அப்படி வாங்கப்பட்ட பேருந்தில் இருந்த பெரிய ஓட்டை வழியாகத்தான் ஸ்ருதி கீழே விழுந்து உயிரை விட்டுள்ளாள். இப்படிப்பட்ட ஓட்டை பஸ்சுக்கு எப்படி ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி கொடுத்தார்கள் என்று மக்கள் கேட்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எப்சி போட்டுக் கொடுத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எதுவும் பாயவில்லை.
இது மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏன் போலீஸார் இந்த விவகாரத்தில் ஆர்டிஓ அலுவலகம் மீது பாராமுகமாக உள்ளனர் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் இதுவரை பள்ளியின் பிற வாகனங்கள் தகுதியுடன் இருக்கிறதா என்பதை அவற்றை போலீஸார் பறிமுதல் செய்யாமல் இருக்கின்றனர். அத்தனை வாகனங்களும் பத்திரமாக பள்ளி வளாகங்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதுவும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோன் பள்ளியின் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து அவை அனைத்தும் ஓட்டத் தகுதியான நிலையில்தான் உள்ளனவா, ஓட்டை உடைசல் உள்ளனவா என்பது குறித்து முழுமையான ஆய்வு செய்ய வேண்டும். அது முடியும் வரை அந்த வாகனங்களை இயக்கத் தடை விதிக்க வேண்டும் என்று அப்பாவி பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக