திங்கள், ஜூலை 23, 2012

துனீஸ் ஏர் விமானத்தில் மது விநியோகம் தற்காலிக நிறுத்தம் !

துனீஸ்:விமான பயணிகளுக்கு பயணத்தின் போது விற்கும் மதுபான விநியோகத்தை ரமலானை முன்னிட்டு நிறுத்தியுள்ளதாக துனீஸ் ஏர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. ரமலானில் மேற்கொள்ளப்படும் அனைத்து பயணங்களிலும் மது உள்ளிட்ட ஆல்கஹால் பொருட்கள் விநியோகிப்பதை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸைனுல் ஆபிதீன் பின் அலியின் சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்ட பிறகு
துனீசியா வீதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ரமலான் மாதத்தில் தலைநகரில் பகல் வேளைகளில் பெரும்பாலும் அனைத்து ஹோட்டல்களும், டீ கடைகளும் மூடப்பட்டுள்ளன. முந்தைய வருடத்தை விட இவ்வாண்டு மூடப்பட்டுள்ள கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக