கடந்த மார்ச்-14 ம் தேதி இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகள் 2 பேரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.
முதலில் நல்லெண்ண அடிப்படையில் கொலாஞ்செலோவை விடுவித்த மாவோயிஸ்ட்டுகள் பொசஸ்கோவை விடுவிக்க வேண்டும் என்றால் அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்கள் கூறியவாரே சிறையில் உள்ள 5 பேரை விடுவிக்க ஒரிசா அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் 12 நிபந்தனைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அரசு சம்மதித்துள்ளது. இதையடுத்து தான் பவோலோ விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே மற்றொரு மாவோயிஸ்டுகள் குழுக்களால் கடத்தி செல்லப்பட்ட ஆளும் பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏ.வை விடுவிக்க புதிய நிபந்தனையை அவர்கள் விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக