வியாழன், ஜூலை 19, 2012

ஆப்கானில் 22 நேட்டோ ட்ரக்குகள் குண்டுவீசி அழிப்பு !

22 NATO supply trucks destroyed in Afghanistanகாபூல்:ஆப்கானிஸ்தானில் சமர்கன் மாகாணத்தில் நேட்டோ ராணுவத்தினருக்காக எரிபொருளுடன் சென்று கொண்டிருந்த 22 ட்ரக்குகளை தாலிபான் போராளிகள் குண்டுவீசி தகர்த்தனர். நேற்று காலை ரபாடாக் பகுதியில் பார்க்கிங் பகுதியில் ட்ரக்குகள் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் குண்டுவீச்சு தாக்குதல் நடந்தது. குண்டுவெடிப்பை தொடர்ந்து வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததாக போலீஸ்
தெரிவித்தது. அண்டை நாடான உஸ்பெஸ்கிஸ்தானில் இருந்து எரிபொருளை நிரப்பிவிட்டு வந்துகொண்டிருந்த ட்ரக்குகள் மீதுதான் வெடிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் அதிகாலையில் நடந்துள்ளதால் எவரும் உயிரிழக்கவோ, காயமோ அடையவில்லை என்று போலீஸ் கூறுகிறது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ட்ரக்குகள் தீப்பற்றி எரிந்து, வெடித்து சிதறியதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். தாக்குதலுக்கான பொறுப்பை தாலிபான் போராளிகள் ஏற்றுக்கொண்டனர்.
வர்டக் மாகாணத்தில் ஸய்யித் அபாதில் கடந்த வாரம் தாலிபான் போராளிகள் நேட்டோவின் 12 எரிபொருள் ட்ரக்குகளுக்கு தீவைத்தனர். இதனைத்தொடர்ந்து ஓட்டுநர் கொல்லப்பட்டார். நான்கு ராணுவத்தினர் காயமடைந்தனர்.
நேட்டோவுக்கு பாகிஸ்தான் சரக்கு பாதையை திறந்துவிட்ட பிறகு இப்பிராந்தியத்தில் நடைபெறும் முதல் தாக்குதல் இதுவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக