திங்கள், ஜூன் 13, 2011

துருக்கியில் மீண்டும் உருதுகான் வெற்றி...

erdogan, அங்காரா:துருக்கி பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான ஜஸ்டிஸ் அண்ட் டெவல்ப்மெண்ட் கட்சிக்கு(ஏ.கே.பி) மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 98 சதவீத வாக்குகள் எண்ணி முடிந்த பொழுது மொத்தம் 550 இடங்களில் 327 இடங்களை  பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான் தலைமையிலான இஸ்லாமிய கட்சியான ஏ.கே.பி வென்றுள்ளது.
முக்கிய எதிர்கட்சியான செக்குலர் (மதசார்பற்ற) குடியரசு கட்சிக்கு 135 இடங்களும், தீவிர வலதுசாரி கட்சியான நேசனலிஸ்ட் மூவ்மெண்ட் கட்சிக்கு 56 இடங்களும் கிடைத்துள்ளன. குர்திஷ் ஆதரவு சுயேட்சைகள் 35 இடங்களை பெற்றுள்ளனர்.
மூன்றாவது முறையாக ஏ.கெ.பி தேர்தலில் களமிறங்கியது.  2002-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்ற ஏ.கே.பியின் ஆட்சி நாட்டிற்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை பெற்றுத்தந்தது. இஸ்லாமியவாதிகளின் ஆட்சிக்கு எதிரான தீவிர மதசார்பற்ற வாதிகளின் கடுத்த எதிர்ப்பையும் எதிர்கொண்டு மூன்றாவது தடவையும் தேர்தலை சந்தித்த ஏ.கே.பி தேர்தலில் எளிதாக வெற்றிப்பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

ஏ.கே.பியின் வெற்றி உலகில் இஸ்லாமியவாதிகளுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. உலகில் முஸ்லிம் தலைமைத்துவம் இஸ்லாத்தின் எதிரிகளின் சதித்திட்டத்தால் துருக்கியில் முடிவுக்கு வந்தது. தீவிர மதசார்பற்றவாதிகளின் கரங்களில் சென்ற துருக்கியில் நுட்பமான அணுகு முறையினால் ஆட்சி இஸ்லாமிய வாதிகளின் கரங்களுக்கு தொடர்ந்து மூன்றாவது தடவையும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக