிசத்தை வீசிய வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான ஹிந்துவாஹினியின் நான்கு உறுப்பினர்களை போலீஸ் கைது செய்துள்ளது. நாகராஜ், ரமேஷ், தயானந்த் சிங், கிரண் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் "பெர்சி' பேரணி போலீசார் தடியடி

கோலாலம்பூர்:தேர்தல் சீர்திருத்தம் கோரி, மலேசியாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட பேரணியில், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி அடித்தனர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், தேர்தல் சீர்திருத்தம் கோரி, எதிர்க்கட்சிகள் ஆதரவுடன், "பெர்சி' (மலேய மொழியில், "சுத்தமான' என்று பொருள்) என்ற தன்னார்வ அமைப்பின் தொண்டர்கள், சுதந்திர சதுக்கத்தில் பேரணி நடத்த முடிவு செய்திருந்தனர்.