வியாழன், ஜூலை 26, 2012

வான் பகுதியை உபயோகிக்க அமெரிக்க போர் விமானங்களுக்கு ஜப்பான் அனுமதி மறுப்பு !

வான் பகுதியை உபயோகிக்க அமெரிக்க போர் விமானங்களுக்கு ஜப்பான் அனுமதி மறுப்பு!டோக்கியோ:பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து அமெரிக்க போர் விமானங்கள் நாட்டில் பறப்பதற்கு ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது.அமெரிக்க ராணுவத்தின் எம்.வி-22 விமானம் ஜப்பான் வான்பகுதியில் பறக்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. அண்மையில் ஜப்பானில் ஒரு விமானம் நொறுங்கி விழுந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை என பிரதமர் யோஷிஹிகோ நோடா
தெரிவித்துள்ளார்.
விமானத்தின் பாதுகாப்பு தொடர்பாக விசாரணை பூர்த்தியாகும் வரை இந்த தடை நீடிக்கும். ஜப்பானில் ஓகினாவா தீவில் அமெரிக்காவின் விமான தளத்தில் எம்.வி-22 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மற்றும் ஜுன் மாதங்களில் அமெரிக்க விமானங்கள் ஜப்பானில் நொறுங்கி விழுந்தன. இச்சம்பவம் ஜப்பான் அரசுக்கு எதிராக மக்களின் எதிர்ப்பு வலுக்க காரணமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக