செவ்வாய், ஜூலை 31, 2012

பர்மா தூதரை வெளியேற்றுங்கள் : குவைத் எம்.பி ஆவேசம் !

குவைத் : பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை அரபு மற்றும் முஸ்லீம்  நாடுகள் தட்டி கேட்க வேண்டும் என்றும் குவைத் அதற்கு முண்ணனியில் நின்று வழிகாட்ட வேண்டும் என்றும் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.
குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் முபாரக் அல் அவ்லான் மியான்மரில் முஸ்லீம்கள் திட்டமிட்ட முறையில் கொல்லப்படுவதாகவும் பர்மாவில் நடக்கிறதே என்று கண்டும் காணாமல்

குஜராத் கலவர வழக்கு - 21 பேருக்கு ஆயுள் தண்டனை . .

 குஜராத் கலவரத்தின் போது தீப்தா தர்வாஜா என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கூட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் ஒருவருக்கு ஒரு ஆண்டுத் தண்டனையும் விதித்து நீதிபதி எஸ்.சி. ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார்.2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று விஸ்நகரின் தீப்தா தர்வாஜா என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  65 வயதுடைய பெண் மற்றும் நான்கு குழந்தைகள் உள்பட 11 பேர்

ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலை தூண்டும் அமெரிக்கா !

US tells Israel it has plans to attack Iranடெல்அவீவ்:ஈரானுடன் வல்லரசு நாடுகள் நடத்தும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் டெஹ்ரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய ராணுவ நடவடிக்கைக் குறித்து அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இஸ்ரேல் பிரதமருடன் விவாதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேல் பத்திரிகையான ஹாரட்ஸ், ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தாமஸ் டோணிலன் இரண்டுவாரம் முன்பு

அஸ்ஸாம் கலவரம்:இந்திய குடிமக்களை வங்காளதேச குடியேற்றக்காரர்களாக சித்தரிக்க முயற்சி! – எஸ்.டி.பி.ஐ

இ.அபூபக்கர்புதுடெல்லி:அஸ்ஸாம், உ.பி மாநிலங்களில் வெடித்து கிளம்பிய கலவரங்கள் குறித்து சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா அதிர்ச்சியையும், கவலையையும் வெளியிட்டுள்ளது. வகுப்புவாத கலவரங்களை குறித்து விசாரணை நடத்த நீதி விசாரணை கமிஷனை நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ தேசியதலைவர் இ.அபூபக்கர் மத்திய அரசுக்கு கோரிக்கை

மோடிக்கு ராம்தேவ் நற்சான்றிதழ் !

Ramdev gives clean chit to Modiஅஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடிக்கு ஹைடெக் ஆன்மீக ஊழல் பேர்வழியான பாபா ராம்தேவ் நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். ஊழல் விவகாரத்தில் மோடி தவறிழைக்கவில்லை என்பது ராம்தேவின் கூற்று. மோடியுடன் இணைந்து விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு ராம்தேவ் கூறியதாவது: ‘எல்லோரும்

தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் : மங்களூர் மாணவிகள் குமுறல்

மங்களூர்: மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது  ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர். மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது

ஹோம்ஸ்டே ரிசார்ட் தாக்குதல்:8 பேர் கைது !

Eight arrested over Mangalore homestay attackமங்களூர்:கலாச்சாரத்தை பாதுகாக்கும் பேர்வழிகளாக காட்டிக்கொண்டு மங்களூர் ஹோம் ஸ்டே ரிசார்டில் மாணவிகளை தாக்கிய வழக்கில் எட்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்கள் நடப்பதாக குற்றம் சாட்டி ஹிந்து ஜாக்ரண் வேதிகா என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை இரவு ஹோம் ஸ்டே ரிசார்டில்

மோடி குஜராத்தின் புலியாம் – காங்கிரஸ் எம்.பி பாராட்டு !

Narendra Modi with Congress MP Vijay Dardaஅஹ்மதாபாத்:கடந்த சில நாட்களாகவே குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கும் செய்திகள் வலம் வருகின்றன. அந்த வரிசையில் தற்பொழுது மஹராஷ்ட்ரா மாநில காங்கிரஸ் எம்.பியும் சேர்ந்துள்ளார். அஹ்மதாபாத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய மஹராஷ்ட்ரா மாநில

திங்கள், ஜூலை 30, 2012

லட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் இந்தியாவின் ஓட்டை உடைசல் ரயில்கள் !

சென்னை: இந்தியா முழுவதும் உள்ள ரயில்களில் முக்கால்வாசி ரயில்களில் அடிப்படை வசதிகள் சிறிதும் இல்லை. குறிப்பாக பகல் நேர ரயில்களில் மகா கொடுமையான சித்திரவதையுடன்தான் பயணிகள் பயணிக்கின்றனர். லட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் வகையில்தான் நமது ரயில்களில் பெரும்பாலானவை உள்ளது என்பது வேதனைக்குரியது

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ: உடல் கருகி 47 பேர் பலி: பலர் காயம் !

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ-உடல் கருகி 47 பேர் பலி -பலர் காயம்நெல்லூர்: சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்பது குறித்து விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கிய ரயில் சனிக்கிழமை இரவு டெல்லியிலிருந்து சென்னைக்குக் கிளம்பியுள்ளது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் வந்தடைந்தது. பின்னர்

ரூ.2500 கோடி நஷ்ட ஈடு வழங்க சாம்சங் நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு !

Apple case filed against Samsungதென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
 தான் உற்பத்தி செய்யும் மாடல்களை சட்டவிரோதமாகப் பின்பற்றி, ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட் கணினிகளை சாம்சங் நிறுவனம் தயாரிப்பதாக ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இதனால் ரூ.2500 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறு

ஒலிம்பிக் - இந்திய அணியுடன் அணிவகுப்பில் கலந்து கொண்ட மர்மப் பெண் !

ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது இந்திய அணியுடன் சென்ற மர்மப் பெண் லண்டனில் வசிக்கும் இந்தியர் என்பது தெரிய வந்துள்ளது. ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய அணி, களத்தில் அணிவகுத்து சென்ற போது கொடி பிடித்துச் சென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாருடன் ஒரு பெண் சீருடை இல்லாமல் சென்றது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கலந்து கொண்ட மற்ற வீராங்கனைகள் மஞ்சள் நிற சீருடை அணிந்து சென்றபோது இந்த பெண் சிகப்பு மற்றும் நீல உடை அணிந்து சென்றார் (படம்). தற்போது இந்தப் பெண்ணைப் பற்றிய விபரம் வெளிவந்துள்ளது. இவர் பெங்களூரைவைச் சார்ந்த மதுரா ஹனி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் லண்டனில்

கலவரம் இந்தியாவுக்கு களங்கம்:பிரதமர் மன்மோகன், துயர்துடைப்பு பணிகளுக்கு ரூ.300 கோடி !

PM Manmohan Singh says Assam violence a blot on the face of nation, announces Rs 300 crore reliefகுவஹாத்தி:அஸ்ஸாமில் வகுப்புவாத கலவரம் தேசத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதற்கு முடிவு கட்டவேண்டும் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். கொக்ராஜர் மாவட்டத்தில் போடோ இனவாத தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரங்கள் நிகழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில்

பிரேசிலில் மிக வேகமாக வளரும் இஸ்லாம் !

Muslim performing prayer in Brazilரியோடி-ஜெனீரா:பிரேசிலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரேசிலின் ரியோடி ஜெனீரா நகரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட பிரேசில் சமூகம் இஸ்லாத்தின் பால் கவரப்படுவதற்கோ, இஸ்லாத்தின்

மியான்மர் முஸ்லிம் இனப்படுகொலை: மெளனம் சாதிக்கும் ஆங் சான் சூகிக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் !

Aung San Suu Kyi facing backlash for refusing to condemn latest Burma abusesயங்கூன்:மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக அரசு ஆதரவுடன் தொடரும் இனப்படுகொலை குறித்து பேசாமல் மெளனம் சாதிக்கும் மியான்மர் எதிர்கட்சி தலைவரும் ஜனநாயக போராட்ட நாயகி என புகழப்பட்டவருமான ஆங் சான் சூகிக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என சூகி கோரிக்கை விடுத்தபோதிலும், ரோஹிங்கியா

ரோஹிங்கியா முஸ்லிம் கூட்டுப் படுகொலை குறித்து விசாரணை தேவை: ஐ.நா !

un-urges-inquiry-over-rohingya-killingsஐ.நா:மேற்கு மியான்மரில் கடலோர மாநிலமான ராக்கேனில் அரசு ஆதரவுடன் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்து விசாரணை தேவை என ஐ.நா மனிதஉரிமை கமிஷன் தெரிவித்துள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை புத்த சமூகத்தினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுப்பதற்காக அப்பகுதிக்கு

மியான்மர் முஸ்லிம்களுக்கான உதவிகளை தடுக்கும் புத்த சாமியார்கள் !

Monks in Myanmarலண்டன்:பர்மாவில் புத்த சாமியார்கள் கூட்டுக் கொலைச் செய்யப்படும் முஸ்லிம்களுக்கு வரும் உதவிகளை தடுப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகையான இண்டிபெண்டண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. புத்த சாமியார்கள் நேரடியாகவே முஸ்லிம் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.மனிதநேயமான எவ்வித முன்னுரிமையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

தானே புயல் நிவாரணத்தில் பெரும் மோசடி !

massive fraud Thane storm relief fund!கடலூர்:கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய தானே புயலில் கடலூர் மாவட்டம் மிகவும் பாதிப்பிற்குள்ளானது. பல்லாயிரக்கணக்கானோர், வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்தனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதியில் பெரும் மோசடி நிகழ்ந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் இருந்து

மோடியை பேட்டியெடுத்த ஷாஹித் சித்தீக்கிற்கு எங்களுடன் எவ்வித தொடர்பும் இல்ல – சமாஜ்வாதி கட்சி !

Narendra Modi interview fallout- Samajwadi Party disowns Shahid Siddiquiலக்னோ:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை பேட்டியெடுத்த உருது பத்திரிகை ஆசிரியர் ஷாஹித் சித்தீகிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அக்கட்சி செய்தி தொடர்பாளர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார். அண்மையில் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ‘நை துனியா’ உருது பத்திரிகைக்கு

மங்களூர் ரிசார்ட் பார்டியில் சங்க்பரிவார் தாக்குதல் !

Hindu Jagarana Vedike raids resort, attack girls in Mangaloreமங்களூர்:3 ஆண்டுகளுக்கு முன்பு மங்களூரில் பப்கள் மீது நடத்திய தாக்குதலைப் போன்றதொரு சம்பவம் மீண்டும் அங்கு அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரின் புறநகர் பகுதியான பாடிலுவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று இரவு மது விருந்து நடந்தது. அதில் அரை குறை ஆடையணிந்த இளம் பெண்களும், வாலிபர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்து நடப்பது பற்றி தகவல் அறிந்த இந்து ஜகரன் வேதிகே

மோடி மனிதநேயத்தின் எதிரி -சமாஜ்வாதிக் கட்சியின் ஆஸம்கான் பேட்டி !

Azam Khanலக்னோ:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியை “நை துனியா” என்ற உருது பத்திரிகையின் ஆசிரியரான ஷாஹித் சித்தீகி பேட்டியெடுத்து வெளியிட்டிருந்தார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முஸ்லிம்களின் வாக்குவங்கியை பெற்று ஆட்சிக்கு வந்துள்ள சமாஜ்வாதிக் கட்சியை சார்ந்த ஒருவர் மோடி போன்ற கொலைக்கார பாவியை பேட்டியெடுத்து முஸ்லிம்களின் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. இதனால் அஞ்சிய சமாஜ்வாதிக்கட்சி, ஷாஹித் சித்தீகி தங்களது கட்சியைச்

குட்டைப் பாவாடை பெண்களுக்கு ஆபத்து – திரிணாமுல் எம்.எல்.ஏ !

Short skirts cause women harassment, says Trinamool MLAகொல்கத்தா:பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது அவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்க காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவும், வங்காள மொழி நடிகருமான சிரஞ்சீத் அகா தீபக் சக்ரவர்த்தி கூறியுள்ளார். தீபக் சக்ரவர்த்தியின் சொந்த தொகுதியில் பெண் ஒருவர் அவமானப்படுத்தப்பட்ட செய்தி வெளியானது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியது: “எனது 24 பர்கானா மாவட்டத்தில் இளம்

வெள்ளி, ஜூலை 27, 2012

மாணவியை பலி வாங்கிய பள்ளிப் பேருந்து: தகுதிச் சான்று வழங்கிய ஆர்.டி.ஓ. சஸ்பெண்ட் !

மாணவியை பலி வாங்கிய பள்ளிப் பேருந்து: தகுதிச் சான்று வழங்கிய ஆர்.டி.ஓ. சஸ்பெண்ட்சென்னை தாம்பரம் அருகே முடிச்சூரில் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக தவறி விழுந்த குழந்தை சுருதி அதே பஸ்சில் அடிபட்டு இறந்தார். இதையடுத்து அந்த பேருந்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டமும் நடத்தினர்.
 தமிழகம் முழுவதும் பரபரப்பை

ஈரான் அணுசக்தி மையத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல்: பின்லாந்து தகவல் !

ஈரான் நாட்டின் அணுசக்தி மைய கம்ப்யூட்டர்கள் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக, பின்லாந்து நாட்டின் "சைபர்' பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 பின்லாந்தை மையமாகக் கொண்டு செயல்படும் "எஃப்- செக்யூர்' நிறுவன, ஆய்வுப் பிரிவுத் தலைவர் மிக்கோ ஹிப்பொனென் கூறியது:
 கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள்

புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

 இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி நேற்று பதவியேற்றார். உடனடியாக நேற்று அவர் ஜனாதிபதி மாளிகையில் குடியேறினார். 340 அறைகள், 200-க்கும் மேற்பட்ட வேலைக்காரர்கள் கொண்ட மாளிகையில் அடுத்த 5 ஆண்டுக்கு அவர் குடியிருப்பார். இந்த நிலையில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி மற்றும் அவரது மனைவி சுவ்ரா முகர்ஜியின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அதில் பிரணாப் முகர்ஜிக்கு ரூ. 1.26 கோடி, சுவ்ரா முகர்ஜிக்கு ரூ. 1.78 கோடி

வேலைக்கு ஆள் வைத்து லஞ்சம் வசூல் செய்த கோவை செக்போஸ்ட் அதிகாரிகள் !

கோவை அருகே, போக்குவரத்துத் துறை செக்போஸ்ட்டில் பணியாற்றும் அதிகாரிகள், தனியாக சம்பளத்துக்கு ஆள் வைத்து லஞ்ச பணம் வசூலித்தது, அம்பலமாகியுள்ளது. கோவை - பாலக்காடு ரோட்டில், திருமலையாம்பாளையம் பிரிவு அருகேயுள்ள ஆர்.டி.ஓ., செக்போஸ்ட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரெய்டு நடத்தினர். அப்போது, பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்

ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்த ஆர்டிஓ அதிகாரி மீ்து இதுவரை நடவடிக்கை இல்லை-மக்கள் கொதிப்பு

 No Action On Rto Officials Who Cleared School சென்னை: சென்னை ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி மிகப் பரிதாபமான சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டை பஸ்சுக்கு ஓட்ட தகுதியானது என்று எப்சி அளித்த வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அரசின் செயல் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில்தான் சமீபத்தில் ஜியோன் பள்ளியின் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு

ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்தது எப்படி?- ஆர்டிஓ அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

 School Girl Death Madras Hc Orders Rto Officials சென்னை: ஓட்டை விழுந்த பள்ளிப் பேருந்துக்கு யார் எப்சி கொடுத்தது, எப்படிக் கொடுக்கப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கோபத்துடன் கேட்டுள்ளது. ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பஸ் ஓட்டை வழியாக விழுந்த பலியான சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. நாளை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் தர

யெமன் மக்கள் தொகையில் 4 இல் ஒருவர் பட்டினியால் வாடும் அவலம் !

Yemen now faces a lack of foodஸன்ஆ:அரசியல் சமூக ஸ்திரத்தன்மையற்ற நிலை நீடிக்கும் யெமனில் 25 சதவீத மக்களும் பட்டினியால் வாடுவதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. அரசியல் பிரிவினர் இடையேயான மோதல்களும், பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக துயரும் யெமன் மக்களுக்கு பட்டினியும் பெரும் சுமையாக

கஷ்மீர்:பாதுகாப்பு படையினரின் அராஜகம்! – துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி !

Protests rock Handwara after killing of youth by Armyஸ்ரீநகர்:கஷ்மீரில் போராளிகளை கைது செய்யப் போகிறோம் என கூறிக்கொண்டு பாதுகாப்பு நடையினர் நடத்திய அடாவடி துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இக்கொலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கஷ்மீரில் பதட்டம் நீடிக்கிறது. ஷ்மீரின் பந்திபோரா மாவட்டம் ஆஸ்டிங்கோ

அஸ்ஸாம் கலவரம்:40 பேர் மரணம் – 2 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர் !

ethnic riots in Assam state killed at least 40கொக்ராஜர்/புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்துவரும் வகுப்புக் கலவரத்தில் மேலும் எட்டுபேர் பலியாகியுள்ளனர். இத்துடன் மரண எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. கலவரத்தில் 2 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.நான்கு மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. வன்முறையாளர்களை கண்டால்

வியாழன், ஜூலை 26, 2012

ரஷ்ய காட்டு பகுதியில் பெட்டி பெட்டியாக சிசுக்குழந்தைகளின் இறந்த உடல்கள் !

ரஷ்யாவின் நியவ்யன்ஸ்க் நகரின் அருகில் பெரிய பேரல்களில் 248 சிசுக்களின் உடல்கள் அடைத்து வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. ரஷ்யாவின் உரல்ஸ் பகுதியை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சில பேரல்கள் கிடப்பது தெரியவந்தது. அவற்றை ஆராய்ந்ததில், இறந்த சிசுக்களின்

வடகொரிய இளம் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு திடீர் திருமணம் !

North Korea' s leader Kim Jong-un is married -வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், திருமணம் செய்து கொண்டு விட்டதாக "டிவி' செய்திகள் தெரிவித்துள்ளன.வடகொரிய அதிபராக இருந்த இரண்டாவது கிம் ஜாங், கடந்த டிசம்பர் மாதம் காலமானார். இதையடுத்து, அவரது மகன் கிம் ஜாங் உன், அதிபராக அறிவிக்கப்பட்டார். மீசை கூட அரும்பாத இளைஞரான கிம் ஜாங் உன், சமீபத்தில் ராணுவ அதிகாரியாக தன்னை அறிவித்து

பிரிட்டன் முதல் ரோம் வரை பாஸ்போர்ட் இல்லாமல், விசாரணையும் இல்லாமல், விமானத்தில் பயணித்த சிறுவன் !

The 11-year-old boy took a Jet2.com flight to Rome from Manchester பிரிட்டனில் காணாமல் போன சிறுவன், பாஸ்போர்ட் இல்லாமல் ரோம் நகருக்கு விமானத்தில் சென்ற போது மீட்கப்பட்டான். பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவன் லியாம் கார்கோரன்,11. நேற்று முன்தினம் தனது தாயுடன் கடைக்கு வந்துள்ளான். பொருட்களை வாங்குவதில் தாய் மும்முரமாக இருந்தபோது, பக்கத்தில் இருந்த மான்செஸ்டர்

சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஆங் சான் சூகி !

நைப்பியித்தௌ: கடந்த புதன்கிழமை (25/07/2012) மியன்மார் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ "சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிகாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தித் தன்னுடைய கன்னி உரையை நிகழ்த்தினார்.
மியன்மாரின் 'மக்களாட்சிக்கான தேசிய லீக்' கட்சித் தலைவரும், 1991 ஆம் ஆண்டில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான சூகீ, இராணுவ அடக்குமுறை ஆட்சியாளர்களால் சுமார் 15 வருடகாலம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
2010 நவம்பர் 13 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட சூ கீ, "மியன்மாரில் வாழும் நிராயுதபாணிகளான சிறுபான்மை மக்களின்

சேதமடைந்த விமானம்.. பயணிகளின் உயிரோடு விளையாடிய ஏர் இந்தியா !

 Did Air India Risk 250 Lives With Damaged Aircraft டெல்லி: நடுவானில் கடும் அதிர்வுக்குள்ளாகி சேதமடைந்த விமானத்தை தொடர்ந்து இயக்கி பயணிகளின் உயிரோடு விளையாடியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.இந்த மாதம் 5ம் தேதி டெல்லியிலிருந்து ஷாங்காய் சென்ற ஏர்பஸ் ரகத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் ஏர்-பாக்கெட் எனப்படும் வெற்றிடத்தில் பறந்தபோது கடும் அதிர்வுக்கு உள்ளானது. இதில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டதோடு

சிரியா:அலப்போவில் போராட்டம் தீவிரம் – சிறையில் கூட்டுப் படுகொலை !

Syria crisis- clashes and prison mutiny in Aleppoடமாஸ்கஸ்:சிரியாவின் நகரமான அலப்போவில் சிரியா அரசு ராணுவத்திற்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. ஸலாஹுத்தீன், ஸூக்காரி ஆகிய பகுதிகளை புரட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றியதாக அரசு ராணுவம் அறிவித்துள்ளது. அலப்போவின் வடக்குப் பகுதியில் உள்ள சிறையில் அரசு ராணுவம் கலவரத்தை தூண்டிவிட்டு பின்னர் எட்டுபேரை சுட்டுக்

இஸ்ரேல் கோரிக்கை நிராகரிப்பு:ஹிஸ்புல்லாஹ்வை கறுப்புப் பட்டியலில் சேர்க்கமாட்டோம் – ஐரோப்பிய யூனியன் !

ப்ரஸ்ஸல்ஸ்:லெபனான் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இஸ்ரேல் விடுத்த கோரிக்கையை ஐரோப்பிய யூனியன் நிராகரித்துவிட்டது.பல்கேரியாவில் கடந்த வாரம் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிஸ்புல்லாஹ்வை தீவிரவாத

ஹிஷாம் கன்தீல் எகிப்தின் புதிய பிரதமர் !

Hesham Qandil as Egypt's new PMகெய்ரோ:ராணுவ அரசு நியமித்த இடைக்கால அரசில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்த ஹிஷாம் கன்தீலிடம் புதிய அரசை உருவாக்க எகிப்து அதிபர் முஹம்மது முர்ஷி உத்தரவிட்டுள்ளார்.பிரதமர் பதவிக்கு கன்தீலை தேர்வுச்செய்த பிறகு அவரிடம் அமைச்சரவையை உருவாக்க முர்ஸி உத்தரவிட்டார். எகிப்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது முர்ஸி 25 தினங்களை பூர்த்திச்

ஆப்கான் போலீஸில் இருந்து 13 பேர் தாலிபான் அணிக்கு தாவினர் !

Some Afghan Police Join Taliban
ஆப்கான்:தாலிபானின் செல்வாக்கு மிகுந்த மாகாணமான ஃபராவில் போலீசார் கூட்டத்தோடு அணி மாறியது ஆஃப்கான் அரசை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.தாலிபான் எதிர்ப்புப் போராட்டம் துவங்கிய பிறகு முதன் முதலாக அதிகமானோர் தாலிபான் அணிக்கு மாறியுள்ளனர். அணி மாறியவர்கள் ஆயுதங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களையும் தங்களுடன்

வான் பகுதியை உபயோகிக்க அமெரிக்க போர் விமானங்களுக்கு ஜப்பான் அனுமதி மறுப்பு !

வான் பகுதியை உபயோகிக்க அமெரிக்க போர் விமானங்களுக்கு ஜப்பான் அனுமதி மறுப்பு!டோக்கியோ:பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து அமெரிக்க போர் விமானங்கள் நாட்டில் பறப்பதற்கு ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது.அமெரிக்க ராணுவத்தின் எம்.வி-22 விமானம் ஜப்பான் வான்பகுதியில் பறக்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. அண்மையில் ஜப்பானில் ஒரு விமானம் நொறுங்கி விழுந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை என பிரதமர் யோஷிஹிகோ நோடா

எடியூரப்பா மீது வழக்கு பதிவுச்செய்ய லோக் ஆயுக்தா நீதிபதி உத்தரவு !

Lokayukta court orders probe against Yeddyurappaபெங்களூர்:நில விடுவிப்பில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் கர்நாடகா மாநில பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர லோக் ஆயுக்தா நீதிபதி உத்தரவிட்டார். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் ராகவேந்திரா ஆகியோர் பத்ராவதியில் உள்ள 69 ஏக்கர் நிலத்தை முறைகேடாக விடுவித்ததாக, வழக்குரைஞர் வினோத் லோக்ஆயுக்தவில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு, நீதிபதி

புதன், ஜூலை 25, 2012

இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் பதவியேற்பு – பாரபட்சமற்ற முறையில் பணியாற்றுவேன் என உறுதி !

Pranab Mukherjee sworn-in as 13th Presidentடெல்லி: நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று பதவி ஏற்றார். அவருக்கு  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, கடந்த 19-ம்  தேதி புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கும், பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்  பி.ஏ.சங்மாவுக்கும் இடையே, இந்த தேர்தலில் நேரடி போட்டி

ஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தில் 10,000 பேருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் கொலை மிரட்டல் !

Kill-threat SMS a fake, authorities sayஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநில மக்களில் பலரது செல்போனில் இன்று வந்த எஸ்.எம்.எஸ் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.  குறிப்பிட்ட ஒரு இ-மெயில் முகவரிக்கு 5,000 டாலர் பணம் அனுப்பாவிட்டால் அவர்களைக் கொல்லப் போவதாக அந்த எஸ்.எம்.எஸ் மிரட்டியது. ‘உங்களைக் கொல்வதற்காக ஒருவர் எனக்கு பணம் கொடுத்துள்ளார். நீங்கள் 48 மணிநேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் எனக்கு 5,000 டாலர் அனுப்பவேண்டும். இதை போலீசிடமோ அல்லது வேறு யாரிடமோ கூறினால்

சட்டத்தை சகட்டுமேனிக்கு மிதிக்கும் மதுரை ஆதீனம், நித்தியானந்தா... கோர்ட்டுக்கு வராமல் முரண்டு . . .

 Madurai Court Orders Aadheenam Nithyanantha Reply மதுரை: மதுரை கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியும் வராமல் முரண்டு பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும். இருவர் மீதும் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு மறுபடியும் அவர்களுக்கு மதுரை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த வக்கீல் மணிவாசகம் மாவட்ட முதன்மை கூடுதல் நீதிமன்றத்தில் ஒரு

நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் பிரணாப் முகர்ஜி

 Pranab Be Sworn Tomorrow டெல்லி: நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி நாளை பொறுப்பேற்க உள்ளார்.நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி நாளை பதவியேற்க உள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா பதவியேற்பு செய்து வைக்கிறார்.இதற்காக நாடாளுமன்ற மைய மண்டபம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர்

கலீஃபா உமர்:தொலைக்காட்சி தொடருக்கு எதிர்ப்பு !

Saudi scholar slams Omar ibn al-Khattab TV seriesகெய்ரோ:2-வது கலீஃபா(ஆட்சியாளர்) உமர் அவர்களைக் குறித்த தொலைக்காட்சி தொடரை ஒளிபரப்ப முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரமலானில் உமர்(ரலி) அவர்களின் வரலாறு தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்ப இருக்கும் வேளையில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நபி(ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் சித்தரிப்பதை இஸ்லாம் தடை

முஸ்லிம்கள் படுகொலை:ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் மக்கள் போராட்டம் !

Palestinian demonstrators protest the killing of Muslims in Burmaகாஸ்ஸா:நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்வதுடன், அவர்களை நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் மியான்மர் அரசை கண்டித்து ஃபலஸ்தீன் காஸ்ஸா மக்கள் போராட்டம் நடத்தினர். காஸ்ஸாவில் நடந்த கண்டனப் பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மியான்மரில் நடப்பது இனப்படுகொலையாகும். உலக சமூகம்

அஸ்ஸாம் பெண் மானபங்கம் – முக்கிய குற்றவாளி வாரணாசியில் சரண் !

Amarjyoti Kalita after his arrest in Varanasiலக்னோ:அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் சமீபத்தில் நிகழ்ந்த பெண் மானபங்கம் வழக்கில் முக்கிய குற்றவாளி வாரணாசி நகரில் கடந்த திங்கள் அன்று சரணடைந்துள்ளான். அமர்ஜோதி கலிட்டா என்பவன் உத்திரபிரதேச மாநில லங்கா காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் வன்புணர்வு குற்றம் தங்கள் எல்லையில் நடைபெறாததால் அவனை கைது செய்யவில்லை என்றும் அவனுடைய புகைப்படம் கவுஹாத்தி காவல் நிலையத்திற்கு

உ.பி.யில் மீண்டும் ஹிந்து தீவிரவாதிகளின் அட்டுழியம் : போலிஸ் துப்பாக்கி சூட்டிற்கு முஸ்லிம் இளைஞர் பலி !

Zari-worker Imran who died of gun shot wounds was buried today in Bareillyபரேலி(உ.பி):பரேலியில் இரு பிரிவினர் இடையே உருவான கலவரத்தில் துப்பாக்கிச்சூட்டில் முஸ்லிம் இளைஞர் பலியானார். மோதலைத் தொடர்ந்து நகரத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வெளியாகும் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்காது என டிவிசனல் கமிஷனர் கே.ராம்மோகன் ராவ் தெரிவித்தார். பரேலி ஷஹ்பாத் பகுதியில் ரமலான் நோன்பு திறக்கும் வேளையில் ஹிந்து மதத்தின்

செவ்வாய், ஜூலை 24, 2012

நோன்பை நோற்றபடியே இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த ஹஷிம் ஆம்லா !


 லண்டன் -  தென் ஆஃப்ரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்று வரும் முதல் ஐநாள் மட்டைப் பந்தாட்டத்தில் தென் ஆஃப்ரிக்காவின்  ஹாஷிம் அம்லா 311 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்துள்ளார். தென் ஆஃப்ரிக்க வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையை இதன்மூலம் அவர் சாதித்துள்ளார். மேலும் 300 ஓட்டங்கள் குவித்த முதல் தென் ஆஃப்ரிக்கராகவும் அவர் திகழ்கிறார். 
இதற்கு முன்பு அந்த அணியின் டி வில்லியர்ஸ் எடுத்த 278 ஓட்டங்களே அந்த அணியின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாக

திங்கள், ஜூலை 23, 2012

இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது புத்திசாலி ஜனாதிபதி... உலக மீடியாக்கள் புகழாரம் !

வாஷிங்டன்: இந்திய குடியரசுத் தலைவராக புத்திக்கூர்மை படைத்த பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று உலக மீடியாக்கள் பிரணாப் முகர்ஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளன. இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் குறித்து நம்மூர் மீடியாக்களைப் போலவே உலக மீடியாக்களும் ஆவலுடன் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் கூறுகையில், மிகவும்