செவ்வாய், ஜூன் 28, 2011

சிறுபான்மை நலத் துறை அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ., முகமது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: தமிழக அமைச்சரவையில் ஆறு அமைச்சர்களது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. மறைந்த மரியம் பிச்சைக்கு பதிலாக, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, ராணிப்பேட்டை எம்.எல்.ஏ., முகமது ஜான் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, புதிய அமைச்சரவை கடந்த மே 16ம் தேதி பதவியேற்றது. முதல்வர் ஜெயலலிதா உட்பட, 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அமைச்சர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தன. துறை வாரியாக ஆய்வுக் கூட்டங்களையும் முதல்வர் நடத்த உள்ளார். இதுதவிர, பட்ஜெட் தயாரிப்பு பணியும் துவங்கியுள்ளது.இந்நிலையில், அமைச்சராக பதவியேற்ற ஒரு வாரத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை, சாலை விபத்தில் மரணமடைந்தார். இவர், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனவே, அமைச்சரவையில் மற்றொரு இஸ்லாமியருக்கு இடம் கிடைக்கும் என பேசப்பட்டது. இதன்படியே, புதிய அமைச்சராக, ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., முகமது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரைப்படி, முகமது ஜானை அமைச்சராக நியமித்து, கவர்னர் பர்னாலா நேற்று உத்தரவிட்டார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி, வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு ராஜ்பவனில் நடக்க உள்ளது.

சனி, ஜூன் 25, 2011

லிபியாவில் நேட்டோ படை தாக்குதலில் மேலும் 15 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்..

நேட்டோவின் போர் விமானங்கள், மீண்டும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் குண்டுகளை வீசியுள்ளது உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது,
ப்ரேகா (Brega ) நகரின் ஒரு பேக்கரி மற்றும் ஒரு உணவகத்தின் மீது வீசப்பட்ட குண்டுகள், குறைந்தபட்சம் 15 பேர்களின் உயிரை பறித்தது மட்டுமல்லாமல், 20 க்கும் மேற்பட்டோரை படுகாயப்படுத்தியுள்ளது,

இதற்குமுன் சமீபத்தில்தான் திரிப்பொலி நகரில் நேட்டோ படை குண்டு வீசி பொதுமக்களை கொன்றது நினைவிருக்கலாம், தொழில்நுட்ப கோளாறினால் அந்த சம்பவம் நடந்தது என்று நேட்டோ படை மன்னிப்பு கோரியது,

வெள்ளி, ஜூன் 24, 2011

சம்ஜோதா:குண்டுவெடிப்பில் பங்கு நிரூபிக்கப்பட்ட பிறகும் குற்றவாளியாக சேர்க்கப்படாத ஆர்.எஸ்.எஸ் தலைவர்

indresh kumar, புதுடெல்லி:இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்த ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் சதித்திட்டங்களில் பங்கேற்று நிதியுதவி அளித்ததாக விசாரணையில் நிரூபணமான பிறகும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் இந்திரேஷ்குமார் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை..
சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட ஐந்து நபர்களை குற்றவாளிகளாக சேர்த்து தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ) நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரின் பெயர் விமர்சிக்கப்படுகிறது. பயங்கரவாத செயல்களை குறித்து சதித்திட்டம் தீட்ட சபரிடாமில் நடத்திய ரகசிய கூட்டத்தில் அஸிமானந்தா மற்றும் சுனில் ஜோஷியுடன் இந்திரேஷ் குமாரும் பங்கேற்றுள்ளார்.
சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை அஸிமானந்தா-சுனில்ஜோஷி கும்பலுக்கு இந்திரேஷ் குமார் அளித்தார் என்பதும் குற்றப்பத்திரிகையில் கூறப்படுகிறது. ஆனால் இவ்வழக்கில் அவர் குற்றவாளி இல்லை.

செவ்வாய், ஜூன் 21, 2011

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,

Aseemanand_Othe8599, பஞ்ச்குலா(ஹரியானா): தீவிர ஹிந்துத்துவா பயங்கரவாதியான சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட ஐந்துபேர் மீது சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளது.
மூளையாக செயல்பட்ட அஸிமானந்தா பயங்கரவாத செயல்களை புரிய பிறரை தூண்டியதாக செசன்ஸ் நீதிபதி காஞ்சன் மஹி முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் அபினவ்பாரத் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பிரக்யாசிங் தாக்கூரின் பங்கினைக்குறித்து விசாரிக்கவேண்டியுள்ளது எனவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ வழக்கறிஞர் அஹ்மத்கான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.ஹரியானா மாநிலம் பானிப்பட் அருகில் கடந்த 2007-ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ஏராளமான பாகிஸ்தான் குடிமக்கள் உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர்.

லிபியாவில் சிவிலியன்கள் மீதான தாக்குதல் ஒரு தொழில்நுட்ப கோளாறு- நேட்டோ

Libya-says-NATO-strike-kills-nine-civilians-300x199திரிபோலி:லிபியாவின் தலைநகரான திரிபோலியில் மக்கள் வசிக்கும் பகுதியில் நடந்த நேட்டோவின் அராஜக தாக்குதலில் குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நேட்டோ குற்றத்தை ஒப்புக்கொண்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த தாக்குதல் தொழில்நுட்ப தகராறு மூலமாக தவறு ஏற்பட்டதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
சிவிலியன்களுக்கு எதிராக நேட்டோ தாக்குதல் நடத்துவதாக லிபியா அரசு குற்றம் சாட்டியபொழுதும் நேட்டோ அங்கீகரிக்கவில்லை.சம்பவத்தைக்குறித்து விசாரணை நடத்த பின்னர் தீர்மானிக்கப்பட்டது.
நிரபராதிகளான சிவிலியன்களின் உயிர்கள் இழப்பதற்கு காரணமானதில் வருந்துவதாகவும், சொந்த குடிமக்களுக்கு எதிராக லிபியா அரசு நடத்தும் தாக்குதல்களுக்கு எதிரான போரில் நேட்டோ எச்சரிக்கையுடன் செயல்படுவதாகவும் லெஃப்டினண்ட் ஜெனரல் சார்ல்ஸ் புச்சார்டு தெரிவித்துள்ளார்.இதற்கிடையே நேற்று திரிபோலியில் மீண்டும் நேட்டோ நடத்திய தாக்குதலில் 15 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், ஜூன் 20, 2011

மதம் மாறிய காரணத்தால் அன்னைக்கு குழந்தையை பாதுகாக்கும் உரிமையை பறித்துவிடமுடியாது-டெல்லி உயர்நீதிமன்றம்

Delhi-High-Court,புதுடெல்லி:மதம் மாறிவிட்டார் என்பதால் குழந்தையை பாதுகாக்கும் உரிமையை தாயிடமிருந்து பறிக்க இயலாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியை சார்ந்த ராம் குமார் மவ்ரியா என்பவரின் மகனின் மனைவி சாவித்ரி தேவி என்பவர் அவருடைய மரணத்திற்கு பிறகு இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்  கொண்டு மொய்ன் ஹக் என்பவரை திருமணம் புரிந்தார்.
முதல் திருமணத்தின் போது பிறந்த பதினான்கு வயது மகன் இஸ்லாத்தை தழுவிய சாவித்ரியுடன் வசித்து வருகிறார். இவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி அவருடைய பாட்டனார் மவ்ரியா நீதிமன்றத்தை அணுகினார்.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கவுதம் மனான் தனது தீர்ப்பில் கூறியதாவது:தாயின் மதம் அல்ல முக்கியம். அவர் தனது குழந்தைக்கு கல்வியும், பாதுகாப்பும் அளிக்கின்றாரா என்பதைத் தான் பரிசோதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

+2 க்கு பிறகு உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கும் வட்டியில்லா கடன் உதவித்தொகை

application, புதுடெல்லி:இரண்டுமாத காலமாக இந்தியா முழுவதும் நடைபெற்ற தேசிய அளவிலான ‘பள்ளி செல்வோம் (ஸ்கூல் சலோ)’ பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டும் வேளையில் +2க்கு பிறகு உயர்கல்வி கற்க விரும்பும் ஏழையான அதே வேளையில் திறமையான மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் உதவித் தொகை வழங்கப்படும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
2011-12 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வியை கற்க விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி உதவித் தொகையானது வட்டியில்லா கடனாகும். உதவித் தொகையை பெறும் பயனீட்டாளர்கள் படிப்பை முடித்த பிறகு வேலையில் சேர்ந்தால் அல்லது படிப்பை முடித்து விட்டு இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு இத்தொகையை எளிதான தவணை முறைகளில் திருப்பி செலுத்த வேண்டும்.
இலவசமாக வழங்காமல் கல்வி உதவித் தொகையை கடனாக வழங்குவதற்கு காரணம் தேவையுடைய ஏராளமான மாணவர்கள் இதன் மூலம் சுழற்சி முறையில் பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கமாகும்.
+2க்கு பிறகு இரண்டு வருடங்களுக்கு குறையாத டிகிரி, டிப்ளமோ படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வட்டியில்லா கடன் உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள் அல்லது அரசு அனுமதி பெறாத கல்வி நிலையங்களில் பயில்வோர் இந்த கடன் உதவித்தொகையை கேட்டு விண்ணப்பிக்க இயலாது.
இந்த ஆண்டு டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மேற்குவங்காளம், மணிப்பூர், ஆந்திரபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தை சார்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவ-மாணவிகளுக்கு இந்த வட்டியில்லா கடன் உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்ப படிவத்தை popularfrontindia.org என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் (Download) செய்யலாம். ஜூலை மாதம் 20-ஆம் தேதி விண்ணப்பத்தை பூர்த்திச் செய்து அளிப்பதற்கான கடைசி தினமாகும். இத்திட்டத்திற்கு 24 லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்துள்ளதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

சனி, ஜூன் 18, 2011

சமச்சீர் கல்வி - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும் !

மிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் தொடரவேண்டும். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களில் பல பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதால், அவற்றை ஆராய தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும்.  அந்த நிபுணர் குழு 3 வாரத்திற்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி பாடத்திட்டத்தின் மீது இறுதித் தீர்ப்பு சொல்லவேண்டும்.
சுருக்கமாக இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஒரு முடிவை மேற்கொள்ளும்போது அது மக்கள் நலனுக்கானதாக இருக்கும் என்றே கருதவேண்டும். அவ்வாறின்றி தமிழக அரசின் மசோதாவுக்கு நோக்கம் கற்பித்து முடக்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. எனவே சமச்சீர் கல்வியை மேம்படுத்த எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்கள் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள்.
இதனை எதிர்த்து வாதாடிய பிரசாந்த் பூஷண் (மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில்), கிருஷ்ணமணி, ஹரீஷ் ஆகிய வழக்குரைஞர்கள் “மொத்தப் பாடங்களையும் முடக்கும் அளவுக்கு என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. NCERT மற்றும் NCFP ஆகிய அமைப்புகள் 2005 இல் கொடுத்த வழிகாட்டுதல் அடிப்படையில் துறைசார் வல்லுநர்கள், ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, கருத்தறியப்பட்டு இறுதியாக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தை முற்றிலுமாக முடக்கும் அளவுக்கு இதில் என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. 214 கோடி ரூபாய் வரிப்பணத்தை செலவு செய்து நூல்கள் தயாராக உள்ளன. இதனை நிறுத்திவிட்டு 2002 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தை அச்சிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது பிற்போக்கானது. உள்நோக்கம் கொண்டது. மேலும் சமச்சீர் கல்வி குறித்த தனது 10.09.2010 தேதியிட்ட தீர்ப்பில், “அரசுகள் மாறும்போது, அவர்கள் தமது விருப்பங்களுக்கு ஏற்ப பாடத்திட்டத்தையும் பாடநூலையும் மாற்றுவதையும், பள்ளிகளையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் பந்தாடுவதையும் இந்த நீதிமன்றம் அனுமதிக்க முடியாது” என்று கூறியிருக்கிறது. ஆனால் தற்போது தமிழக அரசு அதைத்தான் செய்கிறது” என்று வாதிட்டனர்.

வெள்ளி, ஜூன் 17, 2011

சென்னையை சேர்ந்த 62 வயது மூதாட்டிக்கு மலேசியாவில் மரண தண்டனை...

சென்னையை அடுத்த பட்டூர் மாங்காடு பஜார் தெருவைச் சேர்ந்தவர் பசிலாபீ (வயது 62). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். குடும்பம் வறுமையில் வாடியதால், வெளிநாடு சென்று வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற பசிலாபீ முடிவு செய்தார்.

இதற்காக திருவல்லிக்கேணியை சேர்ந்த டிராவல் ஏஜெண்டு ஒருவரை அணுகினார். கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி பசிலாபீ மலேசியா புறப்பட்டார். அவரை வழியனுப்ப விமான நிலையம் வந்த டிராவல் ஏஜெண்டு உரிமையாளர், பசிலாபீயிடம் ஒரு சூட்கேசை கொடுத்தார்.

ஒரு நபரின் பெயரை குறிப்பிட்டு மலேசியாவில் போய் இறங்கியதும் சூட்கேசை அந்த நபரிடம் கொடுக்குமாறு கூறினார். பசிலாபீ மலேசியா போய் இறங்கியதும் கோலாலம்பூர் விமான நிலையத்தில அவரது உடமைகளையும், சூட்கேசையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது அந்த சூட்கேசில் 3 கிலோ எடை கொண்ட “கேட்டமின்” என்ற கொடிய போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை மலேசிய போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தியதாக அவர் மீது அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பசீலாபீக்கு மரண தண்டனை (தூக்கு) விதிக்கப்பட்டது. இந்த தகவல் அங்குள்ள டிராவல்ஸ் ஏஜெண்டு மூலமாக சென்னையில் உள்ள பசிலாபீ குடும்பத்துக்கு தாமதமாக தெரிவிக்கப்பட்டது.

வியாழன், ஜூன் 16, 2011

மலேசிய அரசாங்க இணையத் தளங்களை அடையாளம் தெரியாதவர்கள் முடக்கியுள்ளனர்...

16-6-11, பதிப்புரிமைச் சட்டங்களை (copy right) மீறியதற்காக 10 இணையத் தளங்கள் தடுக்கப்படுவதாக எம்சிஎம்சி என்ற மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து அரசாங்க இணையத் தளங்களை இன்று தொடக்கம் தாக்கப் போவதாக அடையாளம் தெரியாதவர்கள் எச்சரித்தனர்.

நேற்று பின்னேரத்திலிருந்து 10 அரசாங்க அமைப்புக்களின் இணையத் தளங்களைத் திறக்க முடியவில்லை. அதற்கு அடையாளம் தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதல் காரணம் எனக் கருதப்படுகிறது.

கோப்புக்களைப் பகிர்ந்து கொள்ளும் இணையத் தளங்களை மூடுவது என் அரசாங்கம் முடிவு செய்ததற்கு பதிலடியாக அடையாளம் தெரியாதவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.

செவ்வாய், ஜூன் 14, 2011

போர்ப்ஸ்கஞ்ச்:குற்றவாளிகளை தண்டிக்க முதல்வருக்கு சிவில் சமூகம் கோரிக்கை

original_araria-biharபுதுடெல்லி:பீகார் மாநிலம் போர்ப்ஸ்கஞ்ச் மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் கிராமங்கள் இடையேயான சாலையை ஆக்கிரமிக்க நடந்த முயற்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது ஈவு இரக்கமின்றி 6 மாத குழந்தை உள்பட 6 பேரை சுட்டுக் கொன்றதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை உடனடியாக தண்டிக்குமாறு சிவில் உரிமை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (திங்கள் கிழமை) பீகார் பவனுக்கு முன்னால் போர்ப்ஸ் கஞ்ச் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு நீதிக்கிடைக்க கோரும் குழு (Committee for Justice to Forbesganj Police Firing Victims (CJFPFV)) என்ற பேனரில் சிவில் சமூக உறுப்பினர்கள் அப்பட்டமான மனித உரிமை மீறலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் சிவில் சமூகத்தை சார்ந்த மெஹ்தாப் ஆலம், மனீஷா சேதி ஆகியோர் பங்கேற்றனர்.

3 ஆண்டாக காத்திருப்போருக்கு ஹஜ் பயணம் செல்ல அனுமதி!

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update புதுடெல்லி: ‘எழுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹஜ் பயணம் செல்லும் போது, அவர்களுடன் துணைக்கு ஒருவர் செல்ல இந்த ஆண்டு முதல் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 3 ஆண்டுகளாக விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு தானாகவே இடம் கிடைக்கும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று கூறினார். ‘ஹஜ் பயணம்’ தொடர்பான மாநாட்டை டெல்லியில் நேற்று தொடங்கி வைத்து கிருஷ்ணா பேசியதாவது:

ஹஜ் புனித பயணத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, புனித பயணம் செல்ல விரும்பும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு துணையாக இன்னொருவர் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த திட்டம் இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது.

மேலும், புனித பயணம் செல்ல தொடர்ந்து 3 ஆண்டுகள் விண்ணப்பித்து சீட் கிடைக்காதவர்களுக்கு இந்த ஆண்டு தானாகவே இடம் கிடைக்கும். அவர்கள் குலுக்கலில் பங்கேற்க தேவையில்லை. கடந்த மார்ச் 26ம் தேதி சவுதி பயணம் மேற்கொண்டபோது, ‘இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள கூடுதல் யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று அந்நாட்டு அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன்.

டெல்லி:ஆயுத வியாபாரி கமலா கைது-ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு தொடர்பா?

kamala, புதுடெல்லி:இந்திய தலைநகர் டெல்லியில் ஆயுத வியாபாரியான கமலா என்ற பெண்மணியும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டெல்லி மற்றும் என்.சி.ஆரில் நவீன ஆயுதங்களை கடத்தி வியாபாரம் செய்யும் கும்பல் என க்ரைம் டி.சி.பி அசோக் சந்த் தெரிவித்துள்ளார்.
கமலா என்று அழைக்கப்படும் மமதாவும், அவரது உதவியாளர் நவீனும் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். கணவனை இழந்த கமலா பல வருடங்களாக ஆயுத வியாபாரம் நடத்திவருகிறார். ரகசிய தகவலை அடுத்து டெல்லியில் கஞ்ச்வாலா பகுதியில் இருந்து இவரை கைது செய்யும் பொழுது ஏழு ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றினர்.
விசாரணையின் போது நிழலுக கும்பலுக்கு ஆயுதம் விற்பதாகவும், மத்திய பிரதேச மாநிலம் லால்பாகில் இருந்து ஆயுதங்கள் கிடைப்பதாகவும் கமலா வாக்கு மூலம் அளித்துள்ளார்.

எகிப்தில் மொசாத் உளவாளி பிடிபட்டான்....

14 July 11, சமீபத்தில் எகிப்தில் வைத்து கைது செய்யப்பட இஸ்ரேலிய நாட்டவரான இலான் சைம் கிராபெல் (Ilan Chaim Grabel), ஒரு இஸ்ரேலிய உளவாளி என அறியபட்டான், இது தொடர்பாக  MENA செய்தி நிறுவனம் (Middle East News Agency) வெளியிட்டிருக்கும் செய்தி,

அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு குடியேறிய க்ராபெல், ஜனவரி 25 - ல் நடைபெற்ற தஹ்ரீர் சதுக்க ஆர்பாட்டத்திற்கு சிறிது நாட்களுக்கு முன் எகிப்தில் நுழைந்தான், (ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அவனது படம்),

இவன் இஸ்ரேலின் பாரா ட்ரூப்பர் பிரிகேட் (101 paratrooper brigade) படைபிரிவில் இணைந்து, 2006 - ல் நடைபெற்ற இஸ்ரேல்- லெபனான் போரில் ஈடுபட்டு காயமடைந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது,

எகிப்தின் சுப்ரீம் ஸ்டேட் ப்ரோசிகியூட்டர் ஹிஸாம் படாவி, க்ராபேல்-ஐ 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார், அவன்மீது எகிப்தினுடைய பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை சிதைக்க உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது,

இதற்கிடையில், இஸ்ரேலுடைய வெளியுறவு துறை அமைச்சகம் இந்த சம்பவத்தை உடனடியாக மறுத்துள்ளது, அதன் செய்தி தொடர்பாளர் இகால் பல்மோர் (Yigal Palmor) கூறும்போது, எந்தவொரு இஸ்ரேலுடைய உளவு ஏஜெண்டும் கைது செய்யப்பட்டதாக எகிப்திடமிருந்து எங்களுக்கு தகவல் வரவில்லை, அதற்கான வாய்ப்பும் இல்லை என்றார்,
source- presstv

திங்கள், ஜூன் 13, 2011

துருக்கியில் மீண்டும் உருதுகான் வெற்றி...

erdogan, அங்காரா:துருக்கி பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான ஜஸ்டிஸ் அண்ட் டெவல்ப்மெண்ட் கட்சிக்கு(ஏ.கே.பி) மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 98 சதவீத வாக்குகள் எண்ணி முடிந்த பொழுது மொத்தம் 550 இடங்களில் 327 இடங்களை  பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான் தலைமையிலான இஸ்லாமிய கட்சியான ஏ.கே.பி வென்றுள்ளது.
முக்கிய எதிர்கட்சியான செக்குலர் (மதசார்பற்ற) குடியரசு கட்சிக்கு 135 இடங்களும், தீவிர வலதுசாரி கட்சியான நேசனலிஸ்ட் மூவ்மெண்ட் கட்சிக்கு 56 இடங்களும் கிடைத்துள்ளன. குர்திஷ் ஆதரவு சுயேட்சைகள் 35 இடங்களை பெற்றுள்ளனர்.
மூன்றாவது முறையாக ஏ.கெ.பி தேர்தலில் களமிறங்கியது.  2002-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்ற ஏ.கே.பியின் ஆட்சி நாட்டிற்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை பெற்றுத்தந்தது. இஸ்லாமியவாதிகளின் ஆட்சிக்கு எதிரான தீவிர மதசார்பற்ற வாதிகளின் கடுத்த எதிர்ப்பையும் எதிர்கொண்டு மூன்றாவது தடவையும் தேர்தலை சந்தித்த ஏ.கே.பி தேர்தலில் எளிதாக வெற்றிப்பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

14 வயது முஸ்லிம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த உ.பி.போலீசின் மிருகத்தனம்

14 year old, லகிம்பூர் கேரி:உ.பி மாநிலத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் பதினான்கு வயதான முஸ்லிம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் அதிர்ச்சி தரும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த படுபாதக சம்பவத்தின் பின்னணியில் போலீசார் செயல்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
உ.பி மாநிலம் லகிம்பூர் பகுதியில் இன்திஸாம் அலி-தரானம் முஸ்லிம் தம்பதிகளின் மகள் சோனம் தான் இந்த கொடூரத்திற்கு பலியாகியுள்ளார். வெள்ளிக்கிழமை காலை முதல் மகளை காணவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காலையில் கால்நடைகளை மேய்க்க சென்றுள்ளார் சோனம். மதியம் கழிந்த பிறகும் மகளை காணாததால் தாயார் அவரை தேடிச் சென்றுள்ளார்.
அப்பொழுது கால்நடைகள் போலீஸ் ஸ்டேசனுக்கு அருகே மேய்ந்து கொண்டிருந்ததை கண்டுள்ளார். சிறிது நேரம் தேடிய பொழுது போலீஸ் ஸ்டேசன் காம்பவுண்ட் மரத்திற்கு அருகில் தனது மகளின் இறந்த உடலையும் அவர் கண்டறிந்தார்.

வியாழன், ஜூன் 09, 2011

ஜெ ஆட்சியில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தீர்மானம்!!

லங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு மீது, ஐ.நா. சபை போர்க் குற்றவாளி என்று அறிவித்து,விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு ஐ.நா. சபையை வற்புறுத்த வேண்டும். 

ராம்தேவ் உதவியாளரிடம் துப்பாக்கிகள்!! அதிர்ச்சி ரிப்போர்ட்!!

JUNE 9, பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா.  இவர் கடந்த 2005ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் வாங்கி உள்ளார்.

மேலும் ஆயுத சட்டத்தை மீறி 2 கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து உத்தரகண்ட் புலனாய்வு துறையினர் விசாரிக்கின்றனர். 

ராம்தேவ்வின் ஆயுத போராட்டத்திற்கு ஹசாரே கடும் எதிர்ப்பு!!

ஜூன் 9, யோகா குரு ராம்தேவ், ‘’அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.
ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும்.

அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம். இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்தி லிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும்.

அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் கட்சிக்கு அங்கீகாரம்!!!

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் சட்டரீதியான அந்தஸ்தை பெற்றுள்ளது.இதனால் செப்டம்பரில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பல ஆண்டுகளாக தடைவிதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்க உறுப்பினர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.கடந்த பெப்ருவரி மாதம் மக்கள் எழுச்சிப்போராட்டத்தின் விளைவாக ஹுஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்ட எகிப்தில் இயக்கரீதியான கட்டுக்கோப்புடன் செயல்படும் அமைப்புதான் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்.

ஊழலுக்கெதிரான இயக்கத்தை பாசிச சக்திகளிடமிருந்து விடுவிக்க வேண்டும்: PFI

ஊழல் போன்ற பொதுப் பிரச்சினைகளை, சந்தேகத்திர்குரிய சர்ச்சைக்குரிய நபர்கள் மற்றும் வகுப்புவாத ஃபாசிச கும்பல்கள் அவர்களின் மறைமுக செயல்திட்டத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும் இதுபோன்ற போராட்டங்களின் மூலம் கபளிகரம் செய்வதை குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா கோழிக்கோட்டில் நடைபெற்ற தேசிய செயற்குழுக்கூட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுஷ்மாவின் நள்ளிரவு நடனம்!!! - நாட்டிற்கே அவமானம்

ராஜ்காட்டில் காந்தி சமாதிக்கு முன்பு பா.ஜ.க நடத்திய உண்ணாவிரதப்போராட்டத்தில் மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜின் நடனமாடியது நள்ளிரவில் தூங்குவதற்காக பா.ஜ.க தலைவர்கள் நழுவியது என பா.ஜ.கவினர் அடித்த கூத்தினால் நாட்டிற்கே அவமானம் ஏற்பட்டுள்ளது.