செவ்வாய், ஜனவரி 20, 2015

புகைபிடிப்பதால் சீனாவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் இறக்கின்றனர்: சீனா அரசு விழித்து கொள்ள வேண்டும்.

சீனாவில் புகைபிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் வயது காலம் முடியும் முன்னரே அவர்கள் இறப்பை சந்திக்கின்றனர் என்று உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் மது பழக்கத்திற்கும் புகை பழக்கத்திற்க்கும் அடிமையாகின்றனர். இதனால் அவர்களுக்கு நீரிழிவு நோய்கள், மற்றும் கல்லீரல் பாதிப்பு, இதயம் சம்பந்தபட்ட பிரச்சனை,புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு ஆளாக்கபட்டு தங்கள் வயது காலம் முடியும் முன்னரே அவர்கள் மரணத்தை தழுவுகின்றனர்.

கடந்த 2012-ல் சீனாவில் மதுவுக்கும், புகைபிடிக்கும் பழக்கத்திற்க்கு அடிமையாகி இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சத்து 60 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் வசிக்கும் இளம் பருத்தினரிடையே அதிகமான பருமனான உடல் வளர்ச்சிக்கு ஆளானவர்கள் உயர் ரத்த அழுத்தால் பாதிக்கபட்டவர்களாக உள்ளனர்.

சீனா அரசு தற்போது விழித்து கொள்ள வேண்டும் என்றும்,ஒரு வலுவான நடவடிக்கை தேவை என்று உலக சுகாதார நிறுவமனம் சீன அரசிற்கு தெரிவித்துள்ளது.

சீன மக்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை, புகைத்தல்,அளவுக்கு மீறி மது அருந்துதல்,ஆரோகியமற்ற உணவு, இவற்றை தவிர்த்தாலே சீன மக்கலின் இறப்பு வீதம் குறையும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக