செவ்வாய், ஜூன் 21, 2011

லிபியாவில் சிவிலியன்கள் மீதான தாக்குதல் ஒரு தொழில்நுட்ப கோளாறு- நேட்டோ

Libya-says-NATO-strike-kills-nine-civilians-300x199திரிபோலி:லிபியாவின் தலைநகரான திரிபோலியில் மக்கள் வசிக்கும் பகுதியில் நடந்த நேட்டோவின் அராஜக தாக்குதலில் குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நேட்டோ குற்றத்தை ஒப்புக்கொண்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த தாக்குதல் தொழில்நுட்ப தகராறு மூலமாக தவறு ஏற்பட்டதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
சிவிலியன்களுக்கு எதிராக நேட்டோ தாக்குதல் நடத்துவதாக லிபியா அரசு குற்றம் சாட்டியபொழுதும் நேட்டோ அங்கீகரிக்கவில்லை.சம்பவத்தைக்குறித்து விசாரணை நடத்த பின்னர் தீர்மானிக்கப்பட்டது.
நிரபராதிகளான சிவிலியன்களின் உயிர்கள் இழப்பதற்கு காரணமானதில் வருந்துவதாகவும், சொந்த குடிமக்களுக்கு எதிராக லிபியா அரசு நடத்தும் தாக்குதல்களுக்கு எதிரான போரில் நேட்டோ எச்சரிக்கையுடன் செயல்படுவதாகவும் லெஃப்டினண்ட் ஜெனரல் சார்ல்ஸ் புச்சார்டு தெரிவித்துள்ளார்.இதற்கிடையே நேற்று திரிபோலியில் மீண்டும் நேட்டோ நடத்திய தாக்குதலில் 15 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக