திங்கள், ஜூலை 30, 2012

மோடியை பேட்டியெடுத்த ஷாஹித் சித்தீக்கிற்கு எங்களுடன் எவ்வித தொடர்பும் இல்ல – சமாஜ்வாதி கட்சி !

Narendra Modi interview fallout- Samajwadi Party disowns Shahid Siddiquiலக்னோ:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை பேட்டியெடுத்த உருது பத்திரிகை ஆசிரியர் ஷாஹித் சித்தீகிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அக்கட்சி செய்தி தொடர்பாளர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார். அண்மையில் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ‘நை துனியா’ உருது பத்திரிகைக்கு
அளித்த பேட்டியில், “கோத்ராவில் ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின்னர் நிகழ்ந்த, வன்முறையில் தான் குற்றவாளி அல்ல. எனவே அதற்காக மன்னிப்புக் கோர முடியாது. குற்றவாளி என நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் போடுங்கள்’ என்று தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்பேட்டியை எடுத்த ‘நை துனியா’ ஆசிரியர் ஷாஹித் சித்தீக், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் என தகவல் வெளியானது. ஆனால், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராம் கோபால் யாதவ் இதனை மறுத்துள்ளார்.
அவர் கூறியது: “ஷாஹித் சித்தீகி, சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீண்டகாலத்துக்கு முன்பே விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து விட்டார். அக்கட்சி சார்பில்தான் மக்களவைத் தேர்தலில் பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் அங்கிருந்தும் விலகி, ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியில் இணைந்து விட்டார். அவரை சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறுவது முற்றிலும் தவறானது. மோடியுடன் இணைவதற்கு சித்திக் விரும்பியிருக்கலாம்” என்றார் ராம் கோபால் யாதவ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக