
இச்சங்கடத்தை நீக்கும் பொருட்டு இனி அரசு ஆவணங்களில் அம்மா, அப்பா என்ற பெயர்கள் நீக்கப்படும் என்றும் அதற்கு பதில் பெற்றோர்கள் 1, 2 என்று இடம் பெறும் என்று ப்ரான்ஸ் அரசு புதிய வரைவு சட்டம் இயற்றியுள்ளது. மேலும் திருமணம் என்பது ஓரே பாலினம் அல்லது வெவ்வேறு பாலினத்தை சார்ந்த இருவரின் சங்கமம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரே பாலினத்தை சார்ந்தவர்களுக்கு குழந்தைகளை தத்தெடுக்கும் விஷயத்தில் வழமையாக திருமணம் செய்யும் வெவ்வேறு பாலினத்தை சேர்ந்தவர்களை போன்றே சம உரிமை கொடுக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் இத்தகு சட்டம் கொண்டு வந்தால் சமூகத்தில் பல தார மணமும் ஒழுக்க சீர்கேடும் ஏற்படும் என்று ப்ரான்சு கத்தோலிக் சர்ச் தலைவர் பிலிப்பீ பார்பரின் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக