கொழும்பு: இலங்கையின் உண்மையான நட்பு நாடு பாகிஸ்தான் என்றும் பாகிஸ்தானின் உதவி கிடைக்காமல் போயிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழுவினர் மகிந்த ராஜபக்சேவை நேற்று அவரது அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினர். அப்போது அக்குழுவிடம் பேசிய மகிந்த ராஜபக்சே, பாக்ஸ்தான் தான் இலங்கையின் உண்மையான
நட்பு நாடு. பாகிஸ்தான் நாடு மீது இலங்கை ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் உதவி இல்லாவிட்டால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தை இலக்கு வைத்து கண்காணிப்பு நிலையம் அமைக்க பாகிஸ்தான் அனுமதி கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் ராஜபக்சேவின் இந்த நெருக்கமான பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகத் தமிழர்களின் எதிர்ப்பை மீறி இலங்கை நட்பு நாடு என்று மத்திய அரசு கூறிக் கொண்டாலும் இலங்கையோ தங்களது உண்மையான நட்பு நாடு பாகிஸ்தான் என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக