புதன், நவம்பர் 30, 2011

கடாபியின் மகன் சிக்கியது எப்படி: அதிரடி ரிப்போட் !

கடாபியின் மகன் சிக்கிக் கொண்டது எப்படி என்ற தகவல் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியவருகிறது. லிபியாவின் தென்மேற்கு பாலைவனப் பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில் கடாபியின் மகன் செய்ஃப் அல்-இஸ்லாம் எல்-கடாபி கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மேலதிக விபரங்கள் ஏதும் உடனடியாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

தொடர்ந்து 4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்; புதிய ஆய்வில் தகவல்


தொடர்ந்து 4 மாதங்கள்
 
குறைந்த சக்தி தரும் உணவை
 
சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்;
 
புதிய ஆய்வில் தகவல்தற்போது உலகம் முழுவதும் நீரிழிவு நோயினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். அவைகளை தவிர்த்து இந்த நோய் குணமாகும் வழியை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நெதர்லாந்தை சேர்ந்த லெய்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் புதிதாக ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.அதன்படி இரண்டாம் பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுப்பாட்டின் மூலம் முற்றிலும்

குலுங்கியது பிலிப்பைன்ஸ் பயங்கர நில நடுக்கம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperமணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை 8.27 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு மாகாணமான ஜாம்பேல்ஸ்சின் மேற்கு கடற்கரையையொட்டி நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அதிர்வு 6 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் தலைநகர் மணிலா

மைக்கேல் ஜாக்சன் மரணம் அதிக மருந்து கொடுத்த டாக்டருக்கு 4 ஆண்டு சிறை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperலாஸ்ஏஞ்சல்ஸ் : மைக்கேல் ஜாக்சனுக்கு அதிக மருந்து கொடுத்து அவரது மரணத்துக்கு காரணமாக இருந்த டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ‘கிங் ஆப் பாப்’ என்று புகழப்பட்டவர் பாடகர் மைக்கேல் ஜாக்சன். 2009-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி இறந்தார். புரபோபால், லோராஜிபாம்

வளர்த்த கடா மாரில் பாயும் வினோதம்! பாஜகவுக்கு செக் வைக்கும் ஸ்ரீராமுலு!

பாஜகவின் சார்பில் பெல்லாரி தொகுதியில் வெற்றி பெற்று எடியூரப்பாவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்  ஸ்ரீராமுலு. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால் எடியூரப்பா முதல்வர் பதவியை இழந்த பிறகு புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற சதானந்த கௌடா தலைமையிலான அமைச்சரவையில் ஸ்ரீ ராமுலு மற்றும் ரெட்டி சகோதரர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வில்லை. அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் தம்முடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த ஸ்ரீராமுலு பாஜகவில் இருந்தும் விலகினார். ஸ்ரீ ராமுலு ராஜினாமா செய்ததை அடுத்து பெல்லாரி தொகுதிக்கு நாளை நவம்பர் 30 அன்று இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

பிரிட்டன் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மாணவர்கள்


imagesCA4CEZGFடெஹ்ரான்:ஈரான் தலைநகரான டெஹ்ரானில் பிரிட்டன் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அந்நாட்டின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரிட்டன் தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் அங்கு நாட்டப்பட்டிருந்த பிரிட்டன் கொடியை எரித்துவிட்டு ஈரான் கொடியை ஏற்றினார்.தூதரகத்தின் மீது மக்கள் கற்கள் வீசுவது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த காட்சி ஆகியவற்றை

செருப்படி வாங்கிய 10 பிரபலங்கள் : பிளாஷ்பேக்


சமீபத்தில் ஹர்விந்தர் சிங் எனும் வாலிபர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமை தாக்கியதும் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவாரை தாக்கியதும் பரபரப்பாய் பேசப்பட்டது. இச்சூழலில் இந்நேரம் வாசகர்களுக்காக சமீப காலங்களில் பொதுமக்களிடத்தில் தாக்குதலுக்குள்ளான பிரபலங்களை பற்றிய ஒரு பிளாஷ் பேக்...

சமூக நீதி மாநாடு தரும் செய்தி

delhi SJC
சமூக நீதியையும்,சம உரிமைகளையும் தேடி இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் நடத்தி வரும் நீண்ட நெடிய போராட்டத்தின் மகத்தான வளர்ச்சிதான் கடந்த 26,27 தினங்களில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு. இந்தியாவின் நாலா புறங்களிலும் இருந்து வந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்த மாநாட்டின் இரண்டாவது நாள், தேசத்தின் தலைநகரையே

மீண்டும் ஏமாந்த தமிழக மக்கள் :தமிழக முதல்வர் அவர்களுக்கு மொக்கையனின் மனம் திறந்த மடல்


தமிழக முதல்வர் அவர்களுக்கு,

தமிழகத்தில் உள்ள இரு பெரிய கட்சிகளுக்கும் நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என்பதைக் கடந்த ஆட்சியில் கருணாநிதி நிரூபணம் செய்த பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய ஆறே மாதத்தில் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நீங்கள் பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதுடன் பால் விலையையும் லிட்டருக்கு ரூ 6.25 உயர்த்தியுள்ளீர்கள். இது போதாதென்று மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்க்கப் போகிறீர்கள். இதற்க்கெல்லாம் நீங்கள் சொல்லும் காரணம், தமிழக பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன என்பதுவே. கடந்த ஐந்து  வருடமாக தமிழகத்தை ஆண்ட கருணாநிதியே,  "பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கக் காரணம், தமிழக மின்சார வாரியம் சுமார் 45000 கோடி அளவுக்குக்

லோக்பால் வரம்புக்குள் பிரதமர், சிபிஐ இல்லை: ஆனால், என்.ஜி.ஓக்கள் உண்டு; ஹசாரே குழுவுக்கு அரசு ஆப்பு வைத்தது

Anna Hazare and Manmohan Singhடெல்லி: ஊழலுக்கு எதிராக மத்திய அரசு உருவாக்கியுள்ள லோக்பால் வரைவு மசோதாவின் சட்ட வரம்புக்குள் வெளிநாட்டு நன்கொடை வசூலிக்கும் என்.ஜி.ஓக்களும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.இதன்மூலம் அன்னா ஹசாரேயின் குழுவினரின் என்.ஜி.ஓ. அமைப்புக்கும் மத்திய அரசு 'செக்' வைத்துள்ளது.ஆனால், இந்த மசோதாவுக்கு அன்னா ஹசாரே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

கட்டண உயர்வால் பஸ்களில் ஏறவே அஞ்சும் பயணிகள்-காற்று வாங்கும் அரசு பஸ்கள்

சென்னை: பஸ் கட்டண உயர்வின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மக்கள் மீளவில்லை என்று தெரிகிறது. கடுமையான உயர்வு காரணமாக அரசு பஸ்களில் ஏறவே மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் சென்னையிலிருந்து வெளியூர் போகும் குறிப்பாக தொலை தூர ஊர்களுக்குப் போகும் பஸ்கள் காற்று வாங்குகின்றன. ஏறுங்க சார் என்று பயணிகளிடம் நடத்துனர்கள் கெஞ்சும் அளவுக்கு நிலைமை போயுள்ளதாம்.சமீபத்தில் தமிழக அரசு பஸ் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. மேலும் அதை இரவோடு இரவாக அமல்படுத்தியதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த அதிர்ச்சி போதாதென்று, பஸ்களின் நடத்துனர்கள் தாறுமாறாக டிக்கெட் போட்டு மக்களை மேலும் அதிர்ச்சியில் மூழ்கடித்தனர்.

அன்னாவை 'அமுக்கிய' சில்லறை வணிகம்!; இத.. இதைத் தான் மத்திய அரசும் எதிர்பார்த்தது

Anna Hazare and Wal Martடெல்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக இன்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.இந்த விவகாரம் காரணமாக கடந்த 3 நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் நாடாளுமன்றம் இயங்கவில்லை.
இதில் ஒருமித்த கருத்தை எட்டி நாடாளுமன்றத்தை அமைதியாக

இருளர் பெண்கள் பலாத்காரம் தமிழக போலீசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்!!!

சென்னை : இருளர் பெண்கள் பலாத்கார வழக்கில் போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனே மருத்துவ சோதனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வக்கீல் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில், ÔÔதிருக்கோவிலூர் அருகே மண்டபம் ஊரில் இருளர் இனத்தை சேர்ந்த 4 இளம்பெண்களை

செவ்வாய், நவம்பர் 29, 2011

2ஜி: ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வாவுக்கும் ஜாமீன் கிடைத்தது

Shahid Balwaடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வாவுக்கு ஜாமீன் வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை என்று சிபிஐ கூறியது. இதையடுத்து அவருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
பல்வாவும், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் ஆர்.கே. சண்டோலியாவும் ஜாமீன் கோரி

தமிழக போலிசாரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இருளர் இன பெண்கள்


பாதிக்கப்பட்ட பெண்கள்விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பழங்குடி இருளர் இனப்பெண்கள் நால்வர் அண்மையில் போலீசாரில் வன்புணர்ச்சிக்குள்ளானதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இச் சம்பவம் குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணை துவங்கியிருக்கிறது. ஆயினுங்கூட அதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை, மத்திய புலனாய்வுத் துறை, சிபிஐயின் விசாரணை

அன்னிய முதலீடு சில்லரை நிறுவனங்களை தீயிட்டு கொளுத்துவோம்: முலாயம் சிங் எச்சரிக்கை


அன்னிய முதலீடு சில்லரை நிறுவனங்களை தீயிட்டு கொளுத்துவோம்: முலாயம் சிங் எச்சரிக்கைஉத்தரபிரதேசத்தில் அன்னிய முதலீடு சில்லரை வர்த்தக நிறுவனங்களைத் துவக்கினால், அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துவோம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.உத்தரபிரதேச மாநில முதல்- மந்திரி மாயாவதி மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது பற்றி செய்தியாளர்கள் முலாயம் சிங்கிடம் கேட்டதற்கு,  அவர் கூறுகையில்,

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!!!

ஈழத்தமிலருக்காக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த  செங்கொடிக்கு நினைவு இல்லம் அமைத்து திறப்பு விழா நடத்தப்பட்டது. ஏற்கனவே தினமலர் நிருபர் தமிழகத்தின்  செங்கொடி அவர்களை பற்றி அவதூறான செய்தி வெளியிட்டதால் அதற்கு தக்க பதில் தரும் விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த, "தினமலர்' நிருபர் மணவாளனை, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தினர்சரமாரியாக அடித்து உதைத்தனர்.

திங்கள், நவம்பர் 28, 2011

பாப்புலர் ஃப்ரண்டின் லட்சியம் நிறைவேறும் – மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ்! ! !

Mahant Acharya Ayodya
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் முன்வைக்கும் லட்சியம் நிறைவேறியே தீரும் என ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது:

சீன இந்தியப் போர் மீண்டும் ஆரம்பிக்குமா ? இரகசியங்கள் அம்பலம்!!!

சீன அரசானது இரகசியமாக இந்திய எல்லையில் கட்டிவரும் விமானப்படைத் தளத்தை இந்தியா கண்டு பிடித்து புகைப்படங்களையும் எடுத்துள்ளது. சீன இந்திய எல்லைக் கிராமமான பூக் ஷேயில் சீனா தனது விமானப்படை தளத்தை இரகசியமாக நிர்மானித்துவருகிறது என்ற செய்திகள் ஏற்கனவே இந்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்திருந்தது. இருப்பினும் மலைசார்ந்த இடம் என்பதாலும் மற்றும் அது சீனாவின் எல்லையில் இருப்பதாலும் அதனைப் பார்வையிடுவதில் பல சிரமங்கள் இருந்தது.

ஐரிஷ் கடலில் மூழ்கியது சரக்கு கப்பல் !!!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperநார்த்வேல்ஸ் : இங்கிலாந்தின் நார்த்வேல்ஸ் பகுதியில் வீசிய பலத்த சூறை காற்றில் ஐரிஷ் கடலில் பயணம் செய்த சரக்கு கப்பல் நேற்று எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் கப்பலில் பயணம் செய்த அனைவரும் கடலில் மூழ்கினர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது

ரூ.50 லட்சம் நன்கொடை மோசடி வழக்கில் கிரண்பேடி மீது எஃப் ஐ ஆர்!


புதுடெல்லி : ரூ. 50 லட்சம் நன்கொடை மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், டெல்லி மெட்ரோபாலிட்டன்  நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கிரண்பேடி மீது டெல்லி காவல்துறையினர் நேற்று மோசடி வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறையினர், துணை ராணுவத்தினரின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு இலவச கணினி கல்வி கற்றுக் கொடுத்ததில் கிரண்பேடி மோசடியில் ஈடுபட்டதாக வக்கீல் தேவிந்தர் சிங் சவுகான் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.50 லட்சம் நன்கொடை பெற்று, வேதாந்தா பவுன்டேஷனுடன் இணைந்து இந்த நிதி மோசடியில் ஈடுபட்டதாக கிரண்பேடி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

டெல்லி மாநாட்டின் புகைபடங்கள் பாகம் 1





ஊமையாகிப்போன ஊடகங்கள்!!!

ஒரு புகழ்பெற்ற மைதானம்....!அதுவும் தேசத்தின் தலை நகரம்...!
பல்லாயிரக்கணக்கான மக்கள் சங்கமித்த இடம்....!
எங்கே போனது ஊடகம்?
ஒரு வேளை ஊமையாகிப்போனதோ?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா : ஒரு சமூக நல இயக்கம், கடந்த 1989 ஆம் ஆண்டிலே தொடங்கப்பட்டு  ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறது. இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான கேரளாவிலிருந்து தொடங்கப்பட்ட இந்த பேரியக்கம்

இறுதி எச்சரிக்கையை புறக்கணித்து வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டம்

imagesCAL638R2
லாஸ் ஏஞ்சல்ஸ்:போராட்டத்தை கைவிட்டு வெளியேற மேயரும், போலீஸ் தலைவரும் பிறப்பித்த இறுதி எச்சரிக்கையை புறக்கணிப்போம் என வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர். வெளியேறுவதற்கு நேற்று காலை வரை அதிகாரிகள் எதிர்ப்பாளர்களுக்கு கால வரையறையை நிர்ணயித்திருந்தனர்

கனிமொழிக்கு கிடைத்தது நிபந்தனை ஜாமீன்

புதுடெல்லி: 2ஜி வழக்கில் எம்பி கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம். சுமார் 6 மாதங்களுக்கு பிறகு விடுதலை ஆகிறார் கனிமொழி. இதுமட்டுமின்றி 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட சரத்குமார்  உட்பட 5 பேருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது. ஆனால் சித்தார்த் பெஹூராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மட்டும் ஒத்திவைத்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

நேட்டோவின் மன்னிப்பை நாங்கள் ஏற்க மாட்டோம்' : பாக். ராணுவம்

li-pakistan-coffin-620-ap16இஸ்லாமாபாத்: அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 24 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு நேட்டோ கோரிய மன்னிப்பை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடமேற்கு மலைபகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ சோதனை சாவடி மீது அமெரிக்க கூட்டுப்படையான “நேட்டோ” ஹெலிகாப்டர்கள்

மோடிக்கு அஞ்சும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களிடம் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் – பதேஹ்பூரி இமாம்

vlcsnap-2011-11-28-08h36m26s118
புதுடெல்லி:முஸ்லிம்களுக்கு எதிரான அக்கிரமங்கள் குஜராத்தில் அனைத்து வரம்புகளையும் மீறி வருகின்றன என பதேஹ்பூரி இமாம் முஹம்மது முகர்ரம் அஹ்மத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.

சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது


புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. இரண்டு தினங்களாக

ரீசார்ஜ் மோசடி: அனில் அம்பானி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு!!!

Anil Ambaniதன்பாத்: ரீசார்ஜ் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் இன்போகாம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனில் அம்பானியின் சொத்துகளை பறிமுதல் செய்ய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.பிரதாப் குமார் வர்மா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவருடைய மனைவி, ரிலையன்ஸ் செல்போன் சிம்கார்டு வாங்கி இருந்தார்.

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்!!!

Walking Exerciseநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.
தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள்

நேட்டோ விநியோகப் பாதை மூடப்பட்டது:பாக். இராணுவம் அதிரடி!!!


பாகிஸ்தான் ஊடாக நேட்டோவுக்கான விநியோகம்ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளுக்கான விநியோகப் பொருட்கள் போகும் பாதைகள் அனைத்தையும் மூடியுள்ளதாகப் பாகிஸ்தான ராணுவம் கூறியுள்ளது. ஆப்கான் -பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயுள்ள பாகிஸ்தான சோதனைச் சாவடியொன்றின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை நடந்த நேட்டோ ஹெலிகாப்ட்டர் தாக்குதலில் பாகிஸ்தான் படையினர்

மாவோயிஸ்டு தலைவர் கிஷான்ஜி 6 முறை சுட்டுக்கொல்லப்பட்டார்


போலீஸ் சித்ரவதை இல்லை:  மாவோயிஸ்டு தலைவர் கிஷான்ஜி 6 முறை சுட்டுக்கொல்லப்பட்டார்- பிரேத பரிசோதனையில் தகவல்மாவோயிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவராக திகழ்ந்தவர் கிஷான்ஜி. இவர் மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிட்னாப்பூரில் உள்ள வனப்பகுதியில் வைத்து இரண்டு நாட்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார். என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டதாக தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அவர் போலி என் கவுண்டரில் கொல்லப்பட்டதாக

இணையதளத்தில் ஆபாச போட்டோ, வீடியோ வெளியிட்டால் 5 ஆண்டு சிறை!!!

சென்னை : இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் சிறையில் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய காலம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணைய தளத்தில்

அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றன – ஃபதேஹ்பூர் ஷாஹி இமாம்

shahi-imam
புதுடெல்லி:முஸ்லிம்களின் மோசமான சூழ்நிலையை சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டிய பிறகும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுவது தொடர்கிறது என டெல்லி ஃபதேஹ்பூரி ஷாஹி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத் கூறியுள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டையொட்டி நடைபெற்ற மில்லி கன்வென்சனை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது

எனக்கு பின்னால் ரகசிய சக்திகள் இல்லை – இம்ரான்கான்!!!

ImranKhan
பெஷாவர்:’எனது அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு பின்னணியில் எந்த ரகசிய சக்தியும் இல்லை’ என தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவரும், பாக்.கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கூறியுள்ளார். பெஷாவரில் நடந்த கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர். தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் வளர்ச்சிக்கு தடைபோட முடியாது.

ஞாயிறு, நவம்பர் 27, 2011

அதிகாலை எழுந்தால் ஸ்லிம் ஆகலாம்!!!

லண்டன், : தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று இங்கிலாந்து ஆய்வு தெரிவிக்கிறது. லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வில் இறங்கினர்.ஆய்வில் 1,068 பேர் கலந்து கொண்டனர்.

துபாய்: மெட்ரோவில் உறங்கினால் 300 திர்ஹம் அபராதம்!!!


துபாய் மெட்ரோ தொடர்வண்டி பயணத்தில் உறக்கத்தில் ஆழ்ந்து, இறங்க வேண்டிய நிலையம் தாண்டிப் பயணித்த பெண்ணொருவருக்கு 300 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்த தன் பெற்றோரைக் காணவந்துள்ள அப்பெண், காலித் பின் வலீத் நிலையத்தில் ஏறி, தூங்கிவிட்டதால் தான் இறங்க வேண்டிய இபுனு பதூதா நிலையம் தாண்டியும் பயணித்துள்ளார். ஜெபல் அலி நிலையத்தில் பரிசோதகர் வந்து எழுப்பிவிட்டு, அப்பெண்ணுக்கு 300 திர்ஹம் அபராதம் விதித்துள்ளார்.

இது நல்லதுக்கில்ல... நாசமா போயிடுவீங்க! - ஜெ ஆட்சி பற்றி சீமான்

Seemanசென்னை: மத்திய அரசு நிதி தரவில்லை என்ற காரணத்தைக் காட்டி மக்கள் தலையில் விலைவாசி உயர்வை திணித்திருக்கும் இந்த ஆட்சி நாசமாகப் போய்விடும் என கடுமையாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். சென்னை அம்பத்தூரில் உள்ள ‘ஆஸ்ஸி’ பள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் விழாவில் இயக்குநர் சீமான் பேசியது:

எல் சல்வடார் நாட்டில் அடுத்தடுத்து 700 முறை நில அதிர்வு-மக்கள் அச்சம்

எல்சல்வடார்: மத்திய அமெரிக்காவில் உள்ள எல்சல்வடார் நாட்டில் கடந்த மூன்று நாட்களுக்குள் 700க்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.ஒருமுறை நில அதிர்வு ஏற்பட்டாலே வீடுகளை விட்டு வீதிகளில் தங்கி விடுகின்றனர் நம் ஊர் மக்கள். ஆனால் மத்திய அமெரிக்காவில் உள்ள எல்சல்வடார் நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும்

சங்க்பரிவார்கள் நடத்திய குண்டுவெடிப்புகள் சமூகங்களை பிளவுப்படுத்தியுள்ளது – சுரேஷ் கெய்ர்னார்

suresh khairnar3
புதுடெல்லி:சங்க்பரிவாரம் நடத்திய குண்டுவெடிப்புகள் முஸ்லிம்களை பாதுகாப்பு அற்றவர்களாகவும், பீதிவயப்படுபவர்களாகவும் மாற்றியது மட்டுமல்ல, சாதாரண ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே ஆபத்தான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது என அகில இந்திய தேசிய மதசார்பற்ற பேரவையின் தேசிய கன்வீனர் டாக்டர்.சுரேஷ் கெய்ர்னார் கூறியுள்ளார்.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?

 மக்களின் பரபரப்பான போராட்டங்கள், மக்கள் போராட்டத்தை ஒடுக்க தேசதுரோகம், ராணுவநடவடிக்கை என்று அரசின் மிரட்டல்கள்,  தினமலரின் தமிழர்விரோத, மக்கள்விரோத பிரசாரங்கள்  என்று நகர்கிறது கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விடயம். கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானதா? இல்லையா?  பார்ப்போம் .விஞ்சான பார்வை: மன்னார் வளைகுடா கடலின் தரைபகுதியில்  70 கிலோமீட்டர் மற்றும் 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு  உடைந்து சரியும் தன்மையைக் கொண்ட வண்டல் குவியல்கள் (slumps) உள்ளன.

மொரோக்கோ தேர்தல்:இஸ்லாமிய கட்சிக்கு வெற்றி


அரசிற்கு கூடுதல் அதிகாரத்தை உறுதிச்செய்யும் புதிய அரசியல் சட்டத்தின் கீழ் மொராக்கோவில் நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சியான ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் பார்டி(பி.ஜெ.டி) பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது. முதல் கட்ட தேர்தல் முடிவுகள் வெளியானபோது 395 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பி.ஜெ.டி 80 இடங்களை கைப்பற்றியுள்ளது. இக்கட்சி அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாகும் என உள்துறை அமைச்சர் தய்யிப் ஷெர்காவி அறிவித்துள்ளார்.

உதவிகள் நிறுத்தினார் கிலானி நேட்டோ படை குண்டு மழை பாக். வீரர்கள் 28 பேர் பலி


இஸ்லாமாபாத்:வடமேற்கு பாகிஸ்தானில் பழங்குடியினர் வாழும் பகுதியில் ராணுவ செக்போஸ்டின் மீது நேட்டோ படை நடத்திய விமானத் தாக்குதலில் 28 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 11 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். மெஹ்மந்த் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸலாலா கிராமத்தில் உள்ள

வன்முறையை தூண்டும் ஹஸாரே: திக்விஜய் சிங்


புதுடெல்லி:அன்னா ஹஸாரே வன்முறையை தூண்டுவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் சீக்கிய இளைஞர் ஒருவரால் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அன்னா ஹஸாரே,’அந்த இளைஞர், சரத்பவாரை ஒரு தடவைதான் அடித்தாரா?

சமூகநீதி மாநாட்டிற்கு உற்சாகமான துவக்கம்!!!

flag hosting
புதுடெல்லி:வரலாற்றின் ராஜபாதையில் புதிய காலடித் தடங்களை பதித்துக்கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டு நாள் மாநாடு திரளான மக்கள் ஆதரவுடன் உற்சாகமாக துவங்கியது.நேற்று காலை 9.30 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் நட்சத்திரம் பதித்த மூவர்ண கொடியை ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். 

வெள்ளி, நவம்பர் 25, 2011

பாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை

பாராசிட்டமால்
தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈராக் கிராமமாக மாறும் சதாம் ஹுசைன் கிராமம்!!!

சதாம் பெயரில் விளையாட்டரங்கு
ஈராக் அதிபர் சதாம் ஹுசைனை நினைவு கூருமுகமாக இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் கிராமம் ஒன்றுக்கு வைக்கப்பட்டிருந்த அவரது பெயரை தற்போது மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ''சதாம் ஹுசைன் கிராமம்'' என்ற அந்த கிராமத்தின் பெயரை,