வியாழன், ஜூலை 19, 2012

ஹமீதா குதுப் மரணம் . . .

ஹமீதா குதுப்பாரிஸ்:ஷஹீத் செய்யத் குதுபின் சகோதரியும் பிரபல முஸ்லிம் பெண் மார்க்க அறிஞருமான ஹமீதா குதுப் மரணமடைந்தார். அவருக்கு வயது75. பிரான்சு தலைநகர் பாரிஸில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. பாரிஸில் முஸ்லிம் பெண்களுக்காக மார்க்க உரை நிகழ்த்த வந்த வேளையில் அவரது மரணம் நிகழ்ந்தது. இஃவானுல் முஸ்லிமீனுக்கும், எகிப்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து 25 -வது வயதில் ஹமீதா குதுபிற்கு  1965-ஆம்
ஆண்டு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
ஷஹீத் செய்யத் குதுபிடமிருந்து தகவலை பெற்று ஸைனபுல் கஸ்ஸாலியிடம் அளித்தார் என்பது குற்றச்சாட்டு.
பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான டாக்டர். ஹம்தி மஸ்வூத் கணவர் ஆவார். தனது கணவருடன் பாரிஸில் வசித்து வந்தார் ஹமீதா குதுப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக