ஹஜ் புனித பயணத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, புனித பயணம் செல்ல விரும்பும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு துணையாக இன்னொருவர் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த திட்டம் இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது.
மேலும், புனித பயணம் செல்ல தொடர்ந்து 3 ஆண்டுகள் விண்ணப்பித்து சீட் கிடைக்காதவர்களுக்கு இந்த ஆண்டு தானாகவே இடம் கிடைக்கும். அவர்கள் குலுக்கலில் பங்கேற்க தேவையில்லை. கடந்த மார்ச் 26ம் தேதி சவுதி பயணம் மேற்கொண்டபோது, ‘இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள கூடுதல் யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று அந்நாட்டு அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன்.
இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 71,671 பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்திய ஹஜ் கமிட்டி தேர்ந்தெடுக்கும் பயணிகள் அனைவருக்கும், போலீஸ் விசாரணை இல்லாமல் பாஸ்போர்ட் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். நிகழ்ச்சியில் ஹஜ் கமிட்டி தலைவர் மோஷினா கித்வாய் உட்பட பலர் பங்கேற்றனர்.
dinakaran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக