சனி, ஜனவரி 31, 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- 

பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என்பது ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாக விளங்க கூடியவை. ஆனால் அண்மை காலங்களில் தமிழகத்தில் பொது தேர்தல்களும், இடைத்தேர்தல்களும் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் வகையில் உள்ளது. 

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது- அமெரிக்க எம்.பி. கருத்து

இந்தியாவில் புதிய அரசு பதவியேற்ற பிறகு கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த செனட் சபை உறுப்பினர் ஜோ பிட்டாஸ் தெரிவித்துள்ளார். 

வியாழன், ஜனவரி 29, 2015

சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க கோரி இந்திய தேசிய லீக் கட்சி போராட்டம்

10 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சவப்பெட்டிகளை ஏற்றி சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரகீம் தலைமையில் பேரணி நடந்தது.

மிச்செல் தலையை மறைக்கும் துணி அணியாததால் சர்ச்சை; கை குலுக்குவதை தவிர்த்த அதிகாரிகள்

சவுதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் தலையை மறைக்கும் துணியை அணியாததால் சர்ச்சை வெடித்துள்ளது.

புதன், ஜனவரி 28, 2015

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 6500 விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவில் நியூயார்க் நகரம், வடகிழக்கு அமெரிக்க நகரங்களில் பனிப்புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நியூஜெர்சி, மைனே, நியூஹம்ப்ஷயர் மாகாண நகரங்கள் குளிர்புயலின் பிடியில் சிக்கித்தவிக்கின்றன. வடகிழக்கு பகுதியில் பனிப்புயல், இதுவரை வரலாறு கண்டிராத அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. பல இடங்களில் பனிப்புயல் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இருக்கும்.

ராணுவ அணிவகுப்பை பார்வையிட புதினுக்கு சீனா அழைப்பு

இரண்டாவது உலகப்போரில் வெற்றி பெற்றதின்  70-வது ஆண்டு நினைவாக சீனா  அந்நாட்டு தலைநகர் பெய்ஜிங்கில் மாபெரும் ராணுவ அணிவகுப்பை  திட்டமிட்டுள்ளது.அதேபோல், இந்த நிகழ்ச்சியை பார்வையிட ரஷ்ய அதிபர் புதினுக்கும் அழைப்பு விடுக்கபடும் என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், ஜனவரி 27, 2015

'அமெரிக்காவின் சதிக்கு வீழ்ந்துவிடாதீர்கள்' இந்தியாவுக்கு சீனா குடியரசுதின செய்தி

"அமெரிக்காவின் சதிக்குள் வீழ்ந்துவிடாதீர்கள்" என இந்திய குடியரசுதின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் சீனப் பத்திரிகைகள் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. 

நாடுமுழுவதும் இன்று 66- வது குடியரசு தின விழா கோலாகலகமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் காலமானார்

நீண்ட நாட்களாக உடல்நல குறைபாடு காரணமாக அவதியுற்றுவந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் புனேவில் காலமானார். அவருக்கு வயது 94.

94 வயதான லட்சுமணன் சிறுநீரக தொற்று காரணமாக கடந்த சனிக்கிழமை மாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

திங்கள், ஜனவரி 26, 2015

டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பை ஒபாமா பார்வையிடுகிறார்


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்து உள்ளார். இந்த பயணத்தின் 2-வது நாளான இன்று(திங்கட்கிழமை) அவர் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு டெல்லி ராஜபாதையில் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் கண்கவர் அணிவகுப்பையும், விமான சாகச காட்சிகளையும் பார்வையிடுகிறார்.

பாகிஸ்தான் உளவாளி புகைப்படக் கலைஞராகப் பணியாற்றும் ஈஷ்வர் சந்த்ரா பஹ்ரா என்பவர் கைது!

Ishwar-Chandra-Behera

இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் ஒடிஸா மாநிலத்தின் சந்திப்பூரில் இயங்கி வரும் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தில் இடைக்கால் ஆய்வு மண்டலத்தில்–Interim Test Range (ITR)– புகைப்படக் கலைஞராகப் பணியாற்றும் ஈஷ்வர் சந்த்ரா பஹ்ரா என்பவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் உளவாளியாகச் செயல் பட்டு வந்ததை அடுத்து தேசீயப் புலனாய்வு முகமை(N I A )யால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சனி, ஜனவரி 24, 2015

‘மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுங்கள்’ இந்தோனேஷியாவுக்கு, ஆஸ்திரேலியா பிரதமர் வேண்டுகோள்

இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 8 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடத்த முயன்ற மையூரன் சுகுமாரன், ஆன்ட்ரூ சான் என்ற 2 ஆஸ்திரேலிய வாலிபர்கள், பாலி விமான நிலையத்தில் கடந்த 2005–ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

40 ஆண்டுகளில் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச பிரியாணி வழங்கிய பிரியாணி பாபா

ஆந்திர மாநிலத்தில் வாழும் ‘பிரியாணி பாபா’ என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக தினந்தோறும் ஏழை பக்தர்களுக்கு சாதி, மத, பேதமின்றி பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இதுவரை சுமார் 1 கோடி ஏழைகளுக்கு இவர் பிரியாணி தானம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

வெள்ளி, ஜனவரி 23, 2015

இண்டர்நெட் இல்லாமலேயே 'வாட்ஸ்-ஆப்'பை பயன்படுத்தும் புதிய சிம் அறிமுகம் : 'வாட்ஸிம்'



உலகம் முழுவதும் படுபாப்புலராகிவிட்ட இந்த வாட்ஸ்-ஆப்பை இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை தயாரித்து அசத்தியிருக்கிறது இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம். இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக்கோரி அமெரிக்க கோர்ட்டில் வழக்கு

அமெரிக்காவில் இயங்கி வரும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பு, நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. அதில், ‘இந்தியாவில் இயங்கி வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பாசிச கொள்கைகளை பரப்பி வருவதுடன், இந்தியாவை இந்து நாடாக மாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

வியாழன், ஜனவரி 22, 2015

ரபேல் நடால் (ஸ்பெயின்) போராடி அமெரிக்காவின் ஸ்மிக்செக்கை வீழ்த்தினார்.

 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், நட்சத்திர வீரர்  ரபேல் நடால் (ஸ்பெயின்) 4 மணி நேரம் போராடி அமெரிக்காவின் ஸ்மிக்செக்கை வீழ்த்தினார். மெல்போர்னில் நேற்று நடந்த இப்போட்டியில், நடால்  (3வது ரேங்க்) 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் ஸ்மிக்செக் (112வது ரேங்க்) 6-3 என  வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது செட்டில் இரு வீரர்களும் தங்கள் சர்வீசில் புள்ளிகளைக் குவித்து விடாப்பிடியாக  போராடியதால், ஆட்டம் டை பிரேக்கர் வரை நீடித்தது. 

பலரது உயிரை காப்பாற்றிய இஸ்லாமிய இளைஞருக்கு பதக்கம் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை

பிரான்சில் கடந்த மாதம் சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலிலிருந்து பலரது உயிரைக் காப்பாற்றிய லஸ்ஸானா என்ற இஸ்லாமிய இளைஞருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கி அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. அவருக்கு குடியுரிமை வழங்கும் விழாவில் பிரான்சின் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 

புதன், ஜனவரி 21, 2015

டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் அதிருப்தியாளர்கள் தர்ணா போராட்டம்

டெல்லி மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் சதீஷ் உபாத்யாய்க்கு, தேர்தலில் போட்டியிட ‘டிக்கெட்’ வழங்காததை கண்டித்து, அதிருப்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டது. முதல்-மந்திரி வேட்பாளராக கிரன்பேடி களத்தில் இறக்கி விடப்பட்டார். வேட்பாளர்கள் பட்டியலில், டெல்லி மாநில பா.ஜ.க. தலைவர் சதீஷ் உபாத்யாய் பெயர் இடம் பெறாதது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சகாயத்துக்கு ஆதரவான இயக்கத்தை தடை செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை ஐகோர்ட்டில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், அகஸ்தியர்பட்டியை சேர்ந்த முத்துகுமார் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

மதுரையில் நடந்த கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை, சட்ட ஆணையராக நியமித்து இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில், அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறது.

செவ்வாய், ஜனவரி 20, 2015

புகைபிடிப்பதால் சீனாவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் இறக்கின்றனர்: சீனா அரசு விழித்து கொள்ள வேண்டும்.

சீனாவில் புகைபிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் வயது காலம் முடியும் முன்னரே அவர்கள் இறப்பை சந்திக்கின்றனர் என்று உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் மது பழக்கத்திற்கும் புகை பழக்கத்திற்க்கும் அடிமையாகின்றனர். இதனால் அவர்களுக்கு நீரிழிவு நோய்கள், மற்றும் கல்லீரல் பாதிப்பு, இதயம் சம்பந்தபட்ட பிரச்சனை,புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு ஆளாக்கபட்டு தங்கள் வயது காலம் முடியும் முன்னரே அவர்கள் மரணத்தை தழுவுகின்றனர்.

ஞாயிறு, ஜனவரி 18, 2015

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பிப்ரவரி 1–ந் தேதி வரை போட்டி நடைபெறுகிறது.

70 லட்சம் குழந்தைகள் பயன்பெற தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழ்நாடு முழுவதும் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை தொடங்கியது. இதனால், சுமார் 70 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர்.

தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக போலியோ சொட்டு மருந்து முகாம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் முதல் தவணை போலியோ சொட்டு மருந்தை ஜனவரி 18-ம் தேதியும் (இன்று), இரண்டாம் தவணை சொட்டு மருந்தை பிப்ரவரி 22-ம் தேதியும் போட்டுக் கொள்ள வேண்டும்.

சனி, ஜனவரி 17, 2015

சீனாவின் துறைமுக திட்டத்தை மறுஆய்வு செய்ய இலங்கை அரசு முடிவு

இலங்கையில் புதிய துறைமுகம் அமைப்பதற்கு சீனாவுக்கு ராஜபக்சே அரசு அனுமதி வழங்கியதை மறுஆய்வு செய்ய, புதிய அரசு தீர்மானித்து உள்ளது. 

இலங்கையில் முன்பு ராஜபக்சே அதிபராக இருந்த போது, சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அண்டை நாடான இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவரது சில நடவடிக்கைகள் அமைந்து இருந்தன. தலைநகர் கொழும்புவில் மிகப்பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்க சீன தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனத்துக்கு 108 ஹெக்டேர் நிலத்தை ராஜபக்சே அரசு ஒதுக்கியது.

கச்சா எண்ணெய் விலை குறைக்க மறுக்கும் மோடி அரசு

சர்வதேச சந்தையில், கச்சாஎண்ணெய் விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. எனினும் இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலைகளை அந்த அளவிற்கு குறைக்காமல் வெறு மனே ஒரு ரூபாய், 2 ரூபாய் என கண்துடைப்புக்காக குறைக்கும் அறிவிப்புகளை மோடி அரசு வெளியிட்டு வருகிறது.கடந்த 2014 ஜூன் முதல் இதுவரை கச்சா எண்ணெய் விலை 60 சதவீதம் குறைந்துள் ளது. கடந்த 7 வாரங்களில் மட்டும் விலை 36 சதவீதம் குறைந்துள்ளது.

வெள்ளி, ஜனவரி 16, 2015

ராஜபக்சேவுக்கு அடுத்த இடி: கட்சி தலைவர் பதவியும் காலி

இலங்கை அதிபர் தேர்தலில் மண்ணைக் கவ்விய மகிந்த ராஜபக்சே இலங்கை சுதந்திரக் கட்சி தலைவர் பதவியை விட்டு விலக சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளராக இருந்த தற்போதைய இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

வியாழன், ஜனவரி 15, 2015

டெல்லி பாரதீய ஜனதா தலைவருக்கு எதிரான சான்றுகளை இன்று வெளியிடுவோம்: கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சதீஷ் உபாத்யாயாவுக்கு எதிராக புதிதாக இன்று சான்றுகளை வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

முன்னாள் முதல் மந்திரியான கெஜ்ரிவால், உபாத்யாய் மற்றும் சில மின் விநியோக நிறுவனங்களுக்கு இடையே தொடர்பு உள்ளது என்றும், அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் தேசிய தலைநகர் டெல்லியில் மீட்டர்களை பொருத்துதல் மற்றும் சரி செய்தல் தொடர்பான பணிகளை டிஸ்காம் என்ற நிறுவனத்திற்கு செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.


இதற்கு உபாத்யாய், இதனை நிரூபிக்க கெஜ்ரிவால் தவறினால், நஷ்ட ஈடு வழக்கு ஒன்றை தொடர்வேன்.  கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், அரசியலை விட்டு நான் விலகுவேன் என்றும் பதிலளித்திருந்தார்.

கெஜ்ரிவால் கேள்வி

இந்நிலையில், டெல்லி பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அரசியலை விட்டு விலகுவேன் என்ற தனது வாக்கினை காப்பாற்றுவாரா? என ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார் கெஜ்ரிவால்.  நாங்கள் சான்றுகளை சமர்ப்பித்தால் அரசியலை விட்டு விலகி விடுவதாக சதீஷ் உபாத்யாய் கூறியுள்ளார்.

சான்றை வெளியிடுவோம்

நாங்கள் அதற்கான சான்றை இன்று வெளியிடுவோம்.  அவர் தனது வாக்கை காப்பாற்றுவார் என நாங்கள் நம்புகிறோம் என டுவிட்டர் செய்தியில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  மின் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ள இவரை பாரதீய ஜனதா கட்சிக்கு டெல்லி தலைவராக தேர்வு செய்தது எவ்வாறு என்று கெஜ்ரிவால் கேட்டுள்ளார்.  உபாத்யாய் 6 நிறுவனங்களை சொந்தமாக வைத்திருப்பதாகவும் அவற்றில் சட்டத்திற்கு மாறாக ஒரு நிறுவனம் இரண்டு வாட் எண்களை வைத்திப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

வியாழன், ஜனவரி 08, 2015

சர்வதேச சந்தையில் கடந்த ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு

சர்வதேச சந்தையில் கடந்த ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கவலை அடைந்துள்ளன. நியூயார்க்கில் உள்ள இன்டர்மீடியட் வகை கச்சா எண்ணெய் நேற்று முன்தினம் 47.75 டாலர் அளவிற்கு குறைந்துள்ளது.

இலங்கையில் வாக்குப்பதிவு முடிந்தது; அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவு

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  முடிவடைந்தது. இதில் முதல் முறையாக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் ஆளும் ராஜபக்சேவுக்கும் அவரின் அரசில் மந்திரியாக இருந்த மைத்ரிபால் சிறிசேனாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.