வெள்ளி, ஜூலை 20, 2012

சிரியா உள்நாட்டு போர்: எல்லை பகுதிகளை புரட்சிபடை பிடித்தது !

சிரியா உள்நாட்டு போர்: எல்லை பகுதிகளை புரட்சிபடை பிடித்ததுசிரியா நாட்டில் அதிபர் பசார் அல் ஆசாத் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக புரட்சிப்படையினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். ஒரு ஆண்டு காலமாக போராட்டம் நீடித்து வருகிறது.போராட்டத்தை ஒடுக்க பசார் அல் ஆசாத் ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். அவர்கள் போராட்டக்காரர்களை சரமாரியாக சுட்டு கொன்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த நாட்டு ராணுவ மந்திரி தாவீத்ராஜா உள்பட 5 ராணுவ உயர் அதிகாரிகள் குண்டு வைத்து கொல்லப்பட்டனர்.
 
இதைத்தொடர்ந்து ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அவர்களை எதிர்த்து புரட்சிப்படையினரும் தாக்கி வருகிறார்கள். புரட்சிப்படையில் சில பிரிவினர் துருக்கி மற்றும் ஈராக் பகுதிகளில் பதுங்கி இருந்து தாக்கினார்கள். அவர்கள் சிரியாவில் எல்லையோர பகுதிகள் பலவற்றை இப்போது கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு நிலமை மோசமடைந்து வருகிறது.
 
துருக்கி எல்லை பகுதியில் பெரும் பகுதி புரட்சி படையிடம் வந்துவிட்டதாக புரட்சிப்படை தளபதிகள் அறிவித்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து சிரியாவின் உள்பகுதியை நோக்கி முன்னேறி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க கூடுதல் ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே சிரியாவில் பெரிய அளவில் மோதல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக